ஸ்ரீமுஷ்ணம்
ஸ்ரீமுஷ்ணம் (ஆங்கிலம்: Srimushnam) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கடலூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீமுஷ்ணம் வட்டத்தின் தலைமையிடமும், பேரூராட்சியும் ஆகும். ஸ்ரீமுஷ்ணம் நகரம் முந்தைய தென் ஆற்காடு மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.
ஸ்ரீமுஷ்ணம் | |
ஆள்கூறு | 11°24′N 79°25′E / 11.4°N 79.42°E |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கடலூர் |
வட்டம் | திருமுட்டம் வட்டம் / ஸ்ரீ முஷ்ணம் |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | சிபி ஆதித்யா செந்தில் குமார், இ. ஆ. ப [3] |
மக்கள் தொகை • அடர்த்தி |
13,971 (2011[update]) • 887/km2 (2,297/sq mi) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு • உயரம் |
15.75 சதுர கிலோமீட்டர்கள் (6.08 sq mi) • 39 மீட்டர்கள் (128 அடி) |
இணையதளம் | www.townpanchayat.in/srimushnam |
பெயர்
தொகுஇந்த ஊர் சோழர் காலக் கல்வெட்டுகளிலும் அதற்கு பின்னரும் திருமுட்டம் என்றே நீண்ட காலம் குறிப்பிடப்பட்டுள்ளது.[4] நாயக்க மன்னர் ஆட்சிக் காலத்தில் நடந்த சமசுகிருதமயமாக்கத்தின் போதே திருமுட்டம் என்பது ஸ்ரீமுஷ்ணம் என்று மாற்றப்பட்டதாக தெரிகிறது.
அமைவிடம்
தொகுஇது கடலூரிலிருந்து 90 கிமீ தொலைவில் உள்ளது. இதனருகே அமைந்த தொடருந்து நிலையம், 20 கிமீ தொலைவில் உள்ள விருத்தாச்சலம் ஆகும். இதன் கிழக்கில் சிதம்பரம் 36 கிமீ; மேற்கில் காட்டுமன்னார்கோயில் 25 கிமீ; வடக்கில் விருத்தாச்சலம் 20 கிமீ; தெற்கில் ஜெயங்கொண்டம் 24 கிமீ; கும்பகோணம் 53 கிமீ தொலைவில் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
தொகு15.75 ச.கிமீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 57 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி காட்டுமன்னார்கோயில் (சட்டமன்றத் தொகுதி)க்கும், சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[5]
கல்லூரிகள்
தொகு- C.S.ஜெயின் கல்வி குழுமம்
- N.P.V.கலை மற்றும் அறிவியல் கல்லூரி
- B.P.J. கலை மற்றும் அறிவியல் கல்லூரி
- அரசினர் தொழிற்பயிற்சி நிலையம்,திருமுட்டம்
- S.B.G.கலை மற்றும் அறிவியல் கல்லூரி
- சாய்ராம் தொழிற்பயிற்சி நிலையம்
பள்ளிகள்
தொகு- த.வீ.செ.மேல்நிலைப்பள்ளி
- தவ அமுதம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி
- அரசினர் மேல்நிலைப் பள்ளி
- சி.எஸ். ஜெயின் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி
- தேவி ஹைடெக் பள்ளி
- எஸ்.பி.ஜி.வித்யாலயா
- திருஞானம் இன்டர்நேஷனல் பள்ளி
மக்கள் தொகை பரம்பல்
தொகு2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3,277 வீடுகளும், 13,971 மக்கள்தொகையும் கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 75.9% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 990 பெண்கள் வீதம் உள்ளனர். பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 2,639 மற்றும் 78 ஆகவுள்ளனர்.[6]
புவியியல்
தொகுஇவ்வூரின் அமைவிடம் 11°24′N 79°25′E / 11.4°N 79.42°E ஆகும்.[7] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 39 மீட்டர் (127 அடி) உயரத்தில் இருக்கின்றது.
ஆதாரங்கள்
தொகு- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ கடவுள் பன்றி உருவெடுத்த திருமுட்டம் பூவாரகர் திருக்கோயில், தினமணி, 1, சூன், 2017
- ↑ ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சியின் இணையதளம்
- ↑ Srimushnam Population Census 2011
- ↑ "Srimushnam". Falling Rain Genomics, Inc. பார்க்கப்பட்ட நாள் ஜனவரி 30, 2007.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)