சோலார்

ஈரோடு மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி

சோலார் (Solar) வ்என்பது ஈரோடு மாநகரத்திலிருந்து தென்கிழக்கில் 6 ஆவது கி.மீ. தொலைவில் உள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும். இது ஈரோடு மாநகராட்சி மண்டலம் நான்கில் அமைந்துள்ளது. இது கரூர், முத்தூர் சாலையின் மையத்தில் உள்ளது. இதன் அருகில் உள்ள ஊர்கள் [[இலக்காபுரம், போக்குவரத்து நகர், கொக்கராயன்பேட்டை, ஆகியனவாகும். ஈரோடு - கரூர் தொடருந்துத் தடம் இவ்வூர் வழியாக செல்கிறது. இது இலக்காபுரத்தில் உள்ள முருகன் கோயிலுக்குப் பெயர்பெற்றது. இவ்வூரில், புகழ் பெற்ற தன்னாசி முனியப்பன் கோவில் உள்ளது. இவ்வூரில் இந்திய வங்கி, இந்திய ஓவர்சீஸ் வங்கி, ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஆகியன செயல்பட்டு வருகின்றன. மையப்பகுதியில் இரவுண்டானா ஒன்று உள்ளது.


இது ஈரோடு மேற்கு சட்டமன்ற தொகுதியில் அமையப்பெற்றுள்ளது. இவ்வூரில் மணல் விற்பனை நடைபெற்று வருகிறது. ஈரோடு நகரில் இருந்து நாமக்கல் மாவட்டம் செல்லும் சுற்றுச்சாலையில் (வெளி வட்டச் சாலை, ஈரோடு), சோலார் பேருந்து நிலையம், ஈரோடு அமைந்துள்ளது.

மேற்கோள்கள்

தொகு

1. https://m.facebook.com/profile.php?id=105491072817181 2. https://www.google.com/search?q=%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%2C+%E0%AE%88%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81&rlz=1C1GCEA_enIN999IN999&oq=%E0%AE%9A%E0%AF%8B&gs_lcrp=EgZjaHJvbWUqBggAEEUYOzIGCAAQRRg7MgYIARBFGDkyDAgCEAAYQxiABBiKBTIMCAMQABhDGIAEGIoFMhAIBBAuGIMBGLEDGIAEGIoFMgcIBRAuGIAEMgYIBhBFGDwyBggHEEUYPNIBCDkzMDFqMGo3qAIAsAIA&sourceid=chrome&ie=UTF-8

"https://ta.wikipedia.org/w/index.php?title=சோலார்&oldid=3873433" இலிருந்து மீள்விக்கப்பட்டது