சனவரி 18
நாள்
(ஜனவரி 18 இலிருந்து வழிமாற்றப்பட்டது)
<< | சனவரி 2024 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | 6 | |
7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |
28 | 29 | 30 | 31 | |||
MMXXIV |
சனவரி 18 (January 18) கிரிகோரியன் ஆண்டின் 18 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 347 (நெட்டாண்டுகளில் 348) நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
- 350 – மக்னென்டியசு ரோமப் பேரரசன் கொன்ஸ்டன்சை அகற்றி தன்னை மன்னனாக அறிவித்தான்.
- 474 – ஏழு வயது இரண்டாம் லியோ பைசாந்தியப் பேரரசனாக முடி சூடினான். ஆனாலும், இவன் பத்து மாதங்களில் உயிரிழந்தான்.
- 1486 – இங்கிலாந்து மன்னர் ஏழாம் என்றி யோர்க் இளவரசி எலிசபெத்தைத் திருமணம் புரிந்தார்.
- 1535 – எசுப்பானிய வெற்றி வீரர் பிரான்சிஸ்கோ பிசாரோ பெருவின் தலைநகர் லிமாவை நிர்மாணித்தார்..
- 1591 – சியாம் மன்னர் நரேசுவான் பர்மா இளவரசர் மின்சிட் சிராவுடன் தனியாக மோதி அவனைக் கொன்றார். இந்நாள் இன்றும் தாய்லாந்தில் அரச தாய் படைத்துறைகள் நாள் எனக் கொண்டாடப்படுகிறது.
- 1701 – புருசியாவின் மன்னாராக முதலாம் பிரெடெரிக் முடி சூடினார்.
- 1778 – அவாய் தீவுகளைக் கண்டறிந்த முதலாவது ஐரோப்பியர் கப்டன் ஜேம்ஸ் குக் இதற்கு "சான்ட்விச் தீவுகள்" எனப் பெயரிட்டார்.
- 1788 – இங்கிலாந்தில் இருந்து 736 கைதிகளைக் கொண்ட முதலாவது தொகுதி ஆஸ்திரேலியாவின் பொட்டனி விரிகுடாவைச் சென்றடைந்தது.
- 1806 – இடச்சு கேப் குடியேற்றம் பிரித்தானியாவிடம் சரணடைந்தது.
- 1824 – பிரித்தானிய இலங்கையின் ஆளுநராக சேர் எட்வர்ட் பார்ன்ஸ் நியமிக்கப்பட்டார்.[1]
- 1871 – வடக்கு ஜெர்மனி கூட்டமைப்பு மற்றும் தெற்கு ஜெர்மன் மாநிலங்கள் ஆகியன ஜெர்மன் பேரரசு என்ற பெயரில் இணைந்தன. முதலாம் வில்லெம் அதன் முதலாவது மன்னனான்.
- 1896 – எக்ஸ்றே இயந்திரம் முதற் தடவையாக எச். எல். சிமித் என்பவரால் காட்சிப்படுத்தப்பட்டது.
- 1911 – யூஜின் எலி என்பவர் தனது விமானத்தை சான் பிரான்சிஸ்கோ விரிகுடாவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பென்சில்வானியா என்ற கப்பலின் மீது இறக்கினார். கப்பலொன்றில் தரையிறக்கப்பட்ட முதலாவது விமானம் இதுவாகும்.
- 1919 – முதலாம் உலகப் போர்: பாரிஸ் அமைதி உச்சி மாநாடு பிரான்சு, வேர்சாயில் ஆரம்பமானது.
- 1929 – லியோன் திரொட்ஸ்கி சோவியத் ஒன்றியத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
- 1941 – இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியப் படைகள் இத்தாலியக் கிழக்கு ஆப்பிரிக்காவில் போரைத் தொடங்கியது.
- 1944 – இரண்டாம் உலகப் போர்: மூன்று ஆண்டுகளாக நாசிகளால் முற்றுகையிடப்பட்டிருந்த லெனின்கிராட் நகரை சோவியத் படைகள் மீட்டெடுத்தன.
- 1945 – இரண்டாம் உலகப் போர்: போலந்தின் கிராக்கோவ் நகரம் செஞ்சேனையினால் விடுவிக்கப்பட்டது.
- 1960 – அமெரிக்காவில் வர்ஜீனியா மாநிலத்தில், வானூர்தி ஒன்று வயல் நிலமொன்றில் வீழ்ந்ததில் அதில் யனம் செய்த 50 பேரும் உயிரிழந்தனர்.
- 1960 – கொங்கோவின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் முக்கிய வட்டமேசை மாநாடு பெல்ஜியத்தில் நடைபெற்றது.
- 1969 – அமெரிக்க விமானம் ஒன்று சாண்டா மொனிக்கா விரிகுடாவில் வீழ்ந்ததில் 38 பேர் கொல்லப்பட்டனர்.
- 1974 – இசுரேலுக்கும், எகிப்துக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதை அடுத்து யோம் கிப்பூர்ப் போர் முடிவுக்கு வந்தது.
- 1976 – லெபனான் கிறித்தவர்களின் குடிப்படைகள் பெய்ரூட் கரந்தீனாவில் குறைந்தது 1,000 பேரைக் கொன்றனர்.
- 1977 – பொசுனியா எர்செகோவினாவில் யுகோசுலாவியாவின் பிரதமர் ஜெமால் பிஜேதிச், அவரது மனைவி, மற்றும் ஆறு பேர் விமான விபத்தில் உயிரிழந்தனர்.
- 1977 – ஆத்திரேலியாவின் சிட்னியின் புறநகர்ப் பகுதியான கிரான்வில் என்ற இடத்தில் பாலம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் அதன் மேல் சென்று கொண்டிருந்த தொடருந்து கீழே வீழ்ந்ததில் 83 பேர் உயிரிழந்தனர்.
