கோயம்புத்தூர் மாவட்டம் (மதராசு மாகாணம்)
கோயம்புத்தூர் மாவட்டம் (Coimbatore district) பிரித்தானிய இந்தியாவின் சென்னை மாகாணத்தின் மாவட்டங்களில் ஒன்றாகும். இது தற்கால கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர் ஆகிய தமிழ்நாட்டு மாவட்டங்களையும் கருநாடகத்தின் தற்கால கொல்லேகல் வட்டத்தையும் உள்ளடக்கியது. இதன் மொத்தப் பரப்பளவு 20,400 சதுர கிலோமீட்டர்களாக (7,860 ச மைல்) இருந்தது. இந்த மாவட்டத்தில் பத்து வட்டங்கள் இருந்தன. இதன் நிர்வாகத் தலைநகரமாக கோயம்புத்தூர் நகரம் இருந்தது. பெரும்பாலான மாவட்டவாசிகள் தமிழர்களாக இருந்தபோதும் மலையாளிகள், தெலுங்கர்கள், கன்னடியர்கள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் இருந்தனர்.[1][2]
கோயம்புத்தூர் மாவட்டம் கோயம்புத்தூர் மாவட்டம் | |||||
மாவட்டம் சென்னை மாகாணம் | |||||
| |||||
கொடி | |||||
ஆறு வட்டங்கள் பிரிக்கப்பட்டு ஈரோடு மாவட்டம் உருவாவதற்கு முன்னதான கோவை மாவட்டத்தின் அமைவிடம் | |||||
தலைநகரம் | கோயம்புத்தூர் | ||||
வரலாறு | |||||
• | நிறுவப்பட்டது | 1805 | |||
• | தற்கால கோயம்புத்தூர் மாவட்டம் | 1947 | |||
பரப்பு | |||||
• | 1901 | 20,357 km2 (7,860 sq mi) | |||
Population | |||||
• | 1901 | 22,01,752 | |||
மக்கள்தொகை அடர்த்தி | 108.2 /km2 (280.1 /sq mi) | ||||
இந்தக் கட்டுரை தற்போது பொது உரிமைப் பரப்பிலுள்ள நூலிலிருந்து உரையைக் கொண்டுள்ளது: "Coimbatore". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th) 6. (1911). Cambridge University Press. 652–653. |
வரலாறு
தொகுஇந்த மாவட்டம் 1805இல் நிறுவப்பட்டது. 1868இல் நீலகிரி மாவட்டம் தனியாகப் பிரிக்கப்பட்டது. கரூர் பிரிக்கப்பட்டு திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இணைக்கப்பட்டபோது அவிநாசி தனி வட்டமானது. 1927இலும் 1929இலும் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. 1956இல் கொல்லேகால் வட்டம் மைசூரு மாநிலத்திற்கு (தற்கால கருநாடகம்) மாற்றப்பட்டது.
வட்டங்கள்
தொகுகோயம்புத்தூர் மாவட்டம் பத்து வட்டங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது:
- பவானி (பரப்பு: 1,850 சதுர கிலோமீட்டர்கள் (715 sq mi); தலைமையகம்: பவானி)
- கோயம்புத்தூர் (பரப்பு: 2,100 சதுர கிலோமீட்டர்கள் (812 sq mi); தலைமையகம்: கோயம்புத்தூர்)
- தாராபுரம் (பரப்பு: 2,210 சதுர கிலோமீட்டர்கள் (853 sq mi); தலைமையகம்: தாராபுரம்)
- ஈரோடு (பரப்பு: 1,550 சதுர கிலோமீட்டர்கள் (598 sq mi); தலைமையகம்: ஈரோடு)
- கரூர் (பரப்பு: 1,590 சதுர கிலோமீட்டர்கள் (612 sq mi); தலைமையகம்: கரூர்)
- கொல்லேகால் (பரப்பு: 2,790 சதுர கிலோமீட்டர்கள் (1,076 sq mi); தலைமையகம்: கொள்ளேகால்)
- பல்லடம் (பரப்பு: 1,920 சதுர கிலோமீட்டர்கள் (741 sq mi); தலைமையகம்: பல்லடம்)
- பொள்ளாச்சி (பரப்பு: 1,800 சதுர கிலோமீட்டர்கள் (710 sq mi); தலைமையகம்: பொள்ளாச்சி)
- சத்தியமங்கலம் (பரப்பு: 3,050 சதுர கிலோமீட்டர்கள் (1,177 sq mi); தலைமையகம்: கோபிச்செட்டிப்பாளையம்)
- உடுமலைப்பேட்டை (பரப்பு: 1,470 சதுர கிலோமீட்டர்கள் (566 sq mi); தலைமையகம்: உடுமலைப்பேட்டை)
நிர்வாகம்
தொகுகோயம்புத்தூர் மாவட்டம் நான்கு துணைக் கோட்டங்களாக பிரிக்கப்பட்டிருந்தது:
- கோயம்புத்தூர் துணைக்-கோட்டம்: கோயம்புத்தூர், சத்தியமங்கலம் வட்டங்கள்
- ஈரோடு துணைக்-கோட்டம்: பவானி, தாராபுரம், ஈரோடு, கரூர் வட்டங்கள்
- கொள்ளேகால் துணைக்-கோட்டம்: கொள்ளேகால் வட்டம்
- பொள்ளாச்சி துணைக்-கோட்டம்: பொள்ளாச்சி, பல்லடம், உடுமலைப்பேட்டை வட்டங்கள்
மேற்கோள்கள்
தொகு- ↑ "Coimbatore district - History". Archived from the original on 2005-04-06. பார்க்கப்பட்ட நாள் 2014-08-09.
- ↑ The Imperial Gazetteer of India, Volume 10. London: Clarendon Press. 1908.