சங்ககிரி
சங்ககிரி (Sankari) என்பது தமிழ்நாட்டில் சேலம் மாவட்டத்தில் சங்ககிரி வட்டத்தில் உள்ள பேரூராட்சியாகும். மேலும் இவ்வூர் சங்ககிரி வட்டம் மற்றும் சங்ககிரி ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடம் ஆகும். இவ்வூரின் மலை சங்கு போல உள்ளதால், இதனை சங்ககிரி (சங்கு+கிரி(மலை)=சங்ககிரி) எனப் பெயர் பெற்றது எனக் கூறப்படுகிறது.
சங்ககிரி | |
— பேரூராட்சி — | |
அமைவிடம் | 11°29′N 77°52′E / 11.48°N 77.87°Eஆள்கூறுகள்: 11°29′N 77°52′E / 11.48°N 77.87°E |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | சேலம் |
வட்டம் | சங்ககிரி |
ஆளுநர் | பன்வாரிலால் புரோகித்[1] |
முதலமைச்சர் | எடப்பாடி க. பழனிசாமி[2] |
மாவட்ட ஆட்சியர் | சி. அ. இராமன், இ. ஆ. ப [3] |
சட்டமன்றத் தொகுதி | சங்ககிரி |
சட்டமன்ற உறுப்பினர் |
எஸ். ராஜா (அதிமுக) |
மக்கள் தொகை • அடர்த்தி |
29,467 (2011[update]) • 1,535/km2 (3,976/sq mi) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு | 19.2 சதுர கிலோமீட்டர்கள் (7.4 sq mi) |
குறியீடுகள்
| |
இணையதளம் | www.townpanchayat.in/sanka |
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில், சங்ககிரி மலையில் இந்திய விடுதலைப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையை சங்ககிரி மலையில் தூக்கிலிடப்பட்டார். இந்த மலையை திப்பு சுல்தான் கோட்டை என்றும் அழைக்கப்படுகிறது. மேலும் இங்கு மலையானது சங்கு போன்ற அமைப்பில் அமைந்துள்ளதால் இதற்கு சங்குகிரி என்ற பெயர் பெற்று நாளடையில் அது மருவி சங்ககிரி என்ற பெயர் கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் இப்பகுதியில் முக்கிய தொழில்களாக லாரி பட்டறைகள், விசைத்தறிகள் மற்றும் விவசாயம் நடைபெற்று வருகிறது.
அமைவிடம்தொகு
சேலம் - ஈரோடு நெடுஞ்சாலையில் அமைந்த சங்ககிரி பேரூராட்சிக்கு கிழக்கில் சேலம் 36 கிமீ; மேற்கில் ஈரோடு 22 கிமீ; வடக்கில் எடப்பாடி 15 கிமீ மற்றும் தெற்கில் திருச்செங்கோடு 12 கிமீ தொலைவில் உள்ளது. இதனருகே அமைந்த சங்ககிரி தொடருந்து நிலையம் 3 கிமீ தொலைவில் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்புதொகு
19.2 கிமீ பரப்பும், 18 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 79 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி சங்ககிரி சட்டமன்றத் தொகுதி மற்றும் நாமக்கல் மக்களவைத் தொகுதிக்குட்பட்டதாகும். [4]
மக்கள் தொகை பரம்பல்தொகு
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 8,122 வீடுகளும், 29,467 மக்கள்தொகையும், கொண்டது.[5]
பொருளாதாரம்தொகு
கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரை இவ்வூர் வேளாண்மையைச் சார்ந்திருந்தது. தற்பொழுது சரக்குந்து தொழிலையே நம்பி உள்ளது. பெரும்பாலும் சங்ககிரி முழுவதும் கனரக வாகனங்கள்(lorry body building)கட்டும் மனைகளே உள்ளது. சங்ககிரியை சுற்றி ஐந்துக்கும் மேற்பட்ட இரும்பு உருக்காலைகள் உள்ளன.
வரலாறுதொகு
சங்ககிரி மலை கோட்டையாகும். பின்னர் சங்ககிரி மலைகோட்டை ஆங்கிலேயரின் வரிவசூல் மையமாக செயல்பட்டது. இங்குதான் தீரன் சின்னமலை ஆங்கிலேயர்களால் ஜூலை 31, 1805 அன்று தூக்கிலிடப்பட்டார்.
இந்த ஊரை அடுத்து இருந்த ஐவேலி என்னும் ஊரில் அசதி என்னும் இடையன் வாழ்ந்துவந்தான். இவன் ஔவையாருக்குப் பொற்கலத்தில் விருந்தளித்தான். இந்த அசதியைப் போற்றிப் பன்னிரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஔவையார் அசதிக்கோவை என்னும் நூலைப் பாடியுள்ளார். [6]
மேற்கோள்கள்தொகு
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- ↑ சங்ககிரி பேரூராட்சியின் இணையதளம்
- ↑ Sankari Population Census 2011
- ↑ கொங்கு மண்டல சதகம், பாடல் 45, முனைவர் ந ஆனந்தி உரை