ஈரோடு

தமிழ்நாட்டில் உள்ள ஒரு மாவட்டம் மற்றும் மாநகராட்சி

ஈரோடு (Erode) இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் கொங்கு மண்டலத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தின் தலைநகரமாக இருக்கும் மாநகராட்சி ஆகும். இது மாநில தலைநகரான சென்னையிலிருந்து தென்மேற்குத் திசையில் 400 கிலோமீட்டர் (249 மைல்) தொலைவிலும், காவிரி மற்றும் பவானி ஆறுகளின் நதிக்கரையில் அமைந்துள்ளது. ஈரோடு நகரம் முந்தைய கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.

ஈரோடு
திண்டல் முருகன் கோயில்
அடைபெயர்(கள்): மஞ்சள் நகரம், நெசவு நகரம், கைத்தறி நகரம்
ஈரோடு is located in தமிழ் நாடு
ஈரோடு
ஈரோடு
இந்திய வரைபடத்தில் உள்ள இடம்.
ஈரோடு is located in இந்தியா
ஈரோடு
ஈரோடு
ஈரோடு (இந்தியா)
ஆள்கூறுகள்: 11°20′27″N 77°43′02″E / 11.34083°N 77.71722°E / 11.34083; 77.71722
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்ஈரோடு
பகுதிகொங்கு நாடு
அரசு
 • வகைமாநகராட்சி
 • நிர்வாகம்ஈரோடு மாநகராட்சி
 • மக்களவை உறுப்பினர்அ. கணேசமூர்த்தி
 • சட்டமன்ற உறுப்பினர்எஸ். முத்துசாமி (ஈரோடு மேற்கு)
ஈ. வி. கே. எஸ். இளங்கோவன் (ஈரோடு கிழக்கு)
 • மாநகர முதல்வர்காலியிடம்
 • மாவட்ட ஆட்சியர்ராஜ கோபால் சுன்கரா, இ.ஆ.ப
பரப்பளவு
 • மாநகராட்சி109.52 km2 (42.29 sq mi)
ஏற்றம்
183 m (600 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மாநகராட்சி1,57,101
 • பெருநகர்
5,21,891
மொழிகள்
 • அலுவல்தமிழ் மொழி
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீடு
638 00x
தொலைபேசி குறியீடு91 (424)
வாகனப் பதிவுTN-33, TN-86, TN-56
சென்னையிலிருந்து தொலைவு400 கி.மீ (249 மைல்)
பெங்களூரிலிருந்து தொலைவு220 கி.மீ (140 மைல்)
கோவையிலிருந்து தொலைவு89 கி.மீ (55 மைல்)
கன்னியாகுமரியிலிருந்து தொலைவு400 கி.மீ (250 மைல்)
இணையதளம்erode

பெயர்க் காரணம்

தொகு

'ஈரோடு' எனும் சொல்லானது, பெரும்பள்ள ஓடை, பிச்சைக்காரன் பள்ள ஓடை என்ற இந்த இரண்டு ஓடைகள் சேர்ந்ததுதான் ஈரோடை. ஈரோடைதான் காலப்போக்கில் மருவி `ஈரோடு’ என்றானதாக நவீன வரலாற்றாசிரியர்கள் சொல்கின்றனர்.[1]

