பல்லடம்
பல்லடம் (ஆங்கிலம்:Palladam), தமிழ்நாட்டில் அமைந்துள்ள திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் வட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமும், நகராட்சியும் ஆகும். பல்லடம் தேசிய நெடுஞ்சாலை 67-இல் அமைந்துள்ளது. இங்கு முதன்மையான தொழிலாக கோழி வளர்ப்பும் விசைத்தறியும் திகழ்கிறது.
பல்லடம் | |||||||
— முதல் நிலை நகராட்சி் — | |||||||
அமைவிடம் | 10°59′46″N 77°17′03″E / 10.9962°N 77.2841°E | ||||||
நாடு | ![]() | ||||||
மாநிலம் | தமிழ்நாடு | ||||||
மாவட்டம் | திருப்பூர் | ||||||
வட்டம் | பல்லடம் | ||||||
ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||||||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||||||
மாவட்ட ஆட்சியர் | மருத்துவர். எஸ். வினீத், இ. ஆ. ப [3] | ||||||
நகராட்சித் தலைவர் | |||||||
ஆணையர் | |||||||
சட்டமன்றத் தொகுதி | பல்லடம் | ||||||
சட்டமன்ற உறுப்பினர் | |||||||
மக்கள் தொகை • அடர்த்தி |
13,225 (2011[update]) • 562/km2 (1,456/sq mi) | ||||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
பரப்பளவு • உயரம் |
23.54 சதுர கிலோமீட்டர்கள் (9.09 sq mi) • 212 மீட்டர்கள் (696 ft) | ||||||
குறியீடுகள்
| |||||||
இணையதளம் | www.municipality.tn.gov.in/Palladam/ |
புவியியல்தொகு
இவ்வூரின் அமைவிடம் 10°59′N 77°18′E / 10.98°N 77.3°E ஆகும்.[4] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 325 மீட்டர் (1066 அடி) உயரத்தில் இருக்கின்றது. 'தென் இந்தியாவின் மான்செஸ்டர்' என்று அழைக்கப்படும் கோயம்புத்தூரில் இருந்து 38 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
மக்கள் வகைப்பாடுதொகு
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 18 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும் மற்றும் 1000 ஆண்களுக்கு, 1,009 பெண்கள் என்ற பாலின விகிதத்துடன் இந்நகரத்தின் மக்கள்தொகை 13,225 ஆகும். மக்கள்தொகையில் 6,652 ஆண்களும், 6,573 பெண்களும் ஆகவுள்ளனர். இந்நகரத்தின் எழுத்தறிவு விகிதம் 83.5% ஆகும். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 4742 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு 963 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 5,862 மற்றும் 9 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 86.77% , இஸ்லாமியர்கள் 7.71%, கிறித்தவர்கள் 5.39% மற்றும் பிறர் 0.12% ஆகவுள்ளனர்.[5]
பொருளாதாரம்தொகு
பல்லடத்தில் முக்கிய தொழில்கள் ஜவுளி, இறைச்சி கோழி வளர்ப்பு, விவசாயம், காற்றாலை. பல்லடத்தைச் சுற்றிலும் விசைத்தறி மற்றும் பின்னல் ஆடை தொழில் மையங்கள் அமைந்துள்ளன இவை அனைத்தும் பெரும் அந்நிய செலாவணி ஈட்டுகின்றன. பல்லடம் உயர் தொழில்நுட்பப் பூங்கா 2007 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இங்கு பலவகையான ஜவுளி கூடங்கள் அமைந்துள்ளன. இது 65 எக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.
