சித்திரதுர்க நாயக்கர்கள்

சித்திரதுர்க நாயக்க அரசு [1]
அலுவல் மொழி கன்னடம்
தலைநகரம் சித்திரதுர்கம்
ஆட்சி முறை முடியாட்சி
முந்தைய அரசு விசயநகரப் பேரரசு
பிந்தைய அரசு மைசூர் அரசு

சித்திரதுர்க நாயக்கர்கள் (Nayakas of Chitradurga) (கி பி 1588–1779 ) துவக்கத்தில் விசயநகரப் பேரரசிலும், போசாளப் பேரரசிலும் படையணித் தலைவர்களாக பணிபுரிந்தவர்கள்.

மதகாரி நாயக்க தலைவரின் சிலை

விசயநகரப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர் சித்திரதுர்கம் நகரை தலைநகராகக் கொண்டு கர்நாடகத்தின் கிழக்கு பகுதிகளை ஆட்சி புரிந்தவர்கள். [2]

பின்னர் மைசூர் அரசு, முகலாயப் பேரரசு மற்றும் மராத்தியப் பேரரசுக்களுக்கு அடங்கி கப்பம் செலுத்தும் சிற்றரசர்களாக சித்திரதுர்கம் நாட்டை ஆண்டனர். திம்மன்ன நாயக்கர் என்பவரால் சித்திரதுர்க நாயக்க அரசு நிறுவப்பட்டது. [3]

சித்திரதுர்க்கத்தின் ஐந்தாம் மதகாரி நாயக்கர் (1758–1779), மைசூரின் ஐதர் அலியால் வெல்லப்பட்டதால், சித்திரதுர்க நாடு மைசூர் அரசுடன் இணைக்கப்பட்டது.

சித்ரதுர்க நாயக்கர்கள் தொகு

 1. திம்மன்ன நாயக்கர் (?–1588)
 2. ஒப்பன்ன நாயக்கர் I (1588 -1602)
 3. கஸ்தூரி ரங்கப்ப நாயக்கர் I (1602–1652)
 4. மதகாரி நாயக்கர் II (1652–1674)
 5. ஒப்பன்ன நாயக்கர் II (1674–1675)
 6. சூர கந்த நாயக்கர் (1675–1676)
 7. சிக்கன்ன நாயக்கர் (1676–1686)
 8. மதகரி நாயக்கர் III (1686–1688)
 9. தொன்னே ரங்கப்ப நாயக்கர் (1688–1689)
 10. பிலிச்சோடு பரமப்பா நாயக்கர் (1689–1721)
 11. மதகாரி நாயக்கர் IV (1721–1748)
 12. கஸ்தூரி நாயக்கர் II (1748–1758)
 13. மதகாரி நாயக்கர் V (1758–1779)

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

 1. http://barry-lewis.com/research/chitradurga/chitradurga-2/
 2. http://barry-lewis.com/research/chitradurga/ Barry Lewis]
 3. According to Suryanath Kamat, Timmappa Nayaka the founder of the kingdom was from Davangere in Karnataka