முதலாம் ஈசானவர்மன்

கம்போடிய மன்னன்

ஈசானவர்மன் (Isanavarman I) (ஈசானசேனன்) அல்லது ஈசேனாக்சியாண்டைய் 7ஆம் நூற்றாண்டில் சென்லா இராச்சியத்தின் அரசனாக இருந்தான். இது பின்னர் கெமர் பேரரசாக மாறியது. இவன் முதலாம் மகேந்திரவர்மனின் மகனும் அவனது வாரிசுமாவான்.[1] :69[2] :294

முதலாம் ஈசானவர்மன்
சென்லா இராச்சியத்தின் அரசன்
ஆட்சிக்காலம்616–637
முன்னையவர்முதலாம் மகேந்திரவர்ம பல்லவன்
பின்னையவர்இரண்டாம் பவவர்மன்
இறப்பு637 (2024-11-20UTC20:10:03)
பெயர்கள்
ஈசானவர்மன்
தந்தைமுதலாம் மகேந்திரவர்மன்

மகேந்திரவர்மனின் மரணத்திற்குப் பிறகு, ஈசானவர்மன் தனது தலைநகரை ஈசானபுரத்த்திற்கு மாற்றினான். சம்போர் பிரேய் குக் வரலாற்று வளாகம் சென்லாவின் ஏழாம் நூற்றாண்டின் தலைநகரான ஈசானபுரம் என அடையாளம் காணப்பட்டுள்ளது.[3]

பொது

தொகு

சம்போர் பிரேய் குக்கில் உள்ள முக்கிய கோயில்கள் முதலாம் ஈசானவர்மன் என்பவரால் நிறுவப்பட்டதாகக் கூறப்படுகிறது. 636 இல் தொகுக்கப்பட்ட சூய் புத்தகம், 7 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், சென்லா ஒரு ஈசேனாக்சியான்டை என்பவனால் ஆளப்பட்டதாகக் கூறுகிறது.

பிரசாத் டோக், பிரசாத் பயங், வாட் சக்ரெட், குடேய் ஆங் சம்னிக், சம்போர் பிரேய் குக் ஆகிய இடங்களில் உள்ள கல்வெட்டுகள் முதலாம் இசானவர்மனின் ஆட்சிக் காலத்தைச் சேர்ந்ததாகக் கூறப்படுகிறது.

இவனுக்குக் கூறப்பட்ட சமீபத்திய கல்வெட்டு 627 (549 இந்தியத் தேசிய நாட்காட்டி) தேதியிடப்பட்டது, அதே சமயம் இவனது வாரிசான இரண்டாம் பவவர்மனுக்குக் கூறப்பட்ட ஒரே தேதியிட்ட கல்வெட்டு 639 ஆகும்.

சான்றுகள்

தொகு
  1. The Indianized States of Southeast Asia.
  2. Higham, C., 2014, Early Mainland Southeast Asia, Bangkok: River Books Co., Ltd., பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9786167339443
  3. “Coedès‟ Histories of Cambodia”.page 11.

Published as “Coedès‟ Histories of Cambodia”, in Silpakorn University International Journal (Bangkok,), Volume 1, Number 1, January–June 2000, pp. 61–108.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=முதலாம்_ஈசானவர்மன்&oldid=3682631" இலிருந்து மீள்விக்கப்பட்டது