பைரவ புராண விளக்கவுரையில், சிவனின் மாமனாரான தட்சன், தாம் நடத்திய யாகத்திற்கு தமது மருமகனான இறைவன் சிவனை அழைக்கவில்லை; அவரது மனைவி தாட்சாயினி, தமது கணவர் விருப்பத்திற்கு எதிராக யாகத்திற்குச் சென்றாள்; யாகத்தில், தமது கணவரை, தந்தை இழிவுபடுத்தியதால் மனமுடைந்து திரும்பினாள். மேலும் அவள் சிவனிடம் திரும்பியபின் சிவன் கோபமுற்று தாட்சாயினியை எரித்தார் எனக் கூறுகிறது. அதைக் கேட்ட பிரம்மா, தன் ஐந்தாவது தலையைத் துண்டித்தார். அந்த மண்டை ஓடு சிவனை ஒட்டிக்கொண்டு, 'பிரம்மதோசம்' பிடித்தது. பிரம்மதோசத்தின் காரணமாக சிவன் இந்தியா முழுவதும் சுற்றினார். அப்போது ஈரோடு வந்த போது, இங்குள்ள கபால தீர்த்தத்தில் நீராடியதால் மண்டை ஓடு சிதைந்தது. இந்த மண்டைத் துணுக்குகள், ஈரோட்டைச் சுற்றியுள்ள வெள்ளோடு (Vellode ("வெள்ளை மண்டை")), பேரோடு (Perode ("பெரிய மண்டை")) மற்றும் சித்தோடு (Chithode ("சிறிய மண்டை")) ஆகிய இடங்களில் விழுந்ததாகக் கூறுகிறது. அவற்றின் பெயர்களும் முன்னுதாரணமாக அமைந்துள்ளன. கபால தீர்த்தமானது, ஆருத்ர கபாலீசுவரர் கோயிலின் (கோட்டை ஈசுவரன் கோவில்) இடதுபுறத்தில் உள்ளதை இன்றும் காணலாம். மேற்கண்டவாறு வரலாற்றினை பைரவ புராணமானது விளக்குகிறது. திருமாலின் அவதாரங்களில், குறிப்பிடத்தக்க அவதாரமான கூர்ம அவதாரத்திற்கான அடித்தளமாக இது திகழ்வதாக சான்றுகள் உள்ளன.

வரலாறு

தொகு
 
ஈரோடு மாவட்டத்தின் வட்டங்கள்

ஈரோடு நகரமானது உள்ளூர் கங்கை வம்ச அரசர்களான சேர மன்னர்கள் மற்றும் மேற்கு கங்கை வம்ச அரசர்களின் ஆட்சியின் கீழ் இருந்தது. தாராபுரமானது அவர்களின் தலைமையகமாகத் திகழ்ந்தது. சோழர்கள் ஆட்சிக்கு பின்னர், முஸ்லிம்கள் (மோடின் சுல்தான் (Modeen Sulthans)) மதுரை நாயக்கர்களின் கீழ் ஆட்சி புரிந்தனர்.

ஐதர் அலி ஆட்சிக்கு பின் ஹைதர் அலி மற்றும் திப்பு சுல்தான் ஆகியோர் மாவீரன் தீரன் சின்னமலை உதவியுடன் ஆதிக்கத்தினைச் செலுத்தினர். 1799 இல், திப்பு சுல்தான் தமது ஆட்சியினை பிரித்தானிய அரசிடம் இழந்தார், சங்ககிரி மலைக் கோட்டையில் தீரன் சின்னமலையின் மறைவிற்கு பின், கிழக்கு இந்திய கம்பெனியானது ஆட்சி புரிந்தது.

ஹைதர் அலி ஆட்சியின் போது, ஈரோடு நன்கு புனரமைக்கப்பட்டு 300 வீடுகள் மற்றும் 1500 மக்கள் தொகை கொண்ட செழிப்பான நகரமாக இருந்தது. சுமார் 4000 சிப்பாய்கள் மூலம் கேர்ரிசன் களிமண் கோட்டையை, கிழக்கு நோக்கிய எல்லையாக (பட்சன் குறிப்பு - 1800 ஆம் ஆண்டு நவம்பர் 7 மற்றும் 8)வும், வடக்கில் காவிரி ஆற்றின் மீது காளிங்கராயன் கால்வாய் வெட்டப்பட்டதால் தென்னந்தோப்புகள் மற்றும் வளமான நிலங்களால் சூழப்பட்டு இருந்தது.

அடுத்தடுத்த மராட்டிய, மைசூர் மற்றும் பிரித்தானிய படையெடுப்புகள் காரணமாக வார்ஸ் கோட்டை பாதுகாப்பு அரண் உட்பட, கிட்டத்தட்ட சிதைந்த ஈரோடு நகரமாக மாறியது. எனினும் பிரித்தானிய சமாதானத்தால் மக்கள் திரும்பி இங்கு குடியேறினர். ஓர் ஆண்டுக்குள் அது வளர்ச்சி காட்ட ஆரம்பித்தது.

