கெமர் பேரரசு

கெமர் பேரரசு (Khmer empire) என்பது தென்கிழக்காசியாவில் தற்போதைய கம்போடியாவை மையமாகக் கொண்டிருந்த சோழ பேரரசு ஆகும். 9ஆம் நூற்றாண்டில் தென் தமிழக பாண்டியர்கள் வழி வந்த சென்லா பேரரசு அகற்றப்பட்டு தற்போதைய லாவோஸ், தாய்லாந்து, மற்றும் வியட்நாம் உள்ளிட்ட கெமர் ஆட்சி தொடங்கப்பட்டது. கெமர் ஆட்சியின் ஆரம்ப காலத்தில் தமிழர்களின் கலாசார, அரசியல், மற்றும் வர்த்தகத் தொடர்புகளைக் கொண்டிருந்தது. பின்னர் கெமரின் தெற்கு எல்லையில் பரவியிருந்த சோழ வம்சத்தின் தொடர்புகளைக் கொண்டிருந்தது.

12ஆம் நூற்றாண்டின் இறுதியில் கெமர் பேரரசு
கிபி 1200களில் ஆசியா மற்றும் ஐரோப்பாவின் நிலவரை படம், கெமர் பேரரசின் பொற்காலம்

அங்கோர் கெமர் பேரரசின் தலைநகராக விளங்கியது. அங்கு பத்து லட்சம் மக்கள் வாழ வீடுகளும், கோயில்களும் கட்டப்பட்டன. கெமர் பேரரசின் சமயங்களாக வீர சைவம் சமயமும், மகாயாண பௌத்தமும் விளங்கின. இன்னர் தேரவாத பௌத்தம் அறிமுகமானது.

கி.பி. 12ஆம் நூற்றாண்டில் இரண்டாம் சூரியவர்மன் கட்டிய அங்கூர் வாட் கோயில் கெமர் கலையின் ஒரு போற்றத்தக்க அம்சமாகும். இதன் அணியிட்ட சுற்றுச் சுவர்களில் இராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களின் கதைகள் சித்தரிக்கப்பட்டுள்ளன. மேலும் அக்காலத்து அரசிகளின் வாழ்க்கை நிகழ்ச்சிகளும் சித்தரிக்கப்பட்டுள்ளன. இந்தக் கோயில்களைச் சுற்றி அணைகளும், நீர்ப்பாசனக் கால்வாய்களும் அமைக்கப்பட்டுள்ளன.

15ஆம் நூற்றாண்டின் இடையில் தாய்லாந்துப் படை கெமர் அரசை வீழ்த்தியது. இதே காலகட்டத்தில் தான் சோழர் சாம்ராஜ்யம் முற்றிலும் வீழ்த்தப்பட்டது

கெமர் பேரரசர்களின் காலக்கோடு

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கெமர்_பேரரசு&oldid=3683523" இலிருந்து மீள்விக்கப்பட்டது