போயர்(Boyar) அல்லது போய நாயுடு என்று அழைக்கப்படுவோர் இந்தியாவில் உள்ள ஒரு சாதிப் பிரிவினர் ஆவர். 1909இல், சென்னை மாகாணத்திற்காக மக்கள் தொகைக் கணக்குகளை ஆய்வு செய்த எட்கர் துர்ச்டன், அரசுக்கு சமர்ப்பித்த அறிக்கையில், நாயுடு என்ற அடைமொழியை பயன்படுத்திய சாதியினர் பலிஜா, பேஸ்த, போயர், எக்காரி, கவரா, கொல்ல, கலிங்கி, காப்பு, முத்துராஜா ஆகியோர் எனக் கூறியுள்ளார். மேலும் துர்ஸ்டன் நாயுடு தமிழில் நாயக்கர் அல்லது நாயக்கன் என்றழைக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.[1]

போயர்
வகைப்பாடுபிற பிற்படுத்தப்பட்டோர்
மதங்கள்இந்து
மொழிகள்தமிழ், தெலுங்கு
நாடுஇந்தியா
பரவலாக வாழும் மாநிலங்கள்தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கருநாடகம், கேரளா மற்றும் இந்தியாவின் வடக்கு மாநிலங்கள்

பெயர்க் காரணம்

ஆங்கில போயர் (Bhoyar) எனும் வார்த்தை போயர் (Bhoir) எனும் வார்த்தைக்கு சமமானது, இவர்களின் மேன்மை பொருந்திய பிற பெயர்கள் மகாஜன் (Mahajan), படேல் (Patel) எனவும் இது ராஜபுத்திரர்கள் வழி வந்த பன்வர் (Panwar) எனப்படும் சாதியிலிருந்து வந்த துணை சாதி பிரிவுகளாகும். போயர் (Bhoyar) என்பது (Bhor) என்று பொருள்படும் (Bhor) என்றால் சூரிய விடியல் என்று தமிழில் மொழிபெயர்க்கலாம் மற்றும் சூரிய குலம் என்றும் பொருள்படும்.[சான்று தேவை] கருநாடகாவில் பேடர் என்றும் வால்மீகி நாயக்கா என்றும் அழைப்பர். மேலும் தென் இந்தியாவில் போய டோரா எனும் வார்த்தை மருவி போயடுறு ஆக உருமாறி இறுதியில் போய எனும் சொல் வேடர்களை குறிக்க நிலைத்துவிட்டது.[சான்று தேவை]

போயர்கள், நாய்டு அல்லது நாயுடு, நாயக், டோரா (ராஜா), டோரா பிட்டா (ராஜபுத்திரர்கள்) மற்றும் வால்மீகி என்று அழைக்கபடுவர்.[சான்று தேவை] இதை எட்கர் தர்ஸ்டன் என்பவர் சென்னை மாகாணத்திற்கான மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் போது, அரசுக்கு அறிக்கை அளித்த பொழுது பின்வருமாறு கூறியுள்ளார். The titles of the Boyas are said to be Naidu or Nayudu, Naik, Dora, Dorabidda (children of chieftains), and Valmiki.[2]

போய அல்லது போயர்கள் எனும் சொல் உயர்ந்த ராஜவம்சத்தை குறிக்கும் சொல்லாக கருதப்பட்டுவந்தது. இதனை சித்ரதுர்கா போய நாயக்கர்களின் வரலற்று சுவடுகளின் மூலம் அறியமுடிகின்றது.[சான்று தேவை]

வரலாறு

திராவிட வம்சாவளியினரான போயர்கள் கி. பி. ஐந்தாம் நூற்றாண்டுகளில் ஒரிசா, ஆந்திர இடைப்பட்ட பகுதிகளிலிருந்து வந்தவர்களாவர். இவர்கள் இந்து மதத்தினை சார்ந்தவர்கள் மற்றும் தெலுங்கை தாய் மொழியாய் கொண்ட இவர்கள் தற்பொழுது இவர்கள் தென் இந்தியாவில் அதிகமாக வசித்து வருகின்றனர். போயர்கள் கி. பி. பத்தாம் நூற்றாண்டு முதல் கி.பி. பதினைந்தாம் நூற்றாண்டுவரை சாளுக்கிய, சோழ, விஜயநகர மற்றும் ஹோய்சால மன்னர்களின் சாம்ராஜ்யத்தில் பணிபுரிந்தவர்களாவர்.

