சிதம்பரம் மக்களவைத் தொகுதி

தமிழ்நாட்டில் உள்ள மக்களவைத் தொகுதி

சிதம்பரம் மக்களவைத் தொகுதி (Chidambaram Lok Sabha constituency), தமிழ்நாட்டின், 39 மக்களவைத் தொகுதிகளுள், 27வது தொகுதி ஆகும். இத்தொகுதியானது, பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்ட, ஒரு தனித்தொகுதி ஆகும்.

சிதம்பரம் மக்களவைத் தொகுதி
மக்களவைத் தொகுதி
சிதம்பரம் மக்களவைத் தொகுதி (2008 மறுசீரமைப்புக்குப் பிந்தையது)
தொகுதி விவரங்கள்
நிறுவப்பட்டது1957-நடப்பு
ஒதுக்கீடுபட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்
மாநிலம்தமிழ்நாடு
மொத்த வாக்காளர்கள்1,126,828[1]
சட்டமன்றத் தொகுதிகள்148. குன்னம்
149. அரியலூர்
150. ஜெயங்கொண்டம்
157. புவனகிரி
158. சிதம்பரம்
159. காட்டுமன்னார்கோயில் (தனி)

தொகுதி மறுசீரமைப்பு

தொகு

தொகுதி மறுசீரமைப்புக்கு முன், சிதம்பரத்தில் இருந்த சட்டசபைத் தொகுதிகள் - குறிஞ்சிப்பாடி, புவனகிரி, காட்டுமன்னார்கோயில் (தனி), சிதம்பரம், விருத்தாச்சலம், மங்களூர் (தனி) ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இருந்தன. தொகுதி மறுசீரமைப்புக்குப்பின், குன்னம் தொகுதி இதில் இணைக்கப்பட்டது.

சட்டமன்ற தொகுதிகள்

தொகு

இம்மக்களவைத் தொகுதியில் மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளன. அவைகள்:

  1. குன்னம்
  2. அரியலூர்
  3. ஜெயங்கொண்டம்
  4. புவனகிரி
  5. சிதம்பரம்
  6. காட்டுமன்னார்கோயில் (தனி)

மக்களவை உறுப்பினர்கள்

தொகு

சிதம்பரம் தொகுதியில் அதிகபட்சம் காங்கிரசு 5 முறையும், திமுக 4 முறையும், பாமக 3 முறையும், அதிமுக 2 முறையும் வென்றுள்ளன. இதுவரை இந்த தொகுதியில் மக்களவை உறுப்பினர்களாக இருந்தவர்களின் பட்டியல்.

ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி
1957 ஆர். கனகசபை பிள்ளை இந்திய தேசிய காங்கிரசு
1962 ஆர். கனகசபை பிள்ளை இந்திய தேசிய காங்கிரசு
1967 வி. மாயவன் திராவிட முன்னேற்றக் கழகம்
1971 வி. மாயவன் திராவிட முன்னேற்றக் கழகம்
1977 முருகேசன் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
1980 பி. குழந்தைவேலு திராவிட முன்னேற்றக் கழகம்
1984 பி. வள்ளல்பெருமான் இந்திய தேசிய காங்கிரசு
1989 பி. வள்ளல்பெருமான் இந்திய தேசிய காங்கிரசு
1991 பி. வள்ளல்பெருமான் இந்திய தேசிய காங்கிரசு
1996 வி. கணேசன் திராவிட முன்னேற்றக் கழகம்
1998 தலித் எழில்மலை பாட்டாளி மக்கள் கட்சி
1999 இ. பொன்னுசாமி பாட்டாளி மக்கள் கட்சி
2004 இ. பொன்னுசாமி பாட்டாளி மக்கள் கட்சி
2009 தொல். திருமாவளவன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
2014 எம். சந்திரகாசி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
2019 தொல். திருமாவளவன்[2] விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
2024 தொல். திருமாவளவன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

18வது மக்களவைத் தேர்தல்(2024)