கேர்ரிசன் 1807இல் விலகிக்கொண்டது, நகரின் மையத்தில் பாழாக்கி கோட்டையை 1877 ஆம் ஆண்டு பஞ்சத்தின் போது நிவாரண வேலை மூலம் சரி செய்தது. பாதுகாப்பு அரண் உள்ள இடத்தில் தற்போது வீடுகள் ஆக்கிரமிக்கப்பட்டு இருக்கின்றன. ஆனால் கோட்டை இருந்த இடத்தில் சிவன் மற்றும் விஷ்ணு ஆகிய இரு இந்து மதக் கோயி்ல்கள் தற்போது இருக்கின்றன.

பண்டைய கொங்கு கால வரலாற்றின் படி சங்க கால கொங்கு பகுதியின் ஒரு பாகமாகவே ஈரோடு திகழ்ந்தது. இராச ராச சோழனின் ஆட்சியின் கீழ் இப்பகுதியினை ராஷ்ட்ராகுட்டாக்கள் கோசம்புதுரினை தலைமை இடமாக கொண்ட கோசாரஷ் என்ற துருப்புகள் எடுத்துக் கொண்டனர். அவர்கள் கோவையில் பயிற்சி பெற ஏதுவாக தங்கும் பகுதியாக பயன்படுத்தினர். இதை சாளுக்கியர்கள் தங்கள் பகுதியாக்கி கொண்டனர். பின்னர் மதுரை பாண்டிய மன்னர்களும் ஒய்சாளர்களும் தமதாக்கிக் கொண்டனர். ஈரோடு நகரம் முந்தைய கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.

கொங்கு மண்டல சதக பாடல்

தொகு

12ம் நூற்றாண்டில் வாழ்ந்த வாலசுந்தர கவிராயர் என்பவர், சீரிய செங்கமலமாய மேவுந்திரு வெழின்மிக் காரிருள் வோருடன் கூடிக் கலந்தங் கவர் பொருட்டாற் போரியல் வேல்விழி யிற்தாரணி நாயகன் பொன்னொடுபூ மாரிபொழிந்தது மீரோடை சூழ்கொங்கு மண்டலமே என பாடியுள்ளார். இதன் மூலம் 12ம் நூற்றாண்டிலேயே ஈரோடு, ஈரோடை என்ற பெயரில் கொங்குமண்டலத்தில் சிறப்புக்குரிய ஊராக விளங்கியதை அறியலாம். (சான்று:தினத்தந்தி 29.01.2020 ஈரோடு பதிப்பு - நம்ம ஊரு நல்ல ஊரு பகுதி - ஆய்வாளர் புலவர் ராசு மற்றும் ஆடிட்டர் மாரிமுத்து எழுதிய 'மாவீரன் சந்திரமதி முதலியார் வரலாறு' புத்தகம்)

புவியியல்

தொகு

இவ்வூரின் அமைவிடம் 11°21′N 77°44′E / 11.35°N 77.73°E / 11.35; 77.73 ஆகும்.[2] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 183 மீட்டர் (600 அடி) உயரத்தில் இருக்கின்றது. ஈரோட்டின் உள்ளூர் திட்டக் குழுமம் 700 ச.கி.மீ-ஆகத் திகழ்கிறது. பொதுவாக ஈரோடு குறைந்த மழை மற்றும் ஒரு வறண்ட காலநிலையினை கொண்டு உள்ளது. அதிகபட்ச மழையானது கோபிச்செட்டிபாளையத்தில் பதிவு செய்யப்பட்டது. மேற்குத் தொடர்ச்சி மலைகளின் பாலக்காட்டு இடைவெளியானது கோயம்புத்தூர் மாவட்டம் காலநிலையினை வறண்ட தன்மையாக மாற்றுகிறது. பாலக்காட்டு கணவாய் வழியாக மேற்கு கடற்கரையிலிருந்து வரும் பருவகாற்று, அதன் ஈரப்பதத்தை இழப்பதால் கோயம்புத்தூர் மாவட்ட பகுதிகளும், ஈரோடு பகுதியும் உலர் அடைகின்றன.

