கடலூர்

இது தமிழகத்தின் கடலூர் மாவட்ட தலைமையிடமும் மற்றும் சிறப்பு நிலை நகராட்சி ஆகும்.

கடலூர் (Cuddalore), இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கடலூர் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமும், மாநகராட்சியும் ஆகும். இந்த மாநகராட்சி மொத்தம் 45 வார்டுகளைக் கொண்டது.[1]அக்டோபர் 21 கடலூர் மாநகராட்சியாக செயல்பட அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதில் 16 ஊராட்சி அமைப்புக்கள் இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கடலூர்
சர்க்கரை நகரம்
மாநகராட்சி
கடலூரில் உள்ள புகழ்பெற்ற பாடலேசுவரர் கோயில்
கடலூரில் உள்ள புகழ்பெற்ற பாடலேசுவரர் கோயில்
கடலூர் is located in தமிழ் நாடு
கடலூர்
கடலூர்
இந்திய வரைபடத்தில் உள்ள இடம்.
கடலூர் is located in இந்தியா
கடலூர்
கடலூர்
கடலூர் (இந்தியா)
ஆள்கூறுகள்: 11°45′N 79°45′E / 11.75°N 79.75°E / 11.75; 79.75
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கடலூர்
பகுதிசோழ நாடு
அரசு
 • வகைமாநகராட்சி
 • நிர்வாகம்கடலூர் மாநகராட்சி
 • மக்களவை உறுப்பினர்டி. ஆர். வி. எஸ். ரமேஷ்
 • சட்டமன்ற உறுப்பினர்கோ. ஐயப்பன்
 • மாவட்ட ஆட்சியர்கி. பாலசுப்ரமணியம், இ.ஆ.ப.
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்2,80,264
மொழிகள்
 • அலுவல்தமிழ் மொழி
நேர வலயம்இ.சீ.நே. (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீடு607 001-09 / 607 402
தொலைபேசி குறியீடு04142 / 0413(சில பகுதிகளில்)
வாகனப் பதிவுTN-31, TN-91
சென்னையிலிருந்து தொலைவு190 கி.மீ. (118 மைல்)
விழுப்புரத்திலிருந்து தொலைவு45 கி.மீ. (28 மைல்)
புதுச்சேரியிலிருந்து தொலைவு23 கி.மீ. (15 மைல்)
இணையதளம்cuddalore

பெயர் காரணம் தொகு

 • முன்னொரு காலத்தில் இவ்வூர் இருக்கும் இடத்தில் கடலாக இருந்ததாகவும், பின்னாளில் அந்த கடல் நீர் வற்றி நிலப்பரப்பாக உருவாகியதால் இவ்வூருக்கு (கடல்+ஊர்) கடலூர் என்று பெயர் வந்ததாக கருத்து நிலவுகின்றது.[சான்று தேவை]
 • மேலும் சோழர் காலத்தில் கடல் வழி வணிக முறை கப்பல் வழியே இவ்வூரில் நடந்ததாலும். பின்பு வந்த ஆங்கிலேயர்களின் ஆட்சியில் கப்பல் வழி வணிக முறையை துறைமுகம் மூலம் கடல் வழியில் செய்ததால் (Sea Area) கடலூர் என்று பெயர் ஏற்பட்டது.
 • மேலும் அன்றைய காலத்தில் இவ்வூரில் கடலைப் பயிரை அதிக அளவு விவசாயம் செய்து அதை பல நாடுகளுக்கும் பல ஊர்களுக்கும் கப்பல் வழியாகவும், தரை வழி போக்குவரத்தாகவும் கொண்டு செல்லபட்டதால் இவ்வூருக்கு கடலையூர் என்று அழைக்கபட்டது. அந்த பெயரே காலபோக்கில் மாறி கடலையூர்+கடலூர் ஆக மாறியது என்றும் கருத்து நிலவுகின்றது.
 • முற்காலத்தில் கடலூர், கூடலூர் என்றும் அழைக்கப்பட்டது. அதற்கு காரணம் இம்மாவட்டத்தின் வழியே பாயும் பெரும் நதிகளான பெண்ணையாறு, கெடிலம், பரவனாறு ஆகிய மூன்று ஆறுகளும் கூடலாக கூடி கடலில் இணையும் இடம் என்பதால் கூடலூர் என பெயர் பெற்றது. அதுவும் காலபோக்கில் மறுவி கடலூர் என்று மாறியதாகவும் கூறப்படுகின்றது.
 • பிரித்தானிய ஆட்சி காலத்திலிருந்து இது கடலூர் என்று அழைக்கப்பட்டது. கி.பி. 1746 ஆம் ஆண்டில் பிரித்தானியரின் தென்னிந்தியாவுக்கான தலைமையகமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

