திராவிட மாணவர் கழகம்
திராவிட மாணவர் கழகம் என்பது திராவிடர் கழகத்தின் மாணவர் அமைப்பு ஆகும். குடந்தை அரசினர் கல்லூரியில் தண்ணீர்ப் பானை வைப்பதில், பார்ப்பனர்களுக்குத் தனி தண்ணீர்ப் பானை, மற்றவர்களுக்கு தனி தண்ணீர்ப் பானை என்றிருந்ததை போட்டு உடைத்து - அதிலிருந்து முளைத்ததுதான் திராவிட மாணவர் கழகம். திராவிட மாணவர் கழகமானது 1944லில் திராவிடர் கழகம் உருவாக்கப்படுவதற்கு முன்பே உருவான ஒன்று ஆகும். தவமணிராசன் என்பவர் 1943-ஆம் ஆண்டில் கும்பகோணத்தில் திராவிடர் மாணவர் கழகத்தைத் தொடங்கினார்.[1][2] 1.12.1943 அன்று அறிஞர் அண்ணா திராவிடர் மாணவர் கழகத்தைத் துவக்கி வைத்தார்.[3] இக்கழகத்தைத் தோற்றுவித்தவர்களுள் முக்கியமானவர்கள் தவமணிராசன், கவிஞர் கருணானந்தம், பூண்டி கோபால்சாமி (செங்குட்டுவன்), கோ. லட்சுமணன், இராமதாசு போன்றவர்கள் ஆவார்கள்.[4] 1944-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், கும்பகோணத்தில் திராவிட மாணவர் முதல் மாநாடு நடத்தப்பட்டது.[5][6] "மாணவக் கண்மணிகளே, திராவிடர் மாணவர் கழகத்தில் சேரவேண்டும் ஏன்?" என்னும் நூல் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியால் எழுதப்பட்டு, திராவிடர் கழகப் பதிப்பாக வெளியிடப்பட்டது.[7]
தோற்றம்தொகு
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
திராவிட மாணவர் கழகம் | |
---|---|
தலைவர் | கி. வீரமணி |
நிறுவனர் | ஈ. வெ. இராமசாமி |
துணைத்தலைவர் | கலி. பூங்குன்றன் |
தொடக்கம் | ஆகத்து 27, 1944 |
முன்னர் | நீதிக் கட்சி |
தலைமையகம் | பெரியார் திடல், வேப்பேரி சென்னை |
செய்தி ஏடு | திராவிட நாற்று |
கொள்கை | சுயமரியாதை பகுத்தறிவு சமூக நீதி பெண்ணுரிமை இறை மறுப்பு சமய மறுப்பு சாதி எதிர்ப்பு |
கட்சிக்கொடி | |
இணையதளம் | |
http://www.dravidarkazhagam.org |
மாணவர் கிளர்ச்சிதொகு
குடந்தை அரசு கல்லூரியில் பார்ப்பன மாணவர்களுக்கும், பார்ப்பனர் அல்லாத மாணவர்களுக்கும் குடிநீர் பருகுவதற்குத் தனித்தனியே தண்ணீர் பானைகள் வைக்கப்பட்டு இருந்தன. கல்லூரியோடு இணைந்த மாணவர் தங்கும் விடுதியிலும் அவ்வாறே குடிநீர்ப் பானைகள் வைக்கப்பட்டன. தனித்தனிக் குவளைகளும் வைக்கப்பட்டன.[8] இந்த நிலையில் முதலாம் ஆண்டு படித்து வந்த சம்பந்தம் என்ற மாணவர் பார்ப்பனருக்கு என வைத்திருந்த பானையில் குடிநீரைக் குவளையில் எடுத்து பருகிவிட்டார் என பார்ப்பன மாணவர்கள் கடுமையாக வசைபாடிக் கண்டித்ததுடன் கல்லூரி முதல்வர் விடுமுறை எடுத்துக் கொண்டு சென்று விட்டதால் விடுதி காப்பாளர் கணேச அய்யர் என்பவரிடம் புகார் கூறினார். அவர் உடனே மாணவர் சம்பந்தம் புரிந்த செயல் குற்றமே என கூறி அபதாரம் விதித்து விட்டார். அந்த செய்தியை அறிந்ததும் திராவிட இனமானக் கொள்கையை இரும்புப் பிடியைக் கொண்டிருந்த தவமணிராசன் கொதித்து எழுந்தார்.
மாணவர் சம்பந்தத்திற்கு அபதாரம் விதித்த பார்ப்பன விடுதி காப்பாளரைக் கண்டித்து கல்லூரி மாணவர்களைத் திரட்டி ஒரு அறப்போராட்டத்தை அவர் தொடங்கினார்.
