திராவிடர் கழகம்

திராவிடக் கட்சி

திராவிடர் கழகம் என்பது ஈ. வெ. இராமசாமி என்பவரால் சுயமரியாதை, பகுத்தறிவு, சாதி எதிர்ப்பு, பெண் உரிமைகள், இறை மறுப்பு, பெண் உரிமைகள் ஆகிய கொள்கைகளை முன்னிறுத்தி தொடங்கப்பட்ட சமூக இயக்கமாகும். இதுவே முதலாவது திராவிடக் கட்சி. இதன் நிறுவனத் தலைவர் ஈ. வே. ராமசாமி ஆவார். இக்கட்சி தற்காலத் தமிழ்நாட்டின் வரலாற்றைச் செதுக்குவதில் முக்கியப் பங்கு வகித்தது. தற்போது முந்திய வீச்சு இல்லாவிடினும் தொடந்து செயற்பட்டு வருகிறது. எடுத்துகாட்டாக மூடநம்பிக்கைகளைப் பரிசோதனை முறையில் முறியடிப்பது இவர்கள் மேற்கொள்ளும் ஒரு விழிப்புணர்வு நடவடிக்கை ஆகும். கழகத்தின் தற்போதைய தலைவர் கி. வீரமணி ஆவார். இதன் பொதுச் செயலாளர் கலி. பூங்குன்றன். இதன் தலைமை நிலையச் செயலாளர் கி. வீரமணியின் மகன் அன்புராஜ் கி. வீரமணி ஆவார். இக்கழகம் விடுதலை எனும் நாளிதழை வெளியிடுகிறது.

திராவிடர் கழகம்
தலைவர்கி. வீரமணி
நிறுவனர்ஈ. வெ. இராமசாமி
தலைவர்கி. வீரமணி
பொதுச் செயலாளர்கலி. பூங்குன்றன்
தலைமை நிலையச் செயலாளர்அன்புராஜ் கி. வீரமணி
தொடக்கம்ஆகத்து 27, 1944 (1944-08-27)
முன்னர்நீதிக் கட்சி
தலைமையகம்சென்னை
செய்தி ஏடுவிடுதலை
கொள்கைசுயமரியாதை
பகுத்தறிவு
இறைமறுப்பு
சமய மறுப்பு
சமூக நீதி
பெண்ணுரிமை
சாதி எதிர்ப்பு
கட்சிக்கொடி
Flag DK.png
இணையதளம்
http://www.dravidarkazhagam.org

பிணக்குகள்தொகு

திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி தனது மகன் அன்புராஜை திராவிடர் கழகத்தின் தலைமை நிலையச் செயலராக 2009-ஆம் ஆண்டில் நியமித்தார்.[1] இச்செயலை எதிர்த்த திராவிடர் கழக மூத்த தலைவர் விடுதலை இராஜேந்திரன் இயக்கத்திலிருந்து வெளியேறி பெரியார் திராவிடர் கழகத்தை நிறுவினார்.

மேற்கோள்கள்தொகு

  1. "Periyarites see Veeramani doing an MK". The New Indian Express (2001-09-11). பார்த்த நாள் 2012-09-11.


"https://ta.wikipedia.org/w/index.php?title=திராவிடர்_கழகம்&oldid=3200159" இருந்து மீள்விக்கப்பட்டது