வெளி வட்டச் சாலை, ஈரோடு

ஈரோடு வெளி வட்டச்சாலையானது (Outer Ring Road) தமிழ்நாடு மாநிலத்திலுள்ள, ஈரோடு மாவட்டத்தின் ஈரோடு மாநகரைச் சுற்றிச்செல்லும் அரைவட்ட புறவழிச்சாலைத் திட்டமாகும். இத்திட்டமானது, ஈரோடு மாநகரில் நிலவி வரும் கடும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் பொருட்டு உருவாக்கப்பட்டது. ஈரோட்டிலிருந்து துவங்கவும், முடியவும் செய்யும் பல்வேறு நெடுஞ்சாலைகளை ஈரோடு மாநகருக்கு வெளியில் இணைக்கும் விதத்தில் இத்திட்டம் உருவாக்கப்பட்டது.

வெளி வட்டச்சாலை, ஈரோடு
வழித்தட தகவல்கள்
நீளம்:32 km (20 mi)
பயன்பாட்டில்
இருந்த காலம்:
2004 – present
வரலாறு:15 கி.மீ. தெற்கு பகுதி திறக்கப்பட்டுள்ளது
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்:கொக்கராயன்பேட்டை
To:சித்தோடு
அமைவிடம்
முக்கிய நகரங்கள்:ஈரோடு
நெடுஞ்சாலை அமைப்பு

இது நகரின் மையப்பகுதியிலிருந்து 8 முதல் 10 கி.மீ. ஆரத் தொலைவில் இணைக்கிறது.

ஈரோடு மாநகரின் விரிவான சாலை கட்டமைப்பு

கொக்கராயன்பேட்டை-ஆணைக்கல்பாளையம்-திண்டல் சின்னமேடு தொகு

ஈரோடு தெற்கு வெளி வட்டச்சாலை

இதில் நாமக்கல் மாவட்டத்தின் கொக்கராயன்பேட்டையிலிருந்து திண்டல் அடுத்த சின்னமேடு வரை சுமார் 15 கி.மீ. தூரத்திற்கு சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதன் தற்போதைய அகலம் 7 மீட்டராக இருப்பினும் எதிர்கால விரிவாக்கத்தைக் கருத்தில் கொண்டு 30மீ அளவுக்கு நிலம் கையக்கப்படுத்தப்பட்டுள்ளது. [1][2][3]. மேலும், வெள்ளகோவில் சாலை முத்துக்கவுண்டன்பாளையம் முதல் தாராபுரம் சாலை ஆணைக்கல்பாளையம் வரை 11மீ அகலத்தில் கடின புருவங்களுடன் கூடிய இருவழித்தடமாக விரிவுபடுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இணைக்கப்படும் முக்கிய ஆரச் சாலைகள்

  • பரமத்திவேலூர் சாலை (SH-198) - கொக்கராயன்பேட்டை
  • கரூர் சாலை (SH-84) - லக்காபுரம் பரிசல்துறை
  • வெள்ளக்கோவில் சாலை (NH-381A) - முத்துக்கவுண்டன்பாளையம்
  • தாராபுரம்-பழனி சாலை (SH-83A) -ஆணைக்கல்பாளையம்
  • சென்னிமலை சாலை (MDR-108) - ரங்கம்பாளையம்
  • பெருந்துறை சாலை (SH-96) - திண்டல் சின்னமேடு

மேற்கு நீட்டிப்பு: திண்டல் - சித்தோடு தொகு

திண்டல் அடுத்த சின்னமேடு பகுதியிலிருந்து தேசிய நெடுஞ்சாலை-544 (மேற்கு புறவழிச்சாலை)யுடன் இணைக்கும் திட்டமாகும். இதன் உத்தேச நீளம் 10 கி.மீ. இதில் NH-544 சித்தோடு புறவழிச்சாலை மூலம் பவானியை இணைக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

இணைக்கப்படும் முக்கிய ஆரச் சாலைகள்

  • பெருந்துறை சாலை (SH-96) - நஞ்சனாபுரம்
  • நசியனூர் சாலை (SH-173) - வெள்ளக்கல்
  • சத்தியமங்கலம் சாலை (SH-15) - கொங்கம்பாளையம்

2015ல் திட்டமிடப்பட்ட வெளி வட்டச்சாலையின் இப்பகுதி நீண்ட இழுபறிக்கு பின் மீண்டும் பரிசீலிக்கப்பட்டு செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

தற்போது 2022ல் தமிழக முதல்வர் திண்டல்மேடு முதல் நசியனூர் சாலை வழியாக சத்தியமங்கலம் சாலையை இணைக்கும் வகையில் சுமார் 10 கி.மீ நீளத்திற்கு வெளிவட்டச்சாலையை நீட்டிக்க ரூபாய் 60 இலட்சம் மதிப்பில் திட்ட அறிக்கை தயாரிக்கப்படும் என்று அறிவிப்பை வெளியிட்ட நிலையில் இதன் பணிகள் மீண்டும் துவங்கியுள்ளன.

கிழக்கு நீட்டிப்பு: கொக்கராயன்பேட்டை - காடச்சநல்லூர் - வெப்படை தொகு

கொக்கராயன்பேட்டை பரிசல்துறையிலிருந்து காடச்சநல்லூர் அண்ணா நகர் வழியாக வெப்படை வரை 11 கி.மீ திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் பகுதி வெள்ளகோயில்-ஈரோடு- சங்ககிரி தேசிய நெடுஞ்சாலை 381A நான்கு வழிச்சாலை திட்டத்தின் ஒருபகுதியாக அமையும் என உத்தேசிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஈரோடு மாநகர் மற்றும் பெருநகரப் பரப்பிற்கான விரிவான போக்குவரத்து திட்ட அறிக்கையில் சுமார் 60.கி.மீ தூரம் பாசூர் முதல் மொடக்குறிச்சி, அவல்பூந்துறை, வெள்ளோடு, பெருந்துறை, காஞ்சிகோவில், பெரியபுலியூர், ஜம்பை வழியாக பவானி ஊராட்சிக்கோட்டை வரை புறநகர வட்டச் சாலை அமைக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. [4]

மேலும் பார்க்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2009-09-27. பார்க்கப்பட்ட நாள் 2018-01-24.
  2. http://www.projectstoday.com/Potpourri/IndianNews/Land%20acquisition%20begins%20for%20Erode%20ring%20road%20project.asp
  3. http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Erode&artid=129173&SectionID=102&MainSectionID=102&SEO=&Title=[தொடர்பிழந்த இணைப்பு]
  4. Comprehensive Mobility Plan, Page-26[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெளி_வட்டச்_சாலை,_ஈரோடு&oldid=3806520" இலிருந்து மீள்விக்கப்பட்டது