இரண்டில் ஒரு பானையை உடைத்து அனைவரும் ஒரே பானையால் தான் தண்ணீர் குடிக்க வேண்டும் என்றனர்.
குடந்தை நகர் சுயமரியாதை தோழர்கள் பலரும் கல்லூரி மாணவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு அளித்து, கிளர்ச்சி நடத்த முனைந்து விட்டனர்.
வெளியூர் பயணத்தை முடித்துக் கொண்டு வந்த கல்லூரி முதல்வர் தனி குடிநீர் பானையால் எந்த அளவுக்கு மாணவர் போராட்டம் குடந்தை நகரையே கொந்தளிக்க செய்து விட்டது என்பதை உணர்ந்து,சம்பந்தம் கட்ட வேண்டிய அபதாரத்தை இரத்தே செய்ததுடன், பார்ப்பனருக்கு என இனிமேல் தனியே தண்ணீர்ப் பானை வைக்ககூடாது எனவும் ஆணை பிறப்பித்தார்.
தோற்றம்தொகு
தவமணிராசன் உள்ளிட்ட குடந்தை கல்லூரி மாணவர்கள் தொடங்கிய அறப்போராட்டம், இந்து மதத்தின் தீண்டாமைச் சாதிக் கொடுமையை ஒழிக்கும் மாபெரும் திராவிட மாணவர் புரட்சியாகவே வெற்றிக் கனியை ஈட்டித் தந்தது.
குடந்தை கல்லூரி மாணவர்கள் இடையே தோன்றிய திராவிட இன மான எழுச்சியைத் தக்க முறையில் பயன்படுத்த குடந்தை நகரில் உள்ள காங்கேயன் பூங்காவில் மாணவர்கள் ஒன்று கூடி, புதிய அமைப்பு ஒன்றை உருவாக்குவது குறித்து முடிவு செய்தனர்.
பிறகு 1943 ஆம் ஆண்டு தவமணிராசன் மற்றும் கருணானந்தம் ஆகிய இருவரும் புதிய மாணவர் அமைப்பை உருவாக்கி அதற்கு "திராவிட மாணவர் கழகம்" என பெயர் சூட்டினர்.
அந்த மாணவர் கழகத்தை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றியவர் பேரறிஞர் அண்ணா அவர்களே! [9]
அந்த நிகழ்வானது 1.12.1943 ஆம் நாள் குடந்தை நகரில் நடைபெற்றது.
மாணவர் கழகத்தின் முன்னோடிகள்தொகு
1.தவமணிராசன்
2.கருணானந்தம்
3.பழநிவேல்
4.சொக்கப்பா
5.ஜி.இலட்சுமணன்
6.பொத்தனூர் க.சண்முகம்
7.பூண்டிகோபால் சாமி என்ற செங்குட்டுவன்
மாணவர் கழகத் தோழர்களுக்கு பெரியார்தொகு
மாணவர்கள் நல்ல ஜோல்சர்கள்; நல்ல ஜெனரல்கள் அல்ல. மாணவர்கள் நல்ல சிப்பாய்கள்; நல்ல கமாண்டர்கள் அல்ல.
ஆகவே, நல்ல சிப்பாய்களைப்போல், அவர்கள் பல கட்டுத்திட்டங்களுக்கு உட்பட்டு நடக்க வேண்டும்.
நீங்கள் உங்களை சாதாரண மனிதர்களாக நினைத்துக் கொள்ளவேண்டும். உங்கள் வாழ்க்கை சவுகரியங்களையும் எவ்வளவு குறைத்துக் கொள்ள முடியுமோ, அவ்வளவு குறைத்துக் கொள்ளவேண்டும்.
உங்களுக்கு மிகமிக அடக்கம் வேண்டும். நீங்கள் மிகமிக தன்னலமற்றவர்களாக இருக்கவேண்டும்.
இப்படிப்பட்ட மாணவர்களால்தான் ஏதாவது உருப்படியான நன்மை ஏற்படும்.
பொதுத் தொண்டுக்கு வந்தவுடன், தங்களை பெரிய மேதாவியாக நினைத்துக் கொள்ளக்கூடியவர்களும், தங்கள் தகுதிக்கு மேலாக, போக போக்கியம், பெருமை தங்களுக்குக் கிடைக்கவேண்டிய விகிதாச்சாரத்திற்கு மேலாக மதிப்பு தங்களுக்குக் கிடைக்கவேண்டும் என்று நினைப்பவர்களும் எந்த இயக்கத்திலும் இருக்கத் தகுதியற்றவர்கள் ஆவார்கள். அப்படிப்பட்டவர்களால், பொதுவாழ்க்கையில் எப்போதும், எந்தக் கொள்கையிலும் நிலைத்திருக்க முடியாது.