மக்கள் வகைப்பாடு

தொகு
மதவாரியான கணக்கீடு
மதம் சதவீதம்(%)
இந்துக்கள்
83.15%
முஸ்லிம்கள்
12.37%
கிறிஸ்தவர்கள்
3.94%
சைனர்கள்
0.36%
சீக்கியர்கள்
0.06%
பௌத்தர்கள்
0.02%
மற்றவை
0.11%
சமயமில்லாதவர்கள்
0.01%

2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள்தொகை 157,101 ஆகும். அதில் 78,222 ஆண்களும், 78,879 பெண்களும் உள்ளனர். இந்நகரத்தின் எழுத்தறிவு 84.93 % மற்றும் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 999 பெண்கள் வீதம் உள்ளனர். குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 970 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர்.[4]

2011இல் எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி மாநகரப்பகுதியின் மக்கள்தொகை 157,101 ஆகவும், கூட்டுநகரப்பகுதியின் மக்கள்தொகை 521,891 ஆகவும் உள்ளது.

2011 ஆம் ஆண்டு மதவாரியான கணக்கெடுப்பின்படி, ஈரோடில் இந்துக்கள் 83.15%, முஸ்லிம்கள் 12.37%, கிறிஸ்தவர்கள் 3.94%, சீக்கியர்கள் 0.06%, பௌத்தர்கள் 0.02%, சைனர்கள் 0.36% மற்றும் 0.12% பிற மதங்களைப் பின்பற்றுபவர்களும் உள்ளனர்.

மாநகராட்சி, நிர்வாகம் மற்றும் அரசியல்

தொகு
மாநகராட்சி அதிகாரிகள்
மாநகர முதல்வர்
ஆணையர்
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்
சட்டமன்ற உறுப்பினர் எஸ். முத்துசாமி (ஈரோடு மேற்கு)
சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈ. வெ. ரா (ஈரோடு கிழக்கு)
மக்களவை உறுப்பினர் அ. கணேசமூர்த்தி

ஈரோடு நகரம் 2008 ல் மாநகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்டு, 2011ல் 109.52சதுர கி.மீட்டருக்கு விரிவுபடுத்தப்பட்டது. ஈரோடு மாநகராட்சியின் எல்லைகள் வடக்கில் பவானி ஆறு வரையும், மேற்கில் சித்தோடு மற்றும் செம்மம்பாளையம் வரையும், தென்மேற்கில் திண்டல்மேடு வரையும், தெற்கில் முத்தம்பாளையம் மற்றும் ஆணைக்கல்பாளையம் வரையும், தென் கிழக்கில் சோலார் வரையும் அமையப்பெற்றுள்ளது.

ஈரோடு நகரக் காவல், தமிழ்நாடு காவல்துறையின் மாவட்டக் காவல் அமைப்பான ஈரோடு மாவட்டக் காவல் பிரிவில் உள்ளடங்கியது. ஈரோடு மாநகரில், 8 சட்டம் ஒழுங்கு காவல் நிலையங்களும், ஒரு குற்றப் பிரிவு காவல் நிலையமும் இரண்டு போக்குவரத்துக் காவல் நிலையங்களும் உள்ளன.

ஈரோடு மாநகரமானது, ஈரோடு மேற்கு சட்டமன்றத் தொகுதி மற்றும் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிகள் என இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கும், ஈரோடு மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.

2019 ஆம் ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், இம்மக்களவைத் தொகுதியை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த அ. கணேசமூர்த்தி வென்றார்.

