சென்லா (ஆங்கிலம்: Chenla; சீனம்: 真腊; கெமர்: ចេនឡា; வியட்நாமியம்: Chân Lạp) என்பது கம்போசம் என்ற கம்போடியா நாட்டில் தமிழர் வழி வந்தவர்களால் நிருவப்பட்ட ஓர் அரசாகும். சென்லா அரசு பூனான் (Funan) அரசை வீழ்த்தி வந்ததாகும். இந்த அரசு கிபி 525 முதல் கிபி 802 வரை இருந்தது.[1]

சென்லா
Chenla
ចេនឡា
550–802
700 CE இல் தென்கிழக்காசியாவின் பிரதான நிலப்பகுதி
700 CE இல் தென்கிழக்காசியாவின் பிரதான நிலப்பகுதி
நிலைஇராச்சியம்
தலைநகரம்
 • சம்பாசாக்
 • பவபுரம்
 • இசனபுரம்
 • சம்பாபுரம்
பேசப்படும் மொழிகள்கெமர் மொழி; சமசுகிருதம்
சமயம்
இந்து, பௌத்தம்
அரசாங்கம்முடியாட்சி
வரலாற்று சகாப்தம்இடைக்காலம்
• பூனான் அடிமை இராச்சியம்
550
• சுயி அரசமரபு தூதரகம்
616/617
• விடுதலை
627
• பிரிவுகள்; சென்லா நீர்ப்பகுதி-சென்லா நிலப்பகுதி
c. 707
802
நாணயம்உள்நாட்டு நாணய்ம
முந்தையது
பின்னையது
[[பூனான்]]
[[கெமர் பேரரசு]]
தற்போதைய பகுதிகள்கம்போடியா
இலாவோசு
தாய்லாந்து
வியட்நாம்

சென்லா அரசு கம்போடியா, இலாவோசு, தென் தாய்லாந்து வரை பரவியிருந்தது. சென்லா அரசின் தலைநகரமாக இந்திரபுரி விளங்கியது. சென்லா அரசு இடைக் காலத்தில் கடல் அரசு (Water Chenla); நில அரசு (Land Chenla) என இரண்டாகப் பிரிந்ததாகச் சீன வரலாற்றுக் குறிப்புகள் முலம் தெரிய வருகின்றது.[2]

வரலாறுதொகு

சென்லா அரசு கம்போசத்தின் கடைசி பூனான் அரசர் செயவர்மனின் மருமகனான ருத்திரவர்மனால் நிறுவப்பட்டது. ருத்திரவர்மனே இந்திரபுரியைத் தலைநகராக உருவாக்கினார். இவர் தன் தம்பி குணவர்மனை அதிகாரப் போட்டியின் காரணமாகக் கொன்றார். ருத்திரவர்மனின் மகன்கள் சம்பா நாட்டுக்கு எதிரான போரில் இறந்தனர்.[2]

இதனால் ருத்திரவர்மன் பல்லவ நாட்டில் இருந்து வந்து மருமகனான பீமவர்மனை அடுத்த அரசனாக்கினார். இந்த பீமவர்மன் பாவவர்மன் (Bhavavarman I) என்றும் அறியப்பட்டார். பீமவர்மன் குணவர்மனின் பேரனும் வீரவர்மனின் மகனுமான சித்திரசேனன் உதவி கொண்டு சாம்ப அரசை வீழ்த்தினர்.

சித்திரசேனன்தொகு

முதலில் நட்பாக இருந்த சித்திரசேனன் பின் நாளில் தனது அரசு உரிமையை வாள் கொண்டு பீமவர்மன் இடம் இருந்து பெற்றான். சித்திரசேனனுக்கு பாதி நாடே வளங்கப்பட்டது, சித்திரசேனன் மகேந்திரவர்மன் என்ற பெயர் கொண்டு அரசேறினான்.

இதன் பின் சென்லா அரசு கடலரசு நில அரசு என இரண்டானது. பீமவர்மன் வழி வந்தவர்கள் நில அரசையும் மகேந்திரவர்மன் வழி வந்தவர்கள் கடலரசையும் ஆண்டனர் என சீன வரலாற்று புத்தகங்கள் தெரியப் படுத்துகின்றன.

நந்திவர்மன்தொகு

 
ஈசனபுரத்தில் சிதந்த ஒரு கோட்டை வாயில்

பீமவர்மன் வழி வந்த கடவேச அரிவர்மனின் நான்காம் மகன் பரமேசுவரவர்மனே தமிழகத்தில் பல்லவன் இரண்டாம் பரமேசுவரவர்மன் இறப்புக்கு பின்னர் வாரிசு இல்லாத காரணத்தால் அமைச்சர்களால் அழைத்து செல்லப்பட்டு நந்திவர்மன் என்ற பெயரில் அரசன் ஆனான்.

கடவேச அரிவர்மனின் மகன்கள் விசய அரசு உடனான போரில் இறக்க கடலரசு அரசர் சந்திரவர்னின் மகன் முதலாம் செயவர்மன் நாட்டை ஒன்றாக இணைத்து ஆண்டார். முதலாம் செயவர்மனின் மருமகன் பரமேசுவர்மனே இரண்டாம் செயவர்மன் என்ற பெயர் கொண்டு கெமர் அரசை நிறுவி சென்லா அரசை வீழ்த்தினர்.

அரசர்கள்தொகு

ருத்திரவர்மன் (கிபி 525-575)

நில அரசுதொகு

 • பீமவர்மன் (பாவவர்மன்) - (கிபி 575-605) - (Bhavavarman I)
 • புத்தவர்மன் (கிபி 605-638)
 • ஆதித்யவர்மன் (கிபி 638-650)
 • இராண்யவர்மன் (கிபி 650-678)
 • கோவிந்தவர்மன் (கிபி 678-705)
 • செயவர்மன் (கிபி 705-764)
 • கடவேச அரிவர்மன் (கிபி 764-780)

(கடவேச அரிவர்மன் தன் நான்காம் மகன் பரமேசுவரவர்மனை; தமிழகத்தில் ஆண்டு வந்த பல்லவருக்கு வாரிசு இல்லாத காரணத்திற்காக அனுப்பி வைத்தார்)

கடலரசுதொகு

 • குணவர்மன் (அரசர் அல்ல)
 • வீரவர்மன் (அரசர் அல்ல) - (Viravarman)
 • மகேந்திரவர்மன் ( கிபி 600-640)
 • முதலாம் ஈசானவர்மன் ( கிபி 640-657)
 • இரண்டாம் மகேந்திரன் ( கிபி 657-670)
 • இரண்டாம் ஈசானவர்மன் ( கிபி 670-708)
 • இரண்டாம் பீமவர்மன் ( கிபி 708-748)
 • சந்திரவர்மன் ( கிபி 748-785)
 • முதலாம் செயவர்மன் ( கிபி 785-802)

மேற்கோள்கள்தொகு

 1. Glover (2004), ப. 100.
 2. 2.0 2.1 Vickery (1994), ப. 6.

நூல்கள்தொகு

 • Coedes, Georges (1943). "Études Cambodgiennes XXXVI: Quelques précisions sur la fin de Fou-nan". Bulletin de l'École Française d'Extrême-Orient 43: 1–8. doi:10.3406/befeo.1943.5733. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சென்லா&oldid=3533577" இருந்து மீள்விக்கப்பட்டது