மாநகராட்சி நிர்வாகம் தொகு

மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா

மாநகராட்சி கமிஷனர் நாவேந்திரன்

மாநகராட்சி அதிகாரிகள்
மேயர் சுந்தரி ராஜா
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்
சட்டமன்ற உறுப்பினர் கோ. அய்யப்பன்
மக்களவை உறுப்பினர் டி. ஆர். வி. எஸ். ரமேஷ்

கடலூர் மாநகராட்சியானது கடலூர் சட்டமன்றத் தொகுதிக்கும் மற்றும் கடலூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.

2019-ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், இம்மக்களவைத் தொகுதியை திராவிட முன்னேற்றக் கழகத்தை (திமுக) சேர்ந்த டி. ஆர். வி. எஸ். ரமேஷ் வென்றார்.

2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், இச்சட்டமன்றத் தொகுதியை திராவிட முன்னேற்றக் கழகத்தை (திமுக) சேர்ந்த கோ. அய்யப்பன் வென்றார்.

2021 ஆம் ஆண்டு ஆகத்து 24-ஆம் தேதி தமிழ்நாடு அரசின் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் திரு கே. என். நேரு அவர்கள் கடலூர் பெருநகராட்சியை மாநகராட்சியாக அறிவித்தார். [1]

இந்தியாவுக்கு வாணிபம் செய்ய வந்த ஆங்கிலேயர்கள் செஞ்சியை ஆண்ட மன்னர்களிடம் இருந்து கடலூரில் இருந்த புனித டேவிட் கோட்டையை வாங்கினார்கள். சென்னை புனித ஜார்ஜ் கோட்டையை பிரெஞ்சுக்காரர்கள் கைப்பற்றிய போது புனித டேவிட் கோட்டைக்கு தங்கள் மாகாணத் தலைநகரை மாற்றி இந்தியாவின் தென் பிராந்தியத்தை இந்தக் கோட்டையில் இருந்து ஆண்டு வந்தார்கள். ஆங்கிலேயர்கள் தங்கள் நாட்டுடனான வாணிபத் தொடர்புகளுக்கு, கடலூர் துறைமுகத்தை அதிக அளவில் பயன்படுத்தியதாக சரித்திரக் குறிப்புகள் தெரிவிக்கின்றன,

கடலூரில், கடலூர் முதுநகர் மற்றும் கடலூர் புதுநகர் என இரண்டு முக்கிய பகுதிகள் உள்ளன. 1866 வரை நகராட்சி அலுவலகம் போன்ற அரசு அலுவலகங்கள் முதுநகர் பகுதியிலேயே இருந்தன. 1866க்கு பிறகு அவை புதுநகர் பகுதியில் உள்ள மஞ்சக்குப்பம் எனப்படும் இடத்திற்கு மாற்றப்பட்டது.

சரித்திரக் குறிப்புகள் படி இவ்வூர் சோழர், பல்லவர், முகலாயர் மற்றும் ஆங்கிலேயர் ஆகியோரால் ஆட்சி செய்யப்பட்டுள்ளது. பாரம்பரியப்படி சைவ சமயக் கோட்பாடுகள் இங்கு பின்பற்றப்படுவதன் மூலம் சோழர்கள் இப்பகுதியை ஆட்சி செய்துள்ளது புலனாகிறது.