2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், எஸ். முத்துசாமி என்பவர் திமுக சார்பில் ஈரோடு மேற்கு தொகுதியிலிருந்தும் மற்றும் திருமகன் ஈ. வெ. ரா என்பவர் காங்கிரசு சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதியிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

 
வணிகவரித்துறை அலுவலகம் அருகே மீனாட்சி சுந்தரனார் சாலை

முக்கிய தொழில்கள்

தொகு

இங்கு மஞ்சள் அதிகளவில் பயிரிடப்பட்டு, வெளியூர்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்திய அளவில் நிஜாமுதீனுக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய மஞ்சள் மார்க்கெட் ஈரோட்டில் தான் உள்ளது. இதனால் ஈரோடு மஞ்சள் மாநகரம் என்று அழைக்கப்படுகிறது. கைத்தறி, விசைத்தறி ஜவுளி பொருட்கள் மற்றும் ஆயத்த ஆடைகள் தயாரிப்பிற்கும் புகழ் பெற்றது இந்நகரம். எனவே இது ஜவுளி நகரம் என்றும் அழைக்கப்படுகிறது.

உற்பத்தி ரகங்களான பருத்தி சேலைகள், படுக்கை விரிப்புகள், தரைப்பாய்கள், லுங்கிகள், அச்சிடப்பட்ட துணிகள், துண்டுகள், கால்சட்டைகள் போன்ற பொருட்களை மொத்தமாக நகரின் பல்வேறு பகுதிகளில் இயங்கி வரும் பல ஜவுளி சந்தைகளில் சந்தைப்படுத்தப்படுகின்றன. இப்பகுதி பருத்தி விளைச்சலுக்கு சாதகமாக உள்ளது. பஞ்சாலைகளும் மோட்டார் வாகன உதிரிபாக தொழிற்சாலைகளும் இங்குள்ள முக்கிய தொழில்களுள் ஒன்றாகும்.

மேலும் நகரிலும் புறநகர்ப்பகுதிகளிலும் ஜவுளி உற்பத்தி தொழிலைச் சார்ந்த சாயத் தொழிற்சாலைகளும் அதிகளவில் இயங்கி வருகின்றன. உணவுப் பொருட்களின் மதிப்புக் கூட்டு பொருட்கள் உற்பத்தியும் அதிகளவில் நடைபெறுகிறது. தோல் பதனிடும் தொழிலும் இங்கே குறிப்பிட்ட அளவில் நடைபெறுகிறது. விவசாயம் சார்ந்த புற நகர்ப்பகுதிகளை உள்ளடக்கி உள்ளதால், நவீன அரிசி ஆலைகளும், தீவனத் தொழிற்சாலைகளும், எண்ணை ஆலைகளும் அதிகளவில் இயங்கி வருகின்றன.

உலகமுழுவதும் ஏற்றுமதி

தொகு

ஜவுளிப் பொருட்களான துண்டுகள், படுக்கை விரிப்புகள், லுங்கிகள், மற்றும் மஞ்சள் ஆகியன உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

முக்கிய சுற்றுலாத்தலங்கள்

தொகு

தேவாரத் திருத்தலங்கள்

தொகு

பவானி சங்கமேசுவரர் கோயில், கொடுமுடி மகுடேசுவரர் கோயில் என தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள் ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ளன.

