உருத்திரவர்மன்
உருத்திரவர்மன் (ஆங்கிலம்: Rudravarman; கெமர்: រុទ្រវម៌្ម, எளிய சீனம்: 留陁跋摩; பின்யின்: Liútuóbámó) என்பவர் கெமர் பேரரசின் (Khmer Empire) முன்னோடியான பூனான் இராச்சியத்தின் (Kingdom of Funan) கடைசி அரசர் ஆவார்.
உருத்திரவர்மன் Rudravarman រុទ្រវម៌្ម | |
---|---|
பூனான் அரசர் | |
ஆட்சிக்காலம் | 514 - 540 |
முன்னையவர் | செயவர்மன் கவுந்தினியா (Jayavarman Kaundinya) |
பின்னையவர் | குலபிரபாவதி (Kulaprabhavati) (529–550)[1] முதலாம் பவவர்மன் (550-590)[1] |
மரபு | கவுந்தினியா |
அரசமரபு | வர்மன் |
தந்தை | செயவர்மன் கவுந்தினியா |
தாய் | செயவர்மன் கவுந்தினியாவின் வைப்பாட்டி[1] |
மதம் | இந்து சமயம் |
இவர் செயவர்மன் கவுந்தினியா (Jayavarman Kaundinya) மன்னருக்கும்; அவரின் துணைவியார்களில் ஒருவருக்கும் பிறந்த மூத்த மகன் உருத்திரவர்மன். இவரின் தாயார் அரச வம்சாவளியைச் சேர்ந்தவர் அல்ல. பாரம்பரிய வழியில் ஆட்சி செய்ய உருத்திரவர்மனுக்கு உரிமை இல்லை.
பொது
தொகுஅவரின் தந்தை செயவர்மன் கவுந்தினியாவின் மரணத்திற்குப் பிறகு, கி.பி. 514-இல், அரியணையில் அமர வேண்டிய தன் சகோதரரான இளவரசர் குணவர்மனைக் (Prince Gunavarman) கொன்றார். இளவரசர் குணவர்மன் இராணி பிரபாவதிக்குப் பிறந்தவர்.
குணவர்மனின் தாயாரின் இயற்பெயர் அக்கா கெசி (Akka Hesy); அரசப் பெயர் இராணி பிரியா நியாங் கோல் பிரபாவதி (Preah Neang Kol Praphavati); சுருக்கமாக இராணி குலபிரபாவதி (Queen Kulaprabhavati). கி.பி. 517- வரையில் உருத்திரவர்மன் தன் மாற்றாந்தாய் இராணி குலபிரபாவதியுடன் அதிகாரப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார். இராணி குலபிரபாவதி, உருத்திரவர்மனின் எதிர்ப்பாளர்களால் ஆதரிக்கப்பட்டு வந்தார்.
வியாதபுர நகரம்
தொகுஉருத்திரவர்மனின் தவறான ஆட்சியின் காரணமாக, 6-ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் பூனான் இராச்சியம் வீழ்ச்சியடையும் வரையில், பூனான் இராச்சியம் கொந்தளிப்பு நிலையில் இருந்தது.[2]
கி.பி. 517, 519, 520, 530, 535, 539-ஆம் ஆண்டுகளில் சீனாவிற்கு தன் தூதர்களை உருத்திரவர்மன் அனுப்பினார். சே யுன் பாவோ (Che Yun Pao) எனும் இறையாண்மை துறவியைப் பூனானுக்கு அனுப்ப சீனப் பேரரசர் லியாங் ஊ (King Leang Ou) ஒப்புக்கொண்டால், அவருக்கு புத்தரின் முடியைக் கொடுக்கவும் முன்வந்தார்.
உருத்திரவர்மன் வியாதபுர நகரத்தில் (Vyathapura) இருந்து ஆட்சி செய்ததாகத் தொடக்கக்காலச் சீன ஆவணங்கள் விவரிக்கின்றன. தி இன் பாவோ (Te Yunpao) எனும் சீனப் பாதிரியார், புத்தரின் தலை முடியைச் சீனாவுக்கு எடுத்துச் செல்ல பூனானுக்கு வந்தார் என்றும் பதிவு செய்துள்ளன.
உருத்திரோசரம்
தொகுகி.பி. 515-ஆம் ஆண்டு உருத்திரவர்மன் சீன மன்னருக்கு அன்பளிப்புகள் அனுப்பினார். அவற்றில் கிளிங்கன் சிக் பள்ளியில் (Klingon Sik School) இருந்து மணம் மிக்க மரத்தால் செய்யப்பட்ட ஒரு சிலையையும் சீன மன்னருக்கு அனுப்பினார். உருத்திரவர்மன் காலத்தில் பௌத்தம் அரச மதமாக இருந்தது. இருப்பினும் இந்து மதம் வலுவான செல்வாக்கைத் தக்க வைத்துக் கொண்டது.
கி.பி 551-ஆம் ஆண்டு கே. 54 கல்வெட்டின் படி, உருத்திரவர்மன் ஆட்சியின் போது, சிவலிங்கக் கல் (Shivalinga Stone) மற்றும் உருத்திரோசரம் (Rutrosram) எனும் துறவிகள் மண்டபம் கட்டப்பட்டதாக அறிய முடிகிறது. அத்துடன் விளாவினர் (Vilavinay) என்ற துறவியால் சிவலிங்க நினைவுச்சின்னமும் கட்டப்பட்டதாக அந்தக் கல்வெட்டு கூறுகின்றது.
சான்றுகள்
தொகு- ↑ Kenneth T. So. "Preah Khan Reach and The Genealogy of Khmer Kings" (PDF). Cambosastra. Archived from the original (PDF) on 2021-07-08. பார்க்கப்பட்ட நாள் March 2, 2017.
- ↑ Jacobsen, Trudy, Lost goddesses: the denial of female power in Cambodian history, NIAS Press, Copenhagen, 2008
மேலும் காண்க
தொகு- Bruno Dagens, Khmer, publishing company Les Belles Lettres, January 2003, 335 p. ( பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9782251410203 ), chap. I ("The Khmer Country, History"), p. 24-25
- (in) George Cœdès and Walter F. Vella ( eds. ) ( Trans. From French by Susan Brown Cowing) The Indianized States of Southeast Asia, University of Hawaii Press, May 1970, 424 p. ( பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780824800710 ), p. 56-60
- Paul Pelliot, " The Funan ," Bulletin of the French School of the Far East, vol. 3, n o 1,1903, p. 270-271 ( ISSN 1760-737X, DOI 10.3406 / befeo.1903.1216 )