ஆங்கிலேய ஆட்சி தொகு

ஆங்கிலேயர் வருகைக்கு முன்னர் இந்நகரம் மைசூர் மன்னர் ஹைதர் அலியின் கட்டுப்பாட்டில் இருந்தது (1780). அவர்கள் கட்டுப்பாட்டில் இந்நகரம் இஸ்லாமாபாத் என வழங்கப்பட்டது. அவரது மறைவிற்கு பிறகு (1782) ஆங்கிலேயர் இந்நகரை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர திட்டமிட்டனர். இதன் விளைவாக 1783-இல் போர் மூண்டது. இப்போருக்குப் பின்னர் கடலூர் நகரை ஆங்கிலேயர் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். ஆங்கிலேயர் இந்நகரை ஒரு பெரிய துறைமுகமாக மாற்றினர். சரக்கு கப்பல் போக்குவரத்திற்கு இந்நகரை பெரிதும் பயன்படுத்தினர். குறிப்பாக நெல்லிக்குப்பத்தில் தாங்கள் துவங்கிய சர்க்கரை ஆலையின் (EID Parrys Ltd (1780)) சரக்குகள் கடலூர் துறைமுகத்தில் கையாளப்பட்டது.

ஆங்கிலேயர்கள் ஆட்சியில் இவ்வூர் ஒரு முக்கிய பங்கு வகித்ததனால், இங்கு சில தெரு மற்றும் ஊர் பெயர்களில் ஆங்கிலப் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

 • புரூக்கீச் பேட்டை : 1767 முதல் 1769 வரை இவ்வூரை ஆட்சி செய்த ஹென்ரி ப்ரூக்கர் எனும் ஆங்கிலேயர் பெயர் வைக்கப்பட்டுள்ளது
 • கமியம் பேட்டை : 1778 களில் இவ்வூரை ஆட்சி செய்த வில்லியம் கம்மிங் என்பவர் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
 • கேப்பர் மலை : 1796 களில் ஆங்கில படைத்தளபதியாக விளங்கிய ப்ரான்சீச் கேப்பர் என்பவர் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
 • வெலிங்டன் தெரு : ஆங்கில ஆட்சியாளராக விளங்கிய வெலிங்டன் துரை என்பவர் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
 • கிளைவ் தெரு : ஆங்கில ஆட்சியை பாரத தேசத்தில் நிருவிய ராபர்ட் கிளைவ் என்பவர் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

புவியியல் தொகு

இவ்வூரின் அமைவிடம் 11°45′N 79°45′E / 11.75°N 79.75°E / 11.75; 79.75 ஆகும்.[2] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 1 மீட்டர் (3 அடி) உயரத்தில் இருக்கின்றது.

மக்கள்தொகை தொகு

மதவாரியான கணக்கீடு
மதம் சதவீதம்(%)
இந்துக்கள்
89.12%
முஸ்லிம்கள்
6.09%
கிறிஸ்தவர்கள்
3.98%
சைனர்கள்
0.27%
சீக்கியர்கள்
0.02%
பௌத்தர்கள்
0.02%
மற்றவை
0.48%
சமயமில்லாதவர்கள்
0.01%

2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 1,73,636 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[3][1] இவர்களில் 85,593 ஆண்கள், 87,768 பெண்கள் ஆவார்கள். மக்களின் சராசரி கல்வியறிவு 88.54% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 93.08%, பெண்களின் கல்வியறிவு 84.15% ஆகும். மக்கள் தொகையில் 15,940 ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

2011 ஆம் ஆண்டு மதவாரியான கணக்கெடுப்பின்படி, கடலூரில் இந்துக்கள் 89.12%, முஸ்லிம்கள் 6.09%, கிறிஸ்தவர்கள் 3.98%, சீக்கியர்கள் 0.02%, பௌத்தர்கள் 0.02%, சைனர்கள் 0.27%, 0.48% பிற மதங்களைப் பின்பற்றுபவர்கள் மற்றும் சமயமில்லாதவர்கள் 0.01% பேர்களும் உள்ளனர்.

போக்குவரத்து தொகு

கடலூர் தொடருந்து மற்றும் சாலை மூலமாக பெரு நகரங்களுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது.

தொடருந்துப் போக்குவரத்து தொகு

 
கடலூர் துறைமுகம் சந்திப்பு

கடலூர் இரண்டு தொடருந்து நிலையங்கள் உள்ளன. தென்னக இரயில்வேயின் மெயின் லைன் எனப்படும் சென்னை, விழுப்புரம், மயிலாடுதுறை, திருச்சி ரயில் பாதையில் கடலூர் உள்ளது. இப்பாதை பயணிகள் போக்குவரத்துக்கு 1877 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. கடலூர் துறைமுகம் சந்திப்பில் இருந்து விருத்தாசலம் வழியாக சேலத்திற்கு ஒரு ரயில் பாதை உள்ளது.

