விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
'விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (Dalit Panthers or Viduthalai Siruthikal katchi) தமிழ்நாட்டு மாநில அரசியல் கட்சி ஆகும். இது 1972 ஆம் ஆண்டு மகாராட்டிர மாநிலத்தில் ஆரம்பிக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் எழுச்சி இயக்கமான அன்றைய தமிழக தலைவராக இருந்த மதுரையை சார்ந்த மலைச்சாமி அவர்களை படுகொலை செய்யப்பட்ட பிறகு அப்போது மதுரையில் தடயவியல் துறையில் பணியாற்றிக்கொண்டிருந்த திருமாவளவன் மதுரையில் நடந்த மலைச்சாமி அவர்களின் நினைவேந்தல் கூட்டத்தின் முடிவில் ஒருமித்த தலைவராக திருமாவளவன் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் சாதி ஒழிப்பு, சாம்பவர் (பறையர்) மக்கள் எழுச்சி, தமிழ் தேசியம், மக்கள் விடுதலைக்கு திருமாவளவன் விடுதலை சிறுத்தைகள் கட்சி என்று தமிழ் வழி பெயராக மாற்றம் செய்தார். [2][3]
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி | |
---|---|
![]() | |
தலைவர் | முனைவர் தொல். திருமாவளவன் |
பொதுச் செயலாளர் | இரவிக்குமார், சிந்தனை செல்வன் |
தொடக்கம் | 1982 - மலைச்சாமி என்பவரால் ஒடுக்கப்பட்ட சிறுத்தைகள் என்ற பெயரில் தமிழக கிளையாக தொடங்கப்பட்டது. |
கொள்கை | சாதி ஒழிப்பே மக்கள் விடுதலை தமிழ்த் தேசியம் சனாதன ஒழிப்பு |
கூட்டணி | 1) தமாகா - (விசிக சந்தித்த முதல் தேர்தல் 1999-2001) 2) திமுக-பாஜக (தேஜகூ) (2001-2004) 3) விசிக - ஐஜத மக்கள் கூட்டணி (2004-2006) 4) அதிமுக-(ஜனநாயக மக்கள் கூட்டணி) : (2006-2006) 5) திமுக-காங்கிரஸ் (ஐமுகூ) (2009-2014) & (2019-2021 வரை) 6) திமுக-(ஜமுகூ) : (2014-2015) (மமுகூ) (2021-தற்போது வரை) 7) மக்கள் நலக் கூட்டணி (2015-2016) |
மக்களவை உறுப்பினர்கள் எண்., | 2 / 543
|
சட்டமன்ற உறுப்பினர்கள் எண்., (தமிழ்நாடு சட்டப் பேரவை) | 4 / 234 [1] |
இணையதளம் | |
http://www.vck.in/ | |
இந்தியா அரசியல் |
அரசியல் கட்சி வரலாறுதொகு
- இக்கட்சி ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சனைகளை பெரும்பாலும் முன்வைத்து, அவர்களின் ஆதரவை நாடி செயல்படுகின்றது.
- ஒடுக்கப்பட்ட சிறுத்தைகள் அமைப்பிற்கு விடுதலைச் சிறுத்தைகள் என பெயர் மாற்றிய தொல்.திருமாவளவன், நீலம், சிவப்பு வண்ணப் பட்டைகளும் விண்மீனும் கொண்ட கொடியை அவ்வியக்கத்திற்கு என வடிவமைத்து 1990 ஆம் ஆண்டில் ஏப்ரல் 14 ஆம் நாளில் மதுரையில் ஏற்றினார்.
- விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தேர்தலில் ஈடுபட முடிவு செய்த பொழுது, 1999 ஆம் ஆண்டு ஆகத்து 17 ஆம் நாள் தொல். திருமாவளவன் அரசு வேலையைத் துறந்தார்.
கொடிதொகு
விடுதலைச் சிறுத்தைகளுக்கு என நீலமும், சிவப்பும் பட்டைகளாகவும் அவற்றின் நடுவில் விண்மீனும் கொண்ட கொடியை உருவாக்கி அதனை மதுரையில் தொல். திருமாவளவன் 1990 ஆம் ஆண்டு, ஏப்ரல் 14 ஆம் நாள் ஏற்றினார்.[4]
தேர்தல் நிலைப்பாடுதொகு
- விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் முதல் முறையாக தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மூத்த தலைவரான மூப்பனாரின் வேண்டுகோளை ஏற்று 1999 நாடாளுமன்ற தேர்தலில் ஜி. கே. மூப்பனார் தலைமையிலான தமாகா கூட்டணியில் விசிகவிற்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டது.
- அதில் திருமாவளவன் சிதம்பரம் தொகுதியிலும் பெரம்பலூர் தொகுதியில் தடா பெரியசாமியும் போட்டியிட்டு அக்கூட்டணியில் அனைவரும் தோல்வியடைந்தனர்.
