கலி. பூங்குன்றன்
கலி. பூங்குன்றன் (பிறப்பு: 15 ஆகஸ்டு 1939) பகுத்தறிவாளர், எழுத்தாளர் மற்றும் கவிஞர் ஆவார். திராவிடர் கழகத் துணைத்தலைவர் மற்றும்விடுதலை நாளிதழின் பொறுப்பாசிரியரும் ஆவார்.'மின்சாரம்' என்னும் பெயரில் இவர் விடுதலையில் எழுதும் கட்டுரைகள் மிகவும் புகழ் பெற்றவை ஆகும்.ஓய்வு ஊதியம் பற்றி எல்லாம் கவலைப்படாமல்,அரசாங்க வேலையை விட்டுவிட்டு,திராவிடர் கழகத்தில் முழு நேரமாகப் பணியாற்ற வந்தவர்.கடந்த 45 ஆண்டுகளுக்கு மேலாக விடுதலையின் பொறுப்பு ஆசிரியராகப் பணியாற்றுபவர்."தகவல் களஞ்சியம்" எனத் தோழமைக் கட்சித்தலைவர்களால் அழைக்கப்படுபவர்.கவிஞர் கலி. பூங்குன்றன் தனக்கு அடுத்து திராவிடர் கழகத்தின் தலைவராக செயல்படுவார் எனத் திராவிடர் கழகத்தின் தலைவர் கி. வீரமணி தஞ்சாவூரில் 23 பிப்ரவரி 2019 அன்று நடைபெற்ற திராவிடர் கழக மாநில மாநாடு மற்றும் சமூக நீதி மாநாட்டின் போது செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.[1]
கலி. பூங்குன்றன் | |
---|---|
பெரியார் திடல், வேப்பேரி, சென்னை | |
தனிப்பட்ட விவரங்கள் | |
அரசியல் கட்சி | திராவிடர் கழகம் |
வாழிடம் | சென்னை, தமிழ்நாடு |
இணையத்தளம் | http://www.dravidarkazhagam.org |
பின்புலமும் பணிகளும்
தொகுமயிலாடுதுறையில் பிறந்த இவரின் இயற்பெயர் கலியமூர்த்தி. கால்நடைத் துறையில் 22 ஆண்டுகள் பணியாற்றி, கால்நடை விரிவாக்க அலுவலராகப் பொறுப்பில் இருந்து விருப்ப ஒய்வு பெற்று திராவிடர் கழகத்தில் முழுநேர இயக்கப் பணியில் ஈடுபட்டார்.
பெரியார் ஈ. வெ. இராமசாமி, மணியம்மையார் மற்றும் கி. வீரமணி ஆகியோர் தலைமையில் தொடர்ந்து இயங்கி வருபவர். விடுதலை (இதழ்)யில் பகுத்தறிவுக் கருத்துகளையும் தமிழின நலம் சார்ந்த எண்ணங்களையும் கட்டுரைகள் வழியாகப் பல ஆண்டுகள் எழுதி வருகிறார். நூல்களும் அவரால் எழுதப்பட்டுள்ளன. மின்சாரம், மயிலாடன் என்னும் புனை பெயர்களில் விடுதலையில் எழுதி வருகிறார். அவருடைய இரண்டு பெண் மக்களுக்கும் சாதி மறுப்புத் திருமணம் செய்து வைத்தார்.
- திராவிடர் கழகத்தின் அணுகுமுறை
- சாதி தீண்டாமை ஒழிப்பு அறப்போர் ஏன்?
- தந்தை பெரியாரும் டாக்டர் அம்பேத்கரும் (தொகுப்பு)
- பிள்ளை-யார்?
- இயக்க வரலாற்றில் இராமாயண எதிர்ப்பு
- பெரியார் ஒரு வாழ்க்கை நெறி
- தந்தை பெரியார் அறிவுரை 100
- மார்க்சிஸ்டுகளின் சிந்தனைக்கு
- செங்கற்பட்டில் சுயமரியாதைச் சூறாவளி
- மனித வாழ்க்கைக்கு தேவை நாத்திகமா? ஆத்திகமா?
- சமுதாய இயக்கமா ஆர் எஸ் எஸ் ?
- சாமியார்களின் திருவிளையாடல்
- அனைத்து சாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை ஏன்?
- ஒற்றைப்பத்தி பாகம்-1
- ஒற்றைப்பத்தி பாகம்-2
- ஒற்றைப்பத்தி பாகம்-3
- ஒற்றைப்பத்தி பாகம்-4
- பார்ப்பனப் புரட்டுக்குப் பதிலடி
- பெரியார் இல்லாவிட்டால் தமிழகம் (முதல் பதிப்பு 2017)
சான்றுகள்
தொகு- ↑ “எனக்குப் பின் கலி.பூங்குன்றன்தான் தலைவர்” - கி.வீரமணி அறிவிப்பு
- ↑ "கலி. பூங்குன்றன் எழுதிய நூல்கள்". Archived from the original on 2021-07-21. Retrieved 2021-07-21.