திருமாவளவன் உண்ணாநிலைப் போராட்டம்

இந்திய நடுவண் அரசு இலங்கை தமிழர் படுகொலையை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் சாகும் வரை உண்ணாநிலைப் போராட்டத்தை வியாழன், சனவரி 15, 2009 அன்று தொடங்கினார். சென்னையை அடுத்த மறைமலை நகரில் நான்கு நாட்களாக நடத்தி வந்த உண்ணாநிலைப் போராட்டத்தை தொல். திருமாவளவன் ஞாயிற்றுக்கிழமை ஜனவரி 18, 2009 அன்று முடித்துக் கொண்டார்[1].

வன்னிப் போரில் பெருமளவு தமிழ் மக்கள் இடம் பெயர்ந்து, குண்டுத் தாக்குதலுக்கு உள்ளாகி, உணவு, மருந்து, தங்குமிடம் இன்றி அகதியாகி உள்ளனர். விடுதலைப் புலிகளின் சுருங்கிய கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் மிகவும் இக்கட்டான நிலையில் பட்டினிச்சாவை எதிர்நோக்கி 300 000 வரையான மக்கள் உள்ளனர். இலங்கை அரசு பொதுமக்களை சற்றும் பொருட்படுத்தாமல் மூர்க்கமாக தாக்கி வருகிறது. இப்படி "அழிவின் விளிம்பில் ஐந்து லட்சம் தமிழர்கள். இனவெறிப் போரை நிறுத்தி அமைதிப் பேச்சுவார்த்தை நடத்து" என இந்திய நடுவண் அரசைக் கோரி திருமாவளவன் பட்டினிப் போரை முன்னெடுத்தார். இலங்கையின் போர் முன்னெடுப்புக்கு இந்திய அரசு படைத்துறை, பொருளாதார உதவிகளை வழங்குகியதாக கருதப்பட்டது.

ஆதரவு

தொகு

உட்பட பல அமைப்புகள் ஆதரவு தெரிவித்தன.[2][3][4]

இவற்றையும் பார்க்க

தொகு

ஈழப் போராட்ட
காரணங்கள்
தனிச் சிங்களச் சட்டம்
பெளத்தம் அரச சமயமாக்கப்படல்
இலங்கைக் குடியுரிமைச் சட்டம்
கல்வி தரப்படுத்தல் சட்டங்கள்
திட்டமிட்ட சிங்கள குடியேற்றம்
அரச பயங்கரவாதம்
யாழ் பொது நூலக எரிப்பு
சிங்களமயமாக்கம்
வேலைவாய்ப்பில் இனப்பாகுபாடு
சிங்களப் பேரினவாதம்
ஆட்கடத்தல்களும் காணாமல் போதல்களும்
அரச சித்திரவதை
பாலியல் வன்முறை
இலங்கைத் தமிழர் இனவழிப்பு
இலங்கையில் மனித இனத்துக்கெதிரான குற்றங்கள்

இலங்கை இனப்பிரச்சினைக் காலக்கோடு

மேற்கோள்கள்

தொகு
  1. உண்ணாநிலை போராட்டத்தை முடித்தார் திருமாவளவன்
  2. திருமளவாளன் காலம்வரம்பற்ற உண்ணாவிரதம் - தினமணி
  3. கைது செய்தாலும் உண்ணாவிரதத்தை கைவிடமாட்டேன்; திருமாவளவன் அறிவிப்பு[தொடர்பிழந்த இணைப்பு] - மாலைமலர்
  4. Tamil Nadu CPI, BJP leaders slam Delhi’s inaction

வெளி இணைப்புகள்

தொகு