- அதன் பிறகு 2001 சட்டமன்ற தேர்தலில் திமுக–பாஜக தலைமையிலான தேஜகூட்டணியில் இடம்பெற்றார். மேலும் இத்தேர்தலில் அன்றைய முதல்வர் கருணாநிதியின் வேண்டுகோளை ஏற்று திமுகவின் அதிகார பூர்வமான உதய சூரியன் சின்னத்தில் 8 தொகுதியில் போட்டியிட்டு கடலூர் மாவட்டத்தில் உள்ள மங்களூர் தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்று திருமாவளவன் தனது விசிக கட்சியின் சார்பில் முதல் முறையாக தமிழக சட்டமன்றத்திற்கு சென்றார்.
- 2004 நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்து விலகி பீகார் முதல்வர் நிதீஷ்குமார் அவர்கள் உருவாக்கியிருந்த ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைமையிலான மக்கள் கூட்டணியில் அக்கட்சியின் அம்பு சின்னத்தில் போட்டியிட்டு திருமாவளவன் உட்பட அனைவரும் தோல்வியடைந்தனர்.
- 2006 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறும் கட்சியாக திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் விசிகவிற்கு தொகுதி பங்கீடு பிரச்சனையால் திமுக தலைவர் மு. கருணாநிதி அன்பு வேண்டுகோளை ஏற்று திருமாவளவன் எதிரணியில் அன்றைய முதல்வர் ஜெயலலிதா அவர்களின் அதிமுக தலைமையிலான ஜனநாயக மக்கள் கூட்டணியில் விசிகவிற்கு 9 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட்டு அதில் இரண்டு தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்று மீண்டும் மங்களூர் தொகுதியில் செல்வப்பெருந்தகையும், காட்டுமன்னார்கோயில் தொகுதியில் து. இரவிக்குமார் என்பவரும் சட்டமன்ற உறுப்பினராக தேர்வாகினார்.
- 2009 நாடாளுமன்ற தேர்தலில் திமுக–காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் விசிக சார்பில் சிதம்பரம், விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு திருமாவளவன் மட்டுமே சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று முதல் முறையாக நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராக தேர்வாகினார்.
- 2011 சட்டமன்ற தேர்தலில் திமுக–காங்கிரஸ் கூட்டணியில் தொடர்ந்த விசிக திருமாவளவன்க்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. ஆனால் அத்தேர்தலில் திமுக கூட்டணியில் பாமகவும் இணைந்ததாலும் அப்போது நடந்து கொண்டிருந்த திமுக ஆட்சியில் முதல்வர் மு. கருணாநிதி மீதான எதிர்ப்பலையால் திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த விசிக போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தோல்வி அடைந்தனர்.
- 2014 நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் விசிக இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு திருமாவளவன் உட்பட திமுக கூட்டணி கட்சிகள் அனைவரும் தோல்வியடைந்தனர்.
- 2016 சட்டமன்ற தேர்தலில் மதிமுக தலைவர் வைகோ அவர்கள் உருவாக்கிய மக்கள் நலக் கூட்டணியில் தேமுதிக தலைவர் விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக நிறுத்தி திருமாவளவன் ஆதரவு பிரச்சாரம் செய்த போது விசிக சார்பில் 25 தொகுதியில் போட்டியிட்டு ஒரு தொகுதியில் கூட அக்கூட்டணி கட்சி தலைவர்கள் வெற்றி பெறவில்லை.
- பின்னர் 2019 நாடாளுமன்ற தேர்தலில் திமுக–காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் விசிகவிற்கு சிதம்பரம் (தனி), விழுப்புரம் (தனி) ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். மேலும் சிதம்பரம் (தனி) தொகுதியில் தொல். திருமாவளவன் 4.6 லட்சம் வாக்குகளை பெற்று வெற்றிபெற்றார்.
- 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் விசிகவிற்கு ஆறு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு அதில் 4 தொகுதிகளில் வெற்றி பெற்றது.[5]
மேற்கோள்கள்தொகு
- ↑ https://indianexpress.com/article/cities/chennai/tamil-nadu-polls-vck-wins-four-seats-including-two-general-constituencies-7301502/
- ↑ ஆர். முத்துக்குமார், தொகுப்பாசிரியர் (2010). தமிழக அரசியல் வரலாறு - பாகம் - 2. கிழக்கு பதிப்பகம். https://books.google.co.in/books?id=5ZldDwAAQBAJ&pg=PT499&dq=%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&hl=en&sa=X&ved=2ahUKEwjx8KL06ovvAhXQF3IKHaEqDPgQ6AEwAHoECAMQAw#v=onepage&q=%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&f=false.
- ↑ Andrew Wyatt, தொகுப்பாசிரியர் (2010). Party System Change in South India: Political Entrepreneurs, Patterns and Processes. Routledge. http://books.google.co.in/books?id=u82MAgAAQBAJ&pg=PT151&dq=dalit+panther+malaisamy&hl=en&sa=X&ei=wBqkU9GcGM7HuATd1oBY&ved=0CB8QuwUwAA#v=onepage&q=dalit%20panther%20malaisamy&f=false.
- ↑ அடுத்த பாய்ச்சல் கோட்டையை நோக்கி!-சூனியர் விகடன் 2015 மே 3
- ↑ வி.சி.க.விற்கு 6 தொகுதிகள்: தனிச் சின்னத்தில் போட்டியிட முடிவு - தினமணி நாளிதழ் செய்தி (04-3-2021)