சாலைப் போக்குவரத்து தொகு

கடலூர் நல்ல ரயில் மற்றும் சாலை வலைப்பின்னல் மூலமாக இணைக்கப்பட்டிருக்கும் நகரமாகும். புதுச்சேரி, சிதம்பரம், திருவண்ணாமலை, ஆரணி, வேலூர் மற்றும் விழுப்புரம் போன்ற அருகிலுள்ள நகரங்களில் செல்ல அடிக்கடி பேருந்துகள் உள்ளன. தமிழ்நாட்டில் சென்னை, திருச்சிராப்பள்ளி, சேலம் போன்ற முக்கிய நகரங்கள் செல்ல அடிக்கடி பேருந்துகள் உள்ளன.

சாலை வழியாக அனைத்து மாவட்டத்தின் பெரு நகரங்களுடன் இணைக்கபட்டுள்ளது. கடலூரில் இருந்து மூன்று மாநில நெடுஞ்சாலைகள் துவங்கி பிற நகரங்களை சென்று அடைகின்றன. அவை:

கடலூர் துறைமுகம் தொகு

 
கடலூரில் மீன்பிடி படகுகள்

200 ஆண்டுகள் பழமை வாய்ந்த கடலூர் இயற்கைத் துறைமுகம், இந்தியாவுக்கு வாணிபம் செய்ய வந்த ஆங்கிலேயர்களின் தென் இந்தியாவின் முதல் தலைநகரமாக விளங்கியது. தங்கள் நாட்டுடனான வாணிபத் தொடர்புகளுக்கு, கடலூர் துறைமுகத்தை அதிக அளவில் பயன்படுத்தியதாக சரித்திரக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. தமிழகத்தின் இரண்டாவது பள்ளிகூடம் புனித டேவிட் பள்ளி கி.பி 1717 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்தியாவின் ராபர்ட் கிளைவ் தங்கியிருந்தது கடலூர் தான். இன்றும் கடலூர் துறைமுகத்தில் கிளைவ் தெரு, சைமன் கார்டன், கிங் ஜான் பேட்டை, லாரன்ஸ் ரோடு, புரூகிஸ் பேட்டை, இன்றும் நிலவில் உள்ளது. தமிழகத்தின் முதல் வங்கி இம்பிரியல் வங்கி இங்கு தான் செயல்ப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. பரங்கிப்பேட்டையில் இருந்த இரும்பு உருக்கு ஆலைகளில் தயாரிக்கப்பட்ட இரும்புத் தளவாடங்கள், கடலூர் துறைமுகத்தில் இருந்து கப்பல்கள் மூலம் இங்கிலாந்துக்கு கொண்டு செல்லப்பட்டன. சுதந்திரத்துக்குப் பின் கடலூர் துறைமுகத்தில் இருந்து, சேலத்தில் வெட்டி எடுக்கப்பட்ட இரும்புக் கனிமங்கள், வெள்ளைக் கற்கள் போன்றவை கப்பல்கள் மூலம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.

1985 வரை 150 ஊழியர்களுடன் இத்துறைமுக அலுவலகம் செயல்பட்டது. 500 சரக்கு விசைப் படகுகளுடன், சுமார் 1 லட்சம் தொழிலாளர்களுக்கும், இங்கு வேலைவாய்ப்பு இருந்தது. தற்போது 7 ஊழியர்களுடன் இயங்கிக் கொண்டு இருக்கிறது.

கடலூர் துறைமுகம் தவிர பல துறைமுகங்கள் கடலூர் மாவட்டத்தில் உள்ளன. அவை பின்வருமாறு:

 • திருச்சோபுரம் துறைமுகம்
 • சிலம்பிமங்களம் துறைமுகம்
 • பரங்கிபேட்டை துறைமுகம்

கடலூர் சிறைச்சாலை தொகு

கடலூரில் மத்திய சிறைச்சாலை ஒன்று உள்ளது. இந்த சிறைச்சாலையானது ஆங்கிலேயரால் கட்டப்பட்ட மிகவும் பழமையான சிறைச்சாலை ஆகும். இச்சிறைச்சாலையில் செப்டம்பர் 1918 முதல் 14 திசம்பர் 1918 வரை விடுதலைப் போராட்டத்தின் போது கவிஞரான சுப்பிரமணிய பாரதியார் அடைக்கப்பட்டிருந்தார்.