ஆந்திரப்பிரதேச காக்கத்தியர் பேரரசில் போய மற்றும் கம்மா சத்திரியர்கள் முசுனுரி நாயக்கர்களாக அரசாட்சி புரிந்துவந்தனர். தில்லி சுல்தான்களின் இருந்து 1326 - ஆம் ஆண்டில் மீட்கபட்ட பின்னர், கிங் பிரதாப ருத்ரா அரசவையில் எழுபத்தைந்து நாயக்கர்களாக போயர், வேலாம, கம்மா, ரெட்டி, தெலுகா, மற்றும் பலிஜா போன்ற வேளாண்மை சார்ந்த சாதிகளுக்கும் நாயக்கர்களாக இருந்து ஆட்சிபுரிந்தனர். பின்னர் 17 - ஆம் நூற்றாண்டில், நாயக்கர்களின் பரஸ்பர பொறாமை மற்றும் போட்டி பிரிந்திருக்க அவசிமாயிற்று, ஆகையால் போயர்கள் (Boyars /Bedars), பின்வரும் தொழில்களை செய்து தங்களை பொருளாதார சூழல்களுக்கு தக்கவாறு மாற்றிகொண்டனர். அத்தொழில்கள் பின்வருமாறு:- கொல்லர்கள், சிற்பிகள், மேன்மக்கள், தலைவர்கள், துறவிகள் , நில உரிமையாளர்கள், கோவில் சிற்பிகள், கை வர்த்தகர்கள், மற்றும் கடல் வழி தொழில்கள் செய்பவர்கள் என தங்களை வேறுபடுத்தி பல்வேறு பிரிவுகளாக பிரிந்தனர்.[3]

கர்நாடக வரலாற்றில், வேட (போய) இன மக்களை வால்மீகி மக்கள் நாயகன், பேட, தலைவர என அழைக்கப்பட்டனர். சித்ரதுர்கா, சுர்பூர், கேளடி, போன்ற இடங்களை கர்நாடகா வால்மீகி சமுகத்தை சேர்தவர்களால் ஆட்சி செய்யப்பட்டு வந்ததை வரலாற்று சுவடுகளின் மூலம் இன்றும் காணலாம். இந்த மக்கள், வால்மீகி (Valmikis) என்றும் அழைக்கப்படுகின்றனர், பேட (போய / அதாவது ஹண்டர்ஸ்), தளவர் (அதாவது பூர்வீக குடிகள்) கடந்த காலங்களில் நாயக்கர் சமூகமாக இருந்து சிறந்த ஆட்சி நிர்வாகத்தினை அளித்துள்ளது சிறப்பான ஒன்றாகும், தற்போது பேட (போய) மற்றும் தளவர் சமூகங்கள் நாயக்கர்களின் அடையாளங்களாக உள்ளன.

விஜயநகர பேரரசு (கி.பி.1300), சித்ரதுர்கா(Chitradurga) பகுதியில் "Nayakas" என்று சிற்றரசர்களால் நிர்வகிக்கப்பட்டு வந்துள்ளது. போய தளபதி திம்மன்ன நாயக்கன் திறமைகளை பாராட்டி அவரின் சாதனைகளுக்காக தனது சிறந்த பரிசாக விஜயநகர பேரரசின் கீழ் இருந்த சித்ரதுர்கா அரசாட்சியினை போய திம்மன்ன நாயக்கருக்கு அளிக்கப்பட்டது. அதன்பின் சித்ரதுர்கா கோட்டை கி.பி.1562-ஆம் ஆண்டு முதல் 1565-ஆம் ஆண்டு வரை கட்டப்பட்டது, விஜயநகர நகரம் வீழ்ச்சிக்கு பிறகு, தங்கள் சுதந்திரத்தை போய நாயக்கர்கள் பிரகடனம் செய்தனர். சித்ரதுர்கா போய குடும்பம் மற்றும் பெரும்பாலான மற்ற மைய கர்நாடகா நாயக்கர்களின் எச்சங்களை தங்கள் ஆட்சியின் கீழ் கொண்டுவந்தனர். பின்னாட்களில் சித்ரதுர்கா (Chitradurga) போயர்களின் தலைநகரானது, கி.பி. பதினேழாம் நூற்றாண்டிலிருந்து பதினெட்டாம் நூற்றாண்டு இறுதிவரை ஆட்சிபுரிந்து வந்தனர். இறுதியாக 1799-ஆம் ஆண்டில் ஹைதர் அலி வசமானது, பின் நாட்களில் பிரிட்டிஷாரின் சாம்ராஜ்யத்தில் இணைக்கப்பட்டுவிட்டது.[4][5]

