கொள்ளேகால்

இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு நகரம்
(கொல்லேகல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கொள்ளேகால் (Kollegala) இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் சாமராசநகர் மாவட்டத்தின் கொள்ளேகால் வருவாய் வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், நகராட்சியும் ஆகும். கொள்ளேகால் பட்டுத் தொழிலுக்கு பெயர் பெற்றது.

கொள்ளேகால்
நகரம்
அடைபெயர்(கள்): பட்டு நகரம்
நாடு இந்தியா
மாநிலம்கர்நாடகம்
மாவட்டம்சாமராசநகர் மாவட்டம்
தோற்றுவித்தவர்காலவமுனி
அரசு
 • வகைவருவாய் வட்டம்
 • நிர்வாகம்நகராட்சி
பரப்பளவு
 • மொத்தம்27.47 km2 (10.61 sq mi)
ஏற்றம்587 m (1,926 ft)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்57,149
 • அடர்த்தி1,915.07/km2 (4,960.0/sq mi)
Languages
 • Officialகன்னடம்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்571 440
Telephone code08224
வாகனப் பதிவுKA-10
இணையதளம்www.kollegalacity.mrc.gov.in
நஞ்சுண்டேஸ்வரர் கோயில்

போக்குவரத்து தொகு

கொள்ளேகால் தேசிய நெடுஞ்சாலை எண் 209 மற்றும் 766/215 என இரண்டு தேசிய நெடுஞ்சாலைகளைக் கொண்டது. அருகில் அமைந்த தொடருந்து நிலையம் 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சாம்ராஜ்நகரில் உள்ளது. அருகில் உள்ள வானூர்தி நிலையம் 150 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்த பெங்களூர் பன்னாட்டு வானூர்தி நிலையமாகும் மற்றும் 170 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்த கோயம்புத்தூர் விமான நிலையமாகும். மேலும் கொல்லேகலத்திலிருந்து பெங்களூர் மற்றும் மைசூர் செல்வதற்கு பேருந்து வசதிகள் உள்ளது.

மக்கள் தொகையியல் தொகு

2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, கொள்ளேகாலம் நகரத்தின் மொத்த மக்கள் தொகை 57,149 ஆகும். அதில் ஆண்கள் 28,546 ஆகவும்; பெண்கள் 28,603 ஆகவும் உள்ளனர். மொத்த மக்கள் தொகையில் ஆறு வயதிற்குட்பட்டவர்கள் 9.20% விழுக்காடாக உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 1002 பெண்கள் உள்ளனர். எழுத்தறிவு 81.99% விழுக்காடாக உள்ளது.[1] மக்கள் கன்னடம், தெலுங்கு மற்றும் தமிழ் மொழி பேசுகின்றனர். தமிழ் பேசுவோர் காவிரி ஆற்றின் வடகரையில் அடர்த்தியாக வாழ்கின்றனர்

படக்காட்சிகள் தொகு

அமைவிடம் தொகு

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Kollegal
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொள்ளேகால்&oldid=3819383" இலிருந்து மீள்விக்கப்பட்டது