கல்வி தொகு

கடலூரில் பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகள் பல உள்ளன.

பொறியியல் கல்லூரிகள் தொகு

 • அண்ணா பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி - பண்ருட்டி வளாகம்
 • டாக்டர். நாவலர் நெடுஞ்செழியன் பொறியியல் கல்லூரி
 • கிருஷ்ணசாமி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி
 • எம். ஆர். கே இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி
 • சி.கே பொறியியல் கல்லூரி
 • செயின்ட் ஆணிஸ் காலேஜ் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி

கலை அறிவியல் கல்லூரிகள் தொகு

 • இமாகுலேட் பெண்கள் கல்லூரி
 • ஏரிஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
 • பி. பத்மநாபா ஜெயந்திமாலா கலை மற்றும் அறிவியல் கல்லூரி
 • சி.கந்தசாமி நாயுடு பெண்கள் கல்லூரி
 • அரசு கலைக் கல்லூரி, கடலூர்
 • ஜவஹர் அறிவியல் கல்லூரி
 • கிருஷ்ணசாமி அறிவியல், கலை மற்றும் மேலாண்மை மகளிர் கல்லூரி
 • பெரியார் கலைக் கல்லூரி
 • ஸ்ரீ ராகவேந்திரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி
 • ஸ்ரீ ஆறுமுகம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
 • ஸ்ரீ தங்கம் பெரியசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி
 • புனித வளனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
 • திரு கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரி
 • திருவள்ளுவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி

பள்ளிகள் தொகு

 • புனித வளனார் பள்ளி (கடலூர்)
 • புனித சவேரியர் நடுநிலை பள்ளி (கடலூர் முதுநகர்)
 • புனித பிலோமினால் நடுநிலை பள்ளி (கடலூர் முதுநகர்)
 • புனித அன்னாள் பெண்கள் பள்ளி, (கடலூர்)
 • அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளி (கடலூர் முதுநகர்)
 • கிருஷ்ணசாமி நினைவு பதின்ம உயர்நிலைப் பள்ளி.(கடலூர்)
 • ஏ. ஆர். எல். எம். பதின்ம உயர்நிலைப் பள்ளி.(கடலூர்)
 • புனித டேவிட் உயர்நிலை பள்ளி.(கடலூர் முதுநகர்)
 • புனித ஜோசப் பெண்கள் பதின்ம உயர்நிலை பள்ளி. (கடலூர்)
 • அரசு மேல்நிலை பள்ளி (வண்டிப்பாளையம், கடலூர்)
 • புனித மரியன்னை பெண்கள் பள்ளி, (கடலூர்)

வெள்ளி கடற்கரை தொகு

வெள்ளி கடற்கரை ஆனது, கடலூரிலிருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது, இங்கு நூற்றாண்டு கண்ட கலங்கரை விளக்கம் உள்ளது. அடர்ந்த மாங்குரோவ் காடுகள் அமைந்துள்ளன. வெள்ளி கடற்கரை பகுதியில் பிரிட்டிஷ் உருவாக்கிய முக்கிய கோட்டை புனித டேவிட் கோட்டை உள்ளது. பெரியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இந்த கடற்கரை அருகே அமைந்துள்ளது

தொழில் தொகு

 • நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன்
 • நாகார்ஜூனா ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் பெட்ரோலிய சுத்திகரிப்பு நிறுவனம்
 • குட் எர்த் கப்பல் கட்டுமான துறைமுகம்
 • ஹார்டி மத்திய கடல் எண்ணெய்

கடலூரில் தோன்றிய குறிப்பிடத்தக்கவர்கள் தொகு

சுற்றுலா தலங்கள் தொகு

 
தேவநாதப் பெருமாள் கோயில்

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கடலூர்&oldid=3699547" இருந்து மீள்விக்கப்பட்டது