போய மக்கள் பூர்வீக குடிகள் என்று ராஜஸ்தான் மாநில, பாலி மாவட்டத்தில் உள்ள போய கிராம வரலாற்றுச்சுவடுகள் கூறுகின்றன, மேலும் அவர்கள் மேல்குடிமக்களான, ராஜபுத்திரர்கள் என்றும் கூறுகின்றன.[6]

முக்கியமான அரசியல் மற்றும் வரலாற்று நிகழ்வுகள்

ஒரிசா தேசத்தினை சூரிய குலமான (Solar Race ) கங்கவார் பேரரசு (Imperial Gangas) கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு முதல் கி.பி. பதினாறாம் நூற்றாண்டுவரை பல்வேறு பெயர்களை உடைய சூரியகுல ராஜவம்சத்தினர் ஆண்டுவந்துள்ளனர், கி.பி.1519 ஆகஸ்ட் மாதத்தில் ஒரிசா தேசத்தினை ஆண்டுவந்த சூரிய வம்ச அரசரான பிரதாப ருத்ர தேவா (Pradapa Rudra Deva) அவர்களை விஜயநகர அரசரான கிருஷ்ண தேவராயர் (Krishna Deva Rayar) சூரிய குல வம்சாவளியான போரில் வெற்றிகொண்டு சூரிய வம்ச அரசரான பிரதாப ருத்ர தேவா (Pradapa Rudra Deva) அவர்களின் புதல்வியான ஜகன்மோகினி (Jaganmohini ) அவர்களை திருமணம் புரிந்தார்.[7][8][9]

குறிப்பிடத்தக்க போய நாயக்கர்கள்

கண்ணப்ப நாயனார் எனும் போய தின்னடு ஒரு வேட குடும்பத்தில் பிறந்தார். அந்த இடம், கோவில் நகரமாம் திரு காளகஸ்தியில் (ஆந்திர பிரதேசம்) உள்ளது. அவர் ஸ்ரீ காளஹஸ்தியில் உள்ள ஸ்ரீபுரம் மற்றும் மும்மிடி சோழபுரம் மலைப்பாங்கான வனபகுதியில் வேட்டையாடுவதை தொழிலாக கொண்டிருந்தவர். இவர் சிவபுராணத்தில் சிறந்த சிவனடியாராக விளங்கியவர், மேலும் அறுபத்தி மூன்று நாயன்மார்களில் ஒருவராக அறியப்பட்டவர், இறைவன் சிவபிரானுக்கே தனது கண்களையே அம்பால் கொய்து சிவபிரானுக்கு அளித்தவர், அதனால் சிவபிரானின் அன்பிற்குப் பாத்திரமாகி பெரும்பேறு பெற்றவரானார்.[10][11][12]

போய நாயக்கர்களின் கோவில்கள்

ஸ்ரீ பூரி ஜெகநாதர் ஆலயம்

ஸ்ரீ பூரி ஜெகநாதர் ஆலயம் கி.பி. 16 - ஆம் நூற்றாண்டிலிருந்து இன்றுவரை பரம்பரை பரம்பரையாக சத்ரிய வம்சமான சாளுக்கிய மன்னர்கள் வழி தோன்றலாகிய போய அரச வம்சாவளி மக்களால் நிருவகிக்கப்பட்டு வருகின்றது.[13][14]

