அயூத்தியா இராச்சியம்
அயூத்தியா இராச்சியம் (Ayudhya) அல்லது அயூத்தயா (Ayutthaya Kingdom, தாய்: อาณาจักรอยุธยา), என்பது கிபி 1351 முதல் 1767 வரை ஆட்சியில் இருந்த சயாமிய இராச்சியத்தைக் குறிக்கும். இதன் தலைநகர் அயூத்தியா ஆகும். [1]
அயூத்தியா இராச்சியம் Kingdom of Ayutthaya อาณาจักรอยุธยา | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
1351–1767 | |||||||||||
தலைநகரம் | அயூத்தியா | ||||||||||
பேசப்படும் மொழிகள் | தாய் | ||||||||||
சமயம் | தேரவாத பௌத்தம், இந்து சமயம், கத்தோலிக்க திருச்சபை, இசுலாம் | ||||||||||
அரசாங்கம் | அரசர் | ||||||||||
மன்னர் | |||||||||||
• 1350–69 | முதலாம் இராமாதிபோதி | ||||||||||
• 1590–1605 | நரெசுவான் | ||||||||||
• 1656–88 | நராய் | ||||||||||
• 1758–67 | ஐந்தாம் போரோமராச்சா | ||||||||||
சட்டமன்றம் | சாட்டு சாதொம் | ||||||||||
வரலாற்று சகாப்தம் | நடுக் காலம், மறுமலர்ச்சி | ||||||||||
• முதலாம் இராமாதிபோதி முடிசூடல் | 1351 | ||||||||||
• சுகோத்தாய் இராச்சியத்துடன் இணைவு | 1468 | ||||||||||
• பர்மாவின் அடிமை | 1564, 1569 | ||||||||||
• பர்மாவில் இருந்து விடுதலை | 1584 | ||||||||||
• சுகோத்தாய் வம்சத்தின் முடிவு | 1629 | ||||||||||
1767 | |||||||||||
|
இவ்விராச்சிய ஆட்சியாளர்கள் வெளிநாட்டு வணிகர்களுடன் மிகுந்த நட்புறவைக் கொண்டிருந்தனர். சீனர், இந்தியர், சப்பானியர், பாரசிகர் முதல் ஐரோப்பியர்கள் வரை தலைநகருக்கு வெளியே கிராமங்களை அமைக்க அனுமதிக்கப்பட்டனர். 16ம் நூற்றாண்டில் இவ்விராச்சியம் கிழக்குப் பகுதியிலேயே ஒரு பெரும், வளமிக்க நாடாக வெளிநாட்டு வணிகர்களால் கணிக்கப்பட்டது. மன்னர் நராய் (1656–88) பிரான்சின் பதினான்காம் லூயியுடன் மிக நெருங்கிய உறவைக் கொண்டிருந்தான்.