தொகு
2024 இந்தியப் பொதுத் தேர்தல் : சிதம்பரம்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
விசிக தொல். திருமாவளவன் 5,05,084 43.28
அஇஅதிமுக எம். சந்திரகாசன் 4,01,530 34.40
பா.ஜ.க பி. கார்த்தியாயினி 1,68,493 14.44
நாதக இரா. ஜான்சிராணி 65,589 5.62
நோட்டா (இந்தியா) நோட்டா 8761 0.75
வெற்றி விளிம்பு 1,03,554 20.50 -
பதிவான வாக்குகள் 11,67,071 77.00
பதிவு செய்த வாக்காளர்கள் 15,10,915
விசிக கைப்பற்றியது மாற்றம்

17வது மக்களவைத் தேர்தல்(2019)

தொகு

வாக்காளர் புள்ளி விவரம்

தொகு
ஆண் பெண் இதர பிரிவினர் மொத்தம் வாக்களித்தோர்
11,53,192

முக்கிய வேட்பாளர்கள்

தொகு

இத்தேர்தலில், 6 வேட்பாளர்கள் கட்சி சார்பாகவும் மற்றும் 7 வேட்பாளர்கள் சுயேட்சையாகவும் என மொத்தம் 13 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் விசிக வேட்பாளர் தொல். திருமாவளவன், அதிமுக வேட்பாளரான, சந்திரசேகரனை 3,219 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.

வேட்பாளர் சின்னம் கட்சி தபால் வாக்குகள் பெற்ற மொத்த வாக்குகள் வாக்கு சதவீதம்
தொல். திருமாவளவன் பானை விசிக 1,828 5,00,229 43.38%
சந்திரசேகர்   அதிமுக 1,578 4,97,010 43.1%
இளவரசன்   அமமுக 89 62,308 5.4%
சிவஜோதி   நாம் தமிழர் கட்சி 142 37,471 3.25%
நோட்டா - - 56 15,535 1.35%
இரவி   மக்கள் நீதி மய்யம் 74 15,334 1.33%

16வது மக்களவைத் தேர்தல்

தொகு

முக்கிய வேட்பாளர்கள்

தொகு
வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள்
எம். சந்திரகாசி அதிமுக 4,29,536
தொல். திருமாவளவன் விடுதலை சிறுத்தைகள் கட்சி 3,01,041
சுதா பாமக 2,79,016
வள்ளல் பெருமான் காங்கிரசு 28,988

வாக்குப்பதிவு

தொகு
2009 வாக்குப்பதிவு சதவீதம்[3] 2014 வாக்குப்பதிவு சதவீதம் [1] வித்தியாசம்
77.30% 79.61% 2.31%


15வது மக்களவைத் தேர்தல் முடிவுகள்

தொகு

13 வேட்பாளர்கள் போட்டியிட்டதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொல். திருமாவளவன் பாமகவின் எ. பொன்னுச்சாமியை 99,083 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.

வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள்
தொல். திருமாவளவன் விடுதலை சிறுத்தைகள் கட்சி 4,28,804
இ. பொன்னுசாமி பாமக 3,29,721
எசு. சசிகுமார் தேமுதிக 66,283
என். ஆர். இராஜேந்திரன் பகுஜன் சமாஜ் கட்சி 5,718
வி. மணிகண்டன் சுயேட்சை 9,799
வி. மருதமுத்து சுயேட்சை 8,367

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Poll Percentage - GELS2014" (PDF). முதன்மை தேர்தல் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு. 2014. பார்க்கப்பட்ட நாள் 29 செப்டம்பர் 2018. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "General elections to the 17th Lok Sabha, 2019 - List of members elected" (PDF). New Delhi: Election Commission of India. 25 May 2019. p. 26. பார்க்கப்பட்ட நாள் 2 June 2019.
  3. "DETAILED RESULTS OF LATEST ELECTIONS ( XLS FORMAT ) - GENERAL ELECTIONS 2009". இந்தியத் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் ஏப்ரல் 30, 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

வெளியிணைப்புகள்

தொகு