ஸ்ரீ போய கங்கம்மா கோவில்

பல நூற்றாண்டுகளாக பழங்குடியினரான போயர்கள் (போயாஸ்) மற்றும் யாழிகாஸ் (எளிகஸ்) ஒரு சிறுகுன்றினைச் சுற்றி காட்டுப் பகுதியில் வசித்து வந்தார்கள். அந்த பகுதிகளில் நவாப்புகளின் அடக்குமுறை மீது சீற்றம் கொண்டிருந்தனர். ஒரு நல்ல சந்தர்ப்பத்தில் போய பழங்குடிகள் நவாப்பின் வீரர்களை அந்த சாம்ராஜ்யத்திலிருந்து விரட்டி அடித்தனர், அது அந்த மலையில் இருந்த அம்மன் ஸ்ரீ சக்தி தேவியின் கருணையால் என நினைத்து இன்றளவும் ஸ்ரீ சக்தி தேவியினை போய மலை கங்கம்மா என அழைத்து வழிபட்டு வருகின்றனர், இந்த தலம் திருப்பதி மலையருகில் சில கிலோமீட்டர் துரத்தில் உள்ளது. வருடத்திற்கு ஒருமுறை வரும் நவராத்திரி காலங்களில் திருவிழா எடுப்பர், அந்த சமயத்தில் இந்தியா முழுவதிலும் இருந்து இலட்சக்கணக்கான மக்கள் ஸ்ரீ கங்கம்மா தேவியினை தரிசிக்க வருகை புரிவர், இக்கோவில் 1990 ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேச அறக்கட்டளை துறையினரால் எடுத்துக்கொள்ளப்பட்டது.[15]

ஸ்ரீ சென்னகேசவ கோவில்

ஆந்திரப்பிரதேசத்தில் உள்ள அனந்தபூர் மாவட்டத்தில் கடவகல்லு புத்தூர் மண்டல் எனும் ஊரிலுள்ள சென்னகேசவ கோவில் போய பாளையக்காரர்களான (Palegar / Palayakarar = Local Kings ) மேசா திம்மன்ன நாயுடு அவர்களால் 16 - ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளது, தற்பொழுது ஆந்திரபிரதேச அரசால் பராமரிக்கப்பட்டு வருகின்றது.[16]

கோவில்களில் போய நாயக்கர்களின் பங்கு

கோவில்களில் போய நாயக்கர்களின் பங்கு அளவிடமுடியாதது, கோவில்களுக்கான அதிகமான திருப்பணிகளை செய்துவந்துள்ளது வரலற்றுச்சுவடுகளின் மூலமாக அறியமுடிகின்றது.[17]

இன்றைய நிலை

போயர்களை மத்திய அரசு பிற பிற்படுத்தப்பட்டோர் பட்டியலிலும், ஆந்திரப்பிரதேசத்தில் பின்தங்கிய சமூக வகுபினராக ஏ பட்டியலிலும் அறிவித்துள்ளனர், மற்றும் தமிழகத்தில் போயர்கள் (Boya, Boyas, Boyer / Boyar) எனக் குறிப்பிட்டு பிற்பட்ட மற்றும் மிகவும்பிற்பட்ட பட்டியலில் உள்ளனர்.[18][19][20]

இன்றைய நிலையில் குறிப்பிடத்தக்கவர்கள்

 1. கள்ளிப்பட்டி. சு. குப்புசாமி - எழுத்தாளர், நல்லாசிரியர்.