பிற கோவில்கள்

தொகு
  • கோட்டை ஈசுவரன் கோவில். ஈரோடு நகரின் நடுநாயகமாக விளங்கும் இக்கோவிலைக் கட்டியவர்கள் 'சிறு நல்லாள்', 'பெரு நல்லாள்' என்ற கன்னியர் ஆவர். இவர்கள் கணிகையர் ஆக இருந்து சிவத்தொண்டு புரிந்து சிறு கோவிலாக 12ம் நூற்றாண்டில் கட்டி வழிபட்டனர். ஆரம்பத்தில் இக்கோவில் சிவன் தொண்டீஸ்வரர் என அழைக்கப்பட்டு வழிபடப்பட்டார். தொண்டீஸ்வரர் என்ற பெயர் புராண இதிகாசங்களிலும் மற்றெங்கிலும் காணப்படாதால் இது காரணப் பெயர் எனக் கருதப்படுகிறது. பின்னாளில் இவ்இறைவன் ஆருத்ரா கபாலீஸ்வரர் என வணங்கப் பெறுகிறார் [5]
  • நாகேஸ்வரர் திருக்கோவில் தலையநல்லூர் சிவகிரி
  • பொன்காளியம்மன் கோவில் தலையநல்லூர் சிவகிரி
  • வேலாயுதசுவாமி கோவில் சிவகிரி
  • ஆருத்ர கபாலீஸ்வரா் கோவில்
  • மகிமாலீஸ்வரா் திருக்கோவில்
  • பொிய மாாியம்மன் வகையறா கோவில்கள்
  • கொங்காலம்மன் கோவில்
  • அரங்கநாதா் திருக்கோவில்
  • கொண்டத்து காளியம்மன் திருக்கோவில்
  • ஷீரடி சாய்பாபா திருக்கோவில், வள்ளிபுரத்தான் பாளையம்
  • சாய்பாபா திருக்கோவில், இரயில்வே காலனி
  • சித்தி விநாயகா் திருக்கோவில், இரயில்வே காலனி
  • கோட்டை முனீஸ்வரன் திருக்கோவில்
  • மாாியம்மன் திருக்கோவில், வீரப்பன்சத்திரம்
  • சுப்ரமணிய சுவாமி திருக்கோவில், கருங்கல்பாளையம்
  • கோதண்டராமா் கோவில், கருங்கல்பாளையம்
  • காமாட்சி அம்மன் திருக்கோவில், கருங்கல்பாளையம்
  • ஐயப்பன் கோவில், கருங்கல்பாளையம்
  • சாய்பாபா திருக்கோவில், கருங்கல்பாளையம்
  • வலம்புாி விநாயகா் திருக்கோவில், மாநகராட்சி கட்டிட வளாகம்
  • கோட்டை அங்காளம்மன் திருக்கோவில்
 
ஈரோடு மாநகரின் விரிவான சாலை அமைப்பு

போக்குவரத்து

தொகு
 
நெரிச்சல் மிக்க ஓர் சந்திப்பு

ஈரோடு போக்குவரத்து

ஈரோடு மாநகரின் தொழில் முயற்சிகளுக்குப் பெரிதும் துணையாக இருப்பது போக்குவரத்து; ஈரோட்டிலிருந்து சென்னை, பெங்களூரு,மைசூர் ,கொச்சி உள்ளிட்ட தென்னிந்தியாவின் அனைத்துப் பகுதிகளுக்கும், தமிழகத்தின் அனைத்து முக்கிய நகரங்களுக்கும் சாலை போக்குவரத்து உள்ளது. நேர்விரைவுப் பேருந்து சென்று வருகிறது. ஈரோடு மத்திய பேருந்து நிலையம் நகரின் முக்கியப் போக்குவரத்து மையமாக விளங்குகிறது. புதிதாக கீழ்வரும் இரண்டு புறநகர் பேருந்து நிலையங்கள் நிறுவும் பணிகள் நடைமுறையில் உள்ளது.

சோலார் பேருந்து நிலையம், ஈரோடு

பெரியசேமூர் பேருந்து நிலையம், ஈரோடு

 
ஈரோடு சந்திப்பு தொடருந்து நிலையம்

ஈரோடு சந்திப்பு தொடருந்து நிலையம், ஈரோடு மாநகரின் பிரதான தொடருந்து நிலையமாக விளங்குகிறது. தென் மாவட்டங்களையும், மேற்கு மாவட்டங்களையும், இந்தியாவின் வடக்குப் பகுதிகளோடு இணைக்கும் முக்கிய தொடருந்து சந்திப்பாக உள்ளது. இங்கிருந்து எந்த நேரமும் நாட்டின் எந்தப் பகுதிக்கும் தொடருந்து வசதி உள்ளது.

ஈரோடு மாநகரம் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளை இணைக்கும் முக்கிய சாலை சந்திப்பாக விளங்குகிறது. பல்வேறு தேசிய நெடுஞ்சாலைகளும், மாநில நெடுஞ்சாலைகளும் சந்திக்குமிடமாக ஈரோடு உள்ளது. சேலம், கோவை, கொச்சி, சத்தியமங்கலம், மேட்டூர், கொல்லேகல், கரூர், திருச்சி, ஒட்டன்சத்திரம், தாராபுரம், பழனி ஆகிய பகுதிகளுக்குச் செல்லும் நெடுஞ்சாலைகள் இங்கு இணைகின்றன.