போக்குவரத்துதொகு
தேசிய நெடுஞ்சாலை 67 -ல் அமைந்துள்ள இந்த நகராட்சி போக்குவரத்தில் முக்கிய மையப்பகுதியாக உள்ளது. இங்கிருந்து பல்லடம் முதல் காமநாயக்கன் பாளையம் வழியாக பொள்ளாச்சி மாநில நெடுஞ்சாலையும், பல்லடம் - உடுமலைப்பேட்டை மாநில நெடுஞ்சாலையும், பல்லடம் - செட்டிபாளையம் மாநில நெடுஞ்சாலையும் கோவையிலிருந்து தேசிய நெடுஞ்சாலையும், திருச்சியிலிருந்து தேசிய நெடுஞ்சாலையும், திருப்பூரிலிருந்து மாநில நெடுஞ்சாலையும், தாராபுரத்திலிருந்து மாநில நெடுஞ்சாலையும் , அவிநாசியிலிருந்து மாநில நெடுஞ்சாலையும் என எட்டு ரோடுகளும் சங்கமிக்கும் ஓர் இடமாக பல்லடம் இருக்கிறது. இங்கிருந்து தமிழகத்தின் கிழக்கு மாவட்டங்கள் மற்றும் தெற்கு மாவட்டங்களுக்கு நேரடி போக்குவரத்து சேவை உள்ளது. இந்த பகுதிகளுக்கு பேருந்துகள் கோயம்புத்தூர் - சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படுகிறது. பல்லடத்தில் இருந்து காங்கேயம், வெள்ளக்கோயில், கரூர், குளித்தலை, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், கும்பகோணம், நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், மதுரை, தாராபுரம், ஒட்டன்சத்திரம், செம்பட்டி, வத்தலகுண்டு, தேனி, கம்பம், போடி, முசிறி, மணப்பாறை, மேட்டுப்பாளையம், சூலூர், கோயம்புத்தூர், அவிநாசி, பொள்ளாச்சி, திருப்பூர், பெரிய நெகமம், காமநாயக்கன்பாளையம், சேலம், ஈரோடு, பெருந்துறை, உடுமலைப்பேட்டை, குடிமங்கலம், முத்தூர், கொடுமுடி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கோவில்பட்டி, இராமேஸ்வரம், இராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல், விருதுநகர், இராஜபாளையம், கன்னியாகுமரி, நாகர்கோவில், தென்காசி, அன்னூர், சத்தியமங்கலம், புதுக்கோட்டை, வால்பாறை என தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கு நேரடி பேருந்து போக்குவரத்து சேவை உள்ளது. மேலும் நகரப்பேருந்துகள் மூலம் பல்லடத்தின் புறநகர் கிராமங்களுக்கு பேருந்து வசதி உள்ளது.
கல்விதொகு
பல்லடத்தின் அருகில் பார்க் கலை மற்றும் அறிவியல் கல்லுரி, தொழில்முறை கல்வி அறக்கட்டளையின் பொறியியல் கல்லுரி அமைந்துள்ளது. கோயம்புத்தூர் அருகேயுள்ளதால் இங்குள்ள மாணவ, மாணவியருக்கு கல்வி பயில வாய்ப்புகள் அதிகமாகவுள்ளன. இதனை தவிர்த்து ஸ்கேட்(SCAD) மற்றும் ப்ரொபஸனல்(Professional) ஆகிய பொறியியல் கல்லூரிகளும் உள்ளன.
பல்லடம் நகராட்சி தேர்தல் (2022)தொகு
- திமுக - 12
- பாஜக - 2
- அதிமுக - 1
- காங்கிரஸ் - 1
- மதிமுக - 1
- சுயேச்சை - 1
பள்ளிகள்தொகு
- அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி
- அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி
- இன்பேன்ட் ஜீசஸ் மேல்நிலைப்பள்ளி.
- பாரதி மேல்நிலைப்பள்ளி.
- புளூ பேர்டு மேல்நிலைப்பள்ளி.
- கண்ணம்மாள் தேசிய மேல்நிலைப்பள்ளி.
- விவேகானந்தா வித்யாலயா மேல்நிலைப் பள்ளி
வங்கிகள்தொகு
அருகில் உள்ள சுற்றுலாத் தலங்கள்தொகு
- உப்பாறு அணை
- ஊட்டி - (112 கி.மீ.): மிகப் புகழ்பெற்ற மலை வாழிடம். அதிக சுற்றுலாப் பயணிகள் மற்றும் மக்கள் பெருக்கத்தால் திணறினாலும் இன்றும் எல்லோரையும் ஈர்க்கிறது.
- ஆனைமலை.
- பழனி - (80 கி.மீ.): குன்றின் மீதமைந்த முருகன் கோவில். ஆறு படை வீடுகளில் ஒன்று.
- அமராவதி அணை: முதலைப் பண்ணை.
- திருமூர்த்தி அணை:பஞ்சலிங்கம் அருவி.
- ஆழியாறு அணை: குரங்கு அருவி.
- டாப் ஸ்லிப் ( இந்திரா காந்தி வன விலங்கு சரணாலயம்).
- வால்பாறை நல்ல மலை வாழிடம்.
- செஞ்சேரிமலை மந்திரகிரி வேலாயுதசுவாமி கோவில்.
மேற்கோள்கள்தொகு
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Palladam". Falling Rain Genomics, Inc. ஜனவரி 30, 2007 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ நகர மக்கள்தொகை பரம்பல்
- ↑ "List Of Banks In Palladam By Apple Maps". duckduckgo.com. 2020-03-22 அன்று பார்க்கப்பட்டது.