- 1993 – அமெரிக்காவின் அனைத்து 50 மாநிலங்களிலும் மார்ட்டின் லூதர் கிங் நாள் அதிகாரபூர்வமாக அனுட்டிக்கப்பட்டது.
- 1995 – 17,000 ஆண்டுகள் பழமையான குகை ஓவியங்கள் தெற்கு பிரான்சில் கண்டுபிடிக்கப்பட்டன.
- 1997 – போர்ஜ் அவுஸ்லாண்ட் என்பவர் அண்டார்க்டிக்காவை துணை எதுவுமின்றி முதன் முதலில் கடந்து சாதனை படைத்தார்.
- 2002 – சியேரா லியோனியில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது.
- 2003 – ஆத்திரேலியா தலைநகர் கன்பராவில் இடம்பெற்ற காட்டுத்தீயில் 4 பேர் கொல்லப்பட்டு 500 வீடுகள் முற்றாக எரிந்து சேதமடைந்தன.
- 2005 – உலகின் மிகப்பெரும் ஜெட் வானூர்தி ஏர்பஸ் ஏ380 பிரான்சின் துலூசில் அறிமுகப்படுத்தப்பட்டது.
- 2007 – மேற்கு ஐரோப்பாவின் 20 நாடுகளில் தாக்கிய கிரில் சூறாவளியினால் ஐக்கிய இராச்சியத்தில் 14 பேர், மற்றும் செருமனியில் 13 பேருமாக மொத்தம் 44 பேர் உயிரிழந்தனர்.
பிறப்புகள்
- 1752 – ஜான் நாசு, பிரித்தானியக் கட்டிடக் கலைஞர் (இ. 1835)
- 1854 – குமாரசாமிப் புலவர், ஈழத்துப் புலவர் (இ. 1922)
- 1892 – ஒலிவர் ஹார்டி, அமெரிக்க நகைச்சுவை நடிகர் (இ. 1957)
- 1921 – நாம்பு ஓச்சிரோ, நோபல் பரிசு பெற்ற சப்பானிய-அமெரிக்க இயற்பியலாளர் (இ. 2015)
- 1927 – எஸ். பாலச்சந்தர், தமிழக நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், பாடகர், வீணை இசைக்கலைஞர் (இ. 1990)
- 1936 – ஜோன் ரூட், கென்ய சுற்றுச்சூழல் ஆர்வலர், திரைப்படத் தயாரிப்பாளர் (இ. 2006)
- 1952 – வீரப்பன், தமிழக சந்தனக் கடத்தல்காரர் (இ. 2004)
- 1955 – கெவின் கோஸ்ட்னர், அமெரிக்க நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர்
- 1955 – எரிக் சொல்ஹெய்ம், நோர்வே அரசியல்வாதி
- 1969 – டேவ் பாடிஸ்டா, அமெரிக்க மற்போர் வீரர், நடிகர்
- 1971 – அமி பர்கர், அமெரிக்க வானியலாளர்
- 1971 – பெப் கார்டியோலா, எசுப்பானியக் கால்பந்து வீரர்
- 1971 – பின்யாவாங்கா வையினையினா, கென்ய எழுத்தாளர், ஊடகவியலாளர்
- 1972 – வினோத் காம்ப்ளி, இந்தியத் துடுப்பாளர்
- 1980 – ஜேசன் செகெல், அமெரிக்க நடிகர்
இறப்புகள்
- 1862 – ஜான் டைலர், அமெரிக்காவின் 10வது அரசுத்தலைவர் (பி. 1790)
- 1917 – அன்ட்ரூ மறீ, தென்னாப்பிரிக எழுத்தாளர், மற்றும் கிறித்துவப் பாதிரியார் (பி. 1828)
- 1936 – இரட்யார்ட் கிப்ளிங், நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய எழுத்தாளர் (பி. 1865)
- 1936 – ஜான் வுட்ரோஃப், பிரித்தானிய கீழ்த்திசைவாதி (பி. 1865)
- 1955 – சாதத் ஹசன் மண்ட்டோ, பாக்கித்தானிய எழுத்தாளர் (பி. 1912)
- 1963 – ப. ஜீவானந்தம், தமிழகப் பொதுவுடமைக் கட்சித் தலைவர் (பி. 1906)
- 1982 – உவாங் சியான்பான், சீன வரலாற்றாளர், மானிடவியலாளர் (பி. 1899)
- 1995 – அடால்ஃப் புடேனண்ட், நோபல் பரிசு பெற்ற செருமானிய வேதியியலாளர் (பி. 1903)
- 1996 – என். டி. ராமராவ், தென்னிந்திய நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், ஆந்திராவின் 10வது முதலமைச்சர் (பி. 1923)
- 2003 – ஹரிவன்சராய் பச்சன், இந்தியக் கவிஞர், நூலாசிரியர் (பி. 1907)
- 2005 – எஸ். எம். கார்மேகம், இலங்கை மலையக எழுத்தாளர் (பி. 1939)
- 2006 – வை. சச்சிதானந்தசிவம், ஈழத்து ஓவியர், எழுத்தாளர், குறும்பட இயக்குநர், எழுத்தாளர் (பி. 1940)
- 2016 – தி. ச. சின்னத்துரை, சிங்கப்பூர் உயர் நீதிமன்ற நீதிபதி (பி. 1930)
- 2018 – காசிநாத், தென்னிந்திய கன்னட நடிகர், இயக்குநர் (பி. 1951)
சிறப்பு நாள்
மேற்கோள்கள்
- ↑ John H. Martyn, Notes on Jaffna, American Ceylon Mission Press, தெல்லிப்பழை, இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003) பக். 13