ஈரோடு மாநகரின் வாகன நெரிசலை குறைப்பதற்காக (Outer Ring Road) வெளிவட்டச்சாலையானது முதல் கட்டத்தில் நாமக்கல் மாவட்டத்திலுள்ள கொக்கராயன்பேட்டையிலிருந்து திண்டல் அடுத்த நஞ்சனாபுரம் வரை 14.8 கி.மீ தூரத்திற்கு சாலை அமைக்கப்படுகிறது.[6][7][8] இரண்டாவது கட்டத்தில் பவளத்தான்பாளையத்திலிருந்து நசியனூர் அல்லது சித்தோட்டை இணைத்து அதன் வழியாக பவானி சாலையை இணைக்க திட்டமிட்டுள்ளார்கள். இதன் உத்தேச நீளம் 5 கி.மீ ஆகும். இதற்கு நிலம் கையகப்படுத்துவதற்கான இழப்பீடு மிகவும் அதிகம் என்பதால், இதற்கான அடிப்படை பணிகளுக்கான அரசு ஒப்புதல் இன்னும் கிடைக்கப்பெறவில்லை. எனவே தற்காலிகத் தீர்வாக, தற்போது பயன்பாட்டிலிருக்கும் திண்டல்-வில்லரசம்பட்டி-பெரியசேமுர் இணைப்பு சாலையை பல்வழித்தடத்திலான உள்வட்டச்சாலையாக (Inner Ring Road) விரிவுபடுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

வானிலை மற்றும் காலநிலை

தொகு

பொதுவாக இங்கே பருவ மழை சீசன் போது தவிர மற்ற நாட்கள் முழுவதும் மிதமான-வறண்ட வானிலை உள்ளது. ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் வசந்த காலங்களாக உள்ளன, ஆனால் மார்ச் மாதம், தொடங்கி மே இறுதி வரை கத்திரி வெயில் தொடர்வதால் அதிகபட்ச வெப்பநிலையினை எட்டுகிறது. பொதுவாக மே மாதத்தில் அதிகபட்ச வெப்பமானது பதிவு செய்யப்படுகிறது. இந்த காலத்தில் குறைந்த மழை பொழிவானது வெப்பநிலை குறைக்க முடியாமல் இருக்கிறது. சூன்-ஆகத்து காலத்தில் காலநிலை வசந்த காலநிலையாக மாறுகிறது. இந்த முன் பருவ காலத்தில், வெப்பநிலையில் அதன் போக்கு தலைகீழாகிறது. செப்டம்பர் மாதத்தில் இருண்ட வானிலை நிலவிய போதிலும் மழையளவு மிகக்குறைந்த அளவே உள்ளன. வட கிழக்கு பருவமழை மூலம் அக்டோபர் - நவம்பர் மாதங்களில் மழை பெய்கிறது. டிசம்பர் மாதத்தில் தீவிரமடைந்து தெளிவான வானிலையை பெற்றுவிடுகிறது.