பொதுநலத் தொண்டர் எவருக்கும் உள்ளத்தில் அடக்கம் வேண்டும்; தான் என்கிற அகம்பாவம் கூடாது.
திராவிடர் கழகம் கடைப்பிடித்துள்ள கொள்கைகள் மிகக் கஷ்டமானவை.
திராவிடர் கழகம் கூறும் பரிகாரங்கள் கூட மிகமிகக் கசப்பானவைகளாகத்தான் இருக்கும்.
"இக்கொள்கைகள் பெரும்பாலும் மாணவர்களால்தான் ஈடேற்றப்பட வேண்டும் "
21.2.1948 அன்று திருச்சியில் நடைபெற்ற வடமண்டல திராவிடர் மாணவர் கழக மாநாட்டில் மாணவர் கழக தோழர்களுக்கு பெரியார்ஆற்றிய கண்டிப்பு உரை [10]
திராவிட மாணவர் மாகாண மாநாடுதொகு
1946ஆம் ஆண்டு பிப்ரவரி 23, 24ஆம் தேதிகளில் திராவிட நாடு திராவிட மாணவர்கள் மாநாடு நீடாமங்கலத்தில் நடைபெற்றது.
திராவிட மாணவர் மாகாண மாநாடு இதுவே முதல் மாநாடு எனலாம். மாநாட்டுக்கு தமிழ் நாட்டின் பல்வேறு பக்கங்களில் இருந்தும் வந்திருந்த மக்கள் சுமார் 5000 பேர்களுக்கு மேலிருந்தாலும் காலேஜ் வகுப்பு, எஸ்.எஸ்.எல்.சி. வகுப்பு மாணவர்கள் தொகை 2000 பேர்களுக்குக் குறையாது என்றே சொல்லலாம். மொத்தத்தில் கருப்புச் சட்டையுடன் வந்தவர்கள் எண்ணிக்கை 1500 இளைஞர்களுக்கு மேலேயே இருக்கும், இதில் மாணவிகளும் வந்து கலந்து கொண்டிருந்தது குறிப்பிடத் தகுந்ததாகும்.
மாநாட்டுத் தலைவர் பேசும்போது இனி நடைபெறும் நாடு,மொழி கிளர்ச்சிகளில் மக்கள் சிறைசெல்ல நேருமானால் பெரியாரைச் சிறை செல்ல விடக்கூடாது என்றும், அது ஆசிரியர் மாணவர் உலகத்திற்கு இழிவு என்றும், நாமே சாதாரண மக்களுக்கும் முன்னதாகச் சிறையில் இருக்க வேண்டும் என்றும் நாடு, இனம், மொழி இவைகளைக் காப்பாற்றுவதற்கு சிறை செல்லவும், உயிர் கொடுக்கவும், வாய்க்கும் வாய்ப்பே மக்களுக்கு ஏற்படும் எல்லா நல்வாய்ப்புகளையும் விட மேலானது என்றனர்.
பிறகு பெரியார் அவர்கள் அங்கிருந்த ஆசிரியர்களையும், மாணவர்களையும் பாராட்டிப் பேசியபோது, “இங்குள்ள ஆசிரியர்களின் உணர்ச்சி போலும், ஊக்கம் போலும், வெளியில் உள்ள மற்ற ஆசிரியர்களது உணர்ச்சியும் பெற்றோர்களது உணர்ச்சியும் இருக்குமானால், நான் மாணவர்களை இந்த முயற்சியில் சிறிதும் கலந்துகொள்ள இடம் கொடுக்க மாட்டேன்’’ என்றார்.[11]
மேற்கோள்கள்தொகு
- ↑ https://www.keetru.com/index.php/2016-10-05-08-08-14/nimirvom-dec17/34858-2018-04-03-10-40-30
- ↑ https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_(%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88).pdf/149
- ↑ https://ta.wikisource.org/wiki/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF
- ↑ https://www.murasoli.in/details.php?news_id=1043
- ↑ https://www.hindutamil.in/news/opinion/columns/513056-dravidar-kazhagam.html
- ↑ https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=600378
- ↑ https://www.periyarbooks.in/contributors/veeramani.html?SID=adttb3rh930vj4ii5ktk26ojb4&dir=asc&limit=5&mode=list&order=position&publishers=59
- ↑ https://www.viduthalai.page/2021/09/blog-post_59.html?m=1
- ↑ https://ta.wikisource.org/wiki/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF
- ↑ கி.வீரமணி. திராவிடர் கழக வரலாறு - தொகுதி 1. திராவிட கழக (இயக்க) வெளியீடு. பக். 129 மற்றும் 130.
- ↑ http://www.unmaionline.com/index.php/4556-------.html