கு. செல்வப்பெருந்தகை

கு. செல்வப்பெருந்தகை (K. Selvaperunthagai) ஓர் இந்திய அரசியல்வாதியும் , தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தாழ்த்தப்பட்டோர் பிரிவின் மாநில தலைவராக உள்ளார்.[1]

அரசியல் வாழ்க்கை தொகு

இவர் தனது அரசியல் வாழ்க்கையை பூவை மூர்த்தி தலைமையிலான புரட்சி பாரதம் கட்சியில் தொடங்கினர்.பின்பு அதில் இருந்து விலகி கிருஷ்ணசாமி தலைமையிலான புதிய தமிழகம் கட்சியில் இணைத்தார். [2].அதன் பின்பு தொல். திருமாவளவன் தலைமையிலான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இணைத்து அக்கட்சி சார்பாக 2006 ஆம் ஆண்டு தமிழக சட்டசபைக்கான தேர்தலில் மங்களூர் தொகுதியிலிருந்து போட்டியிட்டு தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.அதன் பின்பு திருமாவளவன் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இருந்து விலகி பகுஜன் சமாஜ் கட்சியில் இணைத்து அக்கட்சியின் மாநில தலைவரானர்.பின்பு அக்கட்சியில் இருந்து விலகி தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் இணைத்தார்.[3]தற்போது 2021 ஆம் ஆண்டு நடைபெற்றுள்ள தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திருப்பெரும்புதூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக் குழு தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.[4]

தேர்தல் கட்சி தொகுதி முடிவு பெற்ற வாக்கு வாக்கு பங்கீடு%
2006 விடுதலை சிறுத்தைகள் கட்சி  மங்களூர் வெற்றி 62,217 43.7
2011 இந்திய தேசிய காங்கிரசு  செங்கம் தோல்வி 72,225 40.50
2016 திருப்பெரும்புதூர் தோல்வி 90,285 38.23
2021 இந்திய தேசிய காங்கிரசு திருப்பெரும்புதூர் வெற்றி 1,15,353 43.65

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கு._செல்வப்பெருந்தகை&oldid=3411081" இருந்து மீள்விக்கப்பட்டது