தொல். திருமாவளவன்

இந்திய அரசியல்வாதி

தொல். திருமாவளவன் (Thol. Thirumavalavan, பிறப்பு: ஆகத்து 17, 1962), ஒரு தமிழ்நாட்டு அரசியல்வாதி ஆவார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரான இவர், ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்துக்காக சட்டம், சமூகம், அரசியல் என பல தளங்களில் தன்னை ஈடுபடுத்தி தமிழ்நாடு மக்களின் முக்கியத் தலைவர்களில் ஒருவராக இயங்கி வருகின்றார்.

முனைவர் தொல். திருமாவளவன்
இந்திய மக்களவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
30 மே 2019
முன்னையவர்எம். சந்திரகாசி
தொகுதிசிதம்பரம்
பதவியில்
31 சூலை 2009 – 17 மே 2014
முன்னையவர்இ. பொன்னுசாமி
பின்னவர்எம். சந்திரகாசி
தொகுதிசிதம்பரம்
தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினர்
பதவியில்
14 மே 2001 – 3 பிப்ரவரி 2004
முதல்வர்ஜெ. ஜெயலலிதா
முன்னையவர்எஸ். புரட்சிமணி
பின்னவர்வெ. கணேசன்
தொகுதிமங்களூர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு17 ஆகத்து 1962 (1962-08-17) (அகவை 61)
அங்கனூர், அரியலூர் மாவட்டம், தமிழ்நாடு
குடியுரிமைஇந்தியர்
தேசியம்தமிழர்
அரசியல் கட்சி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
வாழிடம்சென்னை

அரசியல் வாழ்வு

தொகு

ஒடுக்கப்பட்ட சிறுத்தைகள் என்னும் இயக்கத்தின் தமிழகப் பிரிவை உருவாக்கிய அ. மலைச்சாமி என்பவர் கொலை செய்யப்பட்டபோது, மதுரை தடய அறிவியல் துறையில் பணியாற்றிக்கொண்டு இருந்த தொல். திருமாவளவன் மதுரையில் மலைச்சாமிக்கு நினைவேந்தல் கூட்டம் நடத்தினார். அக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி அந்த அமைப்பின் அமைப்பாளாராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஒடுக்கப்பட்ட சிறுத்தைகள் அமைப்பிற்கு விடுதலைச் சிறுத்தைகள் எனப் பெயர் மாற்றிய திருமாவளவன் நீலம் மற்றும் சிவப்பு வண்ணப் பட்டைகளும் விண்மீனும் கொண்ட கொடியை அந்த இயக்கத்திற்காக வடிவமைத்து 1990ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் நாள் மதுரையில் அக்கொடியை ஏற்றினார்.[1]

விடுதலைச் சிறுத்தைகள் இயக்கம் தேர்தலில் ஈடுபட முடிவு செய்தபோது 1999 ஆம் ஆண்டு ஆகத்து 17 ஆம் நாள் தொல். திருமாவளவன் தனது அரசுப் பணியைத் துறந்தார்.[1]

இவர் 2009 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் நடந்த மக்களவைத் தேர்தலில், சிதம்பரம் தொகுதியிலிருந்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிட்டு, இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3]

இவர் 2014 ஆம் ஆண்டுகளில் நடந்த மக்களவைத் தேர்தலில், இதே சிதம்பரம் தொகுதியில்,திமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிட்டு, அதிமுக வேட்பாளரான சந்திரகாசியிடம் தோல்வியடைந்தார்.

2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் திமுக - காங்கிரஸ் தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இணைந்து சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டார்.இத்தேர்தலில் திருமாவளவன் அவர்கள் 5,00,229 வாக்குகள் பெற்று (அதிமுக வேட்பாளரை விட 3219 வாக்குகள் வித்தியாசம்) வெற்றி பெற்றார்.

அரசியல் கொள்கை

தொகு

சாம்பவர் (பறையர்) மற்றும் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் உரிமைகளுக்காகப் போராட்டம் நடத்துதல், தனித்தமிழ் வளர்ச்சிக்கு உதவுதல், சாதிய அடக்குமுறைக்கு எதிராக கருத்திடுதல், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும் தனித்தமிழீழக் கொள்கைக்கும் ஆதரவளித்தல், இந்துத்துவ கொள்கையினை எதிர்த்தல் போன்றவை அவரது முக்கியக் கொள்கைகளாகும்.

படைப்புகள்

தொகு

சாதீய அடக்குமுறையினை எதிர்த்தல், ஈழ விடுதலை ஆதரவு, இந்துத்துவ கருத்துகளை எதிர்த்தல் போன்ற கொள்கையினை வலியுறுத்தும் விதமாக முனைவர் திருமாவளவன் பல கட்டுரைகள் மற்றும் நூல்களை வெளியிட்டுள்ளார். அவற்றில் சில:

 • அத்துமீறு
 • தமிழர்கள் இந்துக்களா?
 • ஈழம் என்றால் புலிகள், புலிகள் என்றால் ஈழம்
 • இந்துத்துவத்தினை வேரறுப்போம்
 • அமைப்பாய் திரள்வோம்

இவற்றில் சில ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

நூல்கள்

தொகு
 • முள்வலி
 • அமைப்பாய்த் திரள்வோம்
 • கருத்தியலும் நடைமுறையும் (கட்டுரைத் தொகுப்பு)

திரைப்படங்கள்

தொகு

திருமாவளவன் தமிழ்த் திரைப்படங்கள் சிலவற்றிலும் முக்கிய பாத்திரமேற்று நடித்துள்ளார். இவரது முதல் திரைப்படம் அன்புத்தோழி ஆகும். இதில் இவர் கிளர்ச்சித் தலைவர் வேடம் ஏற்று நடித்துள்ளார்.[4] இப்பாத்திரம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப் பிள்ளை பிரபாகரனை மாதிரியாக வைத்து அமைக்கப்பட்டதாக விமர்சிக்கப்படுகின்றது. இது தவிர கலகம், என்னைப்பார் யோகம் வரும், மின்சாரம் ஆகிய திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

இவற்றையும் பார்க்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
 1. 1.0 1.1 அடுத்த பாய்ச்சல் கோட்டையை நோக்கி! சூனியர் விகடன் 2015 மே 3
 2. "நள்ளிரவு வரை நீடித்த இழுபறி - சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் வெற்றி". NEWS7 (மே 24, 2019)
 3. "தமிழ்நாடு தேர்தல் முடிவுகள் 2019 - 38 தொகுதிகள் வெற்றியாளர்களின் முழு பட்டியல்".பிபிசி தமிழ் (மே 23, 2019)
 4. Anbu Thozhi cleared by censors oneindia[தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தொல்._திருமாவளவன்&oldid=3995385" இலிருந்து மீள்விக்கப்பட்டது