மணப்பாறை

இது தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள ஓர் நகராட்சி ஆகும்.

மணப்பாறை (ஆங்கிலம்:Manapparai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் மணப்பாறை வட்டத்தில் இருக்கும் ஒரு முதல்நிலை நகராட்சி ஆகும். மணப்பாறை முறுக்கு மற்றும் மாட்டுச்சந்தைக்கும் மிகவும் புகழ்பெற்றது. மண என்பதற்கு தமிழில், கடினம் (HARD) என்று பொருள்; மணப்பாறை - கடின பாறைகள் கொண்ட நிலம்.

மணப்பாறை
—  முதல் நிலை நகராட்சி  —
வரைபடம்:மணப்பாறை, இந்தியா
மணப்பாறை
இருப்பிடம்: மணப்பாறை

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 10°36′32″N 78°25′24″E / 10.608900°N 78.423300°E / 10.608900; 78.423300
நாடு  இந்தியா
பகுதி சோழ நாடு
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருச்சிராப்பள்ளி
வட்டம் மணப்பாறை வட்டம்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் மா. பிரதீப் குமார், இ. ஆ. ப [3]
நகராட்சி தலைவர் கீதா மைக்கேல் ராஜ்
சட்டமன்றத் தொகுதி மணப்பாறை
சட்டமன்ற உறுப்பினர்

ப. அப்துல் சமது (திமுக (மமக))

மக்கள் தொகை 40,510 (2011)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


208 மீட்டர்கள் (682 அடி)

குறியீடுகள்

புவியியல்

தொகு

இவ்வூரின் புவியியல் ஆள்கூறுகள் 10°36′32″N 78°25′24″E / 10.6089°N 78.4233°E / 10.6089; 78.4233 ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 208 மீட்டர் (682 அடி) உயரத்தில் இருக்கின்றது.

மக்கள்தொகை பரம்பல்

தொகு

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 27 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும், 9,934 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் மக்கள்தொகை 40,510 ஆகும். அதில் 20,139 ஆண்களும், 20,371 பெண்களும் உள்ளனர். இந்நகரத்தின் எழுத்தறிவு 87.8% மற்றும் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 1,012பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 4090 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 951 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 4,849 மற்றும் 73 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 65.67%, இசுலாமியர்கள் 11.3%, கிறித்தவர்கள் 22.95% மற்றும் பிறர் 0.08% ஆகவுள்ளனர்.[4]

கல்வி

தொகு

இங்கு பத்துப் பள்ளிக்கூடங்கள் மற்றும் இரண்டு கல்லூரிகள் உள்ளன.

போக்குவரத்து

தொகு

மணப்பாறை திருச்சிக்கு திண்டுக்கல்லுக்கும் இடையில் தேசிய நெடுஞ்சாலை 83 (பழைய எண் - 45)-இல் அமைந்துள்ளது. மணப்பாறை நகரம், துவரங்குறிச்சி, புதுக்கோட்டை, குளித்தலை, கோவில்பட்டி[5] ஆகிய நகரங்களுடனும் சாலை மார்க்கமாக இணைக்கப்பட்டுள்ளது

பேருந்து போக்குவரத்து

தொகு

மணப்பாறை நகரின் மையப்பகுதியில் ஒரு பேருந்து நிலையம் அமைந்துள்ளது . திருச்சி, திண்டுக்கல், பழனி, தேனி போன்ற நகரங்களுக்கு இங்கிருந்து அடிக்கடி பேருந்து சேவை உள்ளது.

மணப்பாறையிலிருந்து கீழ்காணும் நகரங்களுக்கும் பேருந்து சேவை உள்ளது.

தொடர்வண்டி போக்குவரத்து

தொகு

மணப்பாறை தொடர்வண்டி நிலையம் திருச்சி - திண்டுக்கல் மின்மயமாக்கப்பட்ட இருப்புப்பாதையில் அமைந்துள்ளது .

மேற்கோள்கள்

தொகு
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. மணப்பாறை நகரத்தின் மக்கள்தொகை பரம்பல்
  5. "கோவில்பட்டி". கோவில்பட்டி. பார்க்கப்பட்ட நாள் 2021-02-20.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மணப்பாறை&oldid=4076382" இலிருந்து மீள்விக்கப்பட்டது