மேற்கோள்கள்

 1. Thurston, Edgar; Rangachari, K. (1909). Castes and Tribes of Southern India. V (M to P). Madras: Government Press. பக். 138. http://www.archive.org/details/castestribesofso05thuriala. பார்த்த நாள்: 2012-03-24. 
 2. Thurston, Edgar; Rangachari, K. (1909). Castes and Tribes of Southern India. I (A to B). Madras: Government Press. பக். 187. http://archive.org/details/castestribesofso01thuriala. பார்த்த நாள்: 2012-10-11. 
 3. "Boya of India". PO Box38301, Colorado Springs, CO 80937: Accelerating International Mission Strategies (2012). பார்த்த நாள் 2012-10-15.
 4. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; Valmiki Research Centre என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
 5. " Chitradurga: A Nayaka Period Successor State in South India". Urbana, IL 61801: Barry Lewis & C.S.Patil (2010). பார்த்த நாள் 2012-10-12.
 6. "Boya village,Pali District, Rajastan". Rajasthan: wikiedit.org (2011). பார்த்த நாள் 2012-10-12.
 7. INDIA, Government of Odisha (2005). Ancient Orissa: Rule of Kings. 1. Odisha: Government Press. பக். 1. http://www.orissa.oriyaonline.com/ancient_orissa.html?page=show. பார்த்த நாள்: 2012-10-22. 
 8. INDIA, Government of Odisha (2005). Detail History of Orissa. 1. Odisha: Government Press. பக். 1. http://www.orissa.gov.in/history1.htm. பார்த்த நாள்: 2012-10-22. 
 9. INDIA, Government of Odisha (2005). Glorious History of Orissa. 1. Odisha: Government Press. பக். 1. http://orissadiary.com/orissa_profile/orissahistory.asp. பார்த்த நாள்: 2012-10-22. 
 10. "THE GREAT WARRIOR TRIBES OF MUDIRAJA – MUTHURAJA" (2008). பார்த்த நாள் 2012-10-12.
 11. "Kannappa Nayanar" (2012). பார்த்த நாள் 2012-10-12.
 12. "kaNNappa nAyanAr" (2012). பார்த்த நாள் 2012-10-12.
 13. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; orissa.gov.in என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
 14. British, British Govt. (2011). British Governors-General in India / East India Company. 1. Odisha: Government Press. பக். 1. http://www.historyfiles.co.uk/KingListsFarEast/IndiaStates.htm. பார்த்த நாள்: 2012-10-22. 
 15. "Sri Boya Konda Gangamma Temple" (2012). பார்த்த நாள் 2012-10-12.
 16. "Chenakesava temple,Kadavakallu puthur mandal, Anandpur, AP." (2012). பார்த்த நாள் 2012-10-15.
 17. "South Indian Inscriptions" (2007). பார்த்த நாள் 2012-10-12.
 18. ANDHRA PRADESH LIST OF SOCIALLY AND EDUCATIONALLY BACKWARD CLASSES, BACKWARD COMMUNITIES GROUP-A (2009). Castes and Tribes of Southern India. html. Andhra Pradesh: Government Press. பக். 1. http://www.aponline.gov.in/apportal/departments/departments.asp?dep=03&org=111. பார்த்த நாள்: 2012-10-10. 
 19. ANDHRA PRADESH LIST OF SOCIALLY AND EDUCATIONALLY BACKWARD CLASSES, OBC. CENTRAL LIST OF OBCs FOR THE STATE OF ANDHRA PRADESH. pdf. Andhra Pradesh: Government Press. பக். 2. http://www.ncbc.nic.in/Pdf/andhrapradesh.pdf. பார்த்த நாள்: 2012-10-10. 
 20. MBC CLASSES, BC. TAMILNADU STATE BC LIST. html. Tamil Nadu: Government Press. பக். 1. http://www.tn.gov.in/bcmbcmw/bclist.htm. பார்த்த நாள்: 2012-10-10. 

குறிப்புகள்

 1. Edgar; Rangachari, K. (1909). Castes and Tribes of Southern India. I to VII Volumes. Madras: Government Press. Retrieved 2012-09-27.
 2. Chitradurga: Spatial Patterns ofa Nayaka Period Successor State in South India, by BARRY LEWIS AND C. S. PATIL.accessdate=2012-10-16
 3. 'The Mysore Kingdom at AD 1800: ARCHAEOLOGICAL APPLICATIONS OF THE MYSORE SURVEY OF COLIN MACKEINE, By Barry Lewis,accessdate=2012-10-16
 4. Sir Athelstane Baines & W.Siegling (1912) ETHNOGRAPHY- (Castes and Tribes),volume=II (Part-5), page=68,69,73,82 & 148,location=Canada,publisher=University of Toronto,accessdate=2012-10-16
 5. Farming Class and the Fragmented Polity: A Study of Yalahanka Nada Prabhus of Karnataka., by Dr.Shadaksharaiah, Professor of History, Bangalore University, Bangalore 560056. accessdate=2012-10-16
"https://ta.wikipedia.org/w/index.php?title=போயர்&oldid=3037814" இருந்து மீள்விக்கப்பட்டது