தட்பவெப்ப நிலைத் தகவல், ஈரோடு (1997–2007)
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 37.0
(98.6)
37.2
(99)
40.6
(105.1)
42.8
(109)
41.8
(107.2)
42.0
(107.6)
39.0
(102.2)
40.0
(104)
39.0
(102.2)
38.6
(101.5)
36.2
(97.2)
35.6
(96.1)
42.8
(109)
உயர் சராசரி °C (°F) 32.7
(90.9)
34.5
(94.1)
36.8
(98.2)
37.8
(100)
38.1
(100.6)
37.1
(98.8)
36.1
(97)
35.6
(96.1)
35.3
(95.5)
33.2
(91.8)
31.5
(88.7)
31.4
(88.5)
35.0
(95)
தாழ் சராசரி °C (°F) 20.4
(68.7)
20.5
(68.9)
22.2
(72)
22.9
(73.2)
23.3
(73.9)
23.1
(73.6)
22.8
(73)
22.8
(73)
22.8
(73)
22.1
(71.8)
21.5
(70.7)
20.7
(69.3)
22.1
(71.8)
பதியப்பட்ட தாழ் °C (°F) 13.0
(55.4)
13.0
(55.4)
17.0
(62.6)
19.0
(66.2)
19.0
(66.2)
19.0
(66.2)
19.0
(66.2)
19.0
(66.2)
18.0
(64.4)
17.6
(63.7)
14.4
(57.9)
14.0
(57.2)
13.0
(55.4)
மழைப்பொழிவுmm (inches) 1.6
(0.063)
2.0
(0.079)
13.6
(0.535)
49.0
(1.929)
82.1
(3.232)
10.9
(0.429)
23.0
(0.906)
48.8
(1.921)
62.4
(2.457)
133.5
(5.256)
98.5
(3.878)
18.2
(0.717)
543.6
(21.402)
ஈரப்பதம் 56 45 46 49 54 53 57 58 57 65 69 63 56
சராசரி மழை நாட்கள் 0.2 0.3 0.4 2.3 4.3 1.2 1.8 3.3 4.3 8.3 6.6 2.2 35.0
ஆதாரம்: இந்திய வானிலை ஆய்வுத் துறை[9]

இவ்வூரில் பிறந்த புகழ்பெற்ற மனிதர்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. நவீன் இளங்கோவன், ed. (1998). காசு இருக்கிறது என்பதற்காக சமாதி கட்டலாமா?' - ரூ.183 கோடி திட்டத்தால் ஈரோடு ஓடைக்கு ஆபத்து. விகடன் இதழ். p. 1345. பெரும்பள்ள ஓடை, பிச்சைக்காரன் பள்ள ஓடை என்ற இந்த இரண்டு ஓடைகள் சேர்ந்ததுதான் ஈரோடை. ஈரோடைதான் காலப்போக்கில் மருவி `ஈரோடு' என்றானதாக வரலாறுகள் சொல்கின்றன.
  2. "Erode". Falling Rain Genomics, Inc. பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 20, 2006.
  3. "Smart City Challenge-Erode". Government of India. பார்க்கப்பட்ட நாள் 15 December 2015.
  4. ஈரோடு மாநகராட்சியின் மக்கள்தொகை பரம்பல்
  5. தினத்தந்தி ஈரோடு பதிப்பு 05.02.2020 'நம்ம ஊரு நல்ல ஊரு' பகுதி- தகவல்: ஆடிட்டர் எம். மாரிமுத்து எழுதிய 'மாவீரன் சந்திர முதலியார் வரலாறு
  6. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2009-09-27. பார்க்கப்பட்ட நாள் 2010-08-03.
  7. http://www.projectstoday.com/Potpourri/IndianNews/Land%20acquisition%20begins%20for%20Erode%20ring%20road%20project.asp
  8. http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Erode&artid=129173&SectionID=102&MainSectionID=102&SEO=&Title=[தொடர்பிழந்த இணைப்பு]
  9. "Station: Erode Climatological Table 1981–2010" (PDF). Climatological Normals 1981–2010. இந்திய வானிலை ஆய்வுத் துறை. சனவரி 2015. pp. 265–266. Archived from the original (PDF) on 5 பிப்ரவரி 2020. பார்க்கப்பட்ட நாள் 15 மார்ச் 2020. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)

வெளி இணைப்புகள்

தொகு
ஈரோடு பற்றிய மேலதிக தகவல்களைப் பார்க்க தொடர்புடையத் திட்டங்கள்:

  விக்சனரி விக்சனரி
  நூல்கள் விக்கிநூல்
  மேற்கோள் விக்கிமேற்கோள்
  மூலங்கள் விக்கிமூலம்
  விக்கிபொது
  செய்திகள் விக்கிசெய்தி


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈரோடு&oldid=4032737" இலிருந்து மீள்விக்கப்பட்டது