கெமர் மொழி
கெமர் மொழி (Khmer) அல்லது கம்போடிய மொழி, கெமர் மக்கள் பேசும் மொழியாகும். இது கம்போடியாவின் அதிகாரபூர்வ மொழியாகும். இது ஆஸ்திரே-ஆசிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த இரண்டாவது அதிக மக்களால் பேசப்படும் மொழியாகும். சமஸ்கிருதம், மற்றும் பாளி மொழிகளின், குறிப்பாக இந்து, பௌத்த சமயங்களின் தாக்கம் அதிகமாக உள்ளன. மொன்-கெமர் மொழிக் குடும்பத்தில் மொன் மொழி, வியட்நாமிய மொழிகளை விட எழுத்து வடிவம் பெற்ற முதலாவது மொழி கெமர் மொழியாகும். கம்போடியாவின் புவியியல் அமைவு காரணமாக அயல் மொழிகளான தாய், லாவோ, சாம், மற்றும் வியட்நாமிய மொழிகளின் தாக்கம் தென்கிழக்கு ஆசியா முழுவதும் பரந்து காணப்படுகிறது[2].
கெமர் மொழி Khmer | |
---|---|
[pʰiːəsaː kʰmaːe] | |
நாடு(கள்) | கம்போடியா, வியட்நாம், தாய்லாந்து, மக்கள் சீனக் குடியரசு, ஐக்கிய அமெரிக்கா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 15.7 முதல் 21.6 மில்லியன் (2004)
|
Austroasiatic
| |
கெமர் எழுத்துமுறை (அபுகிடா) | |
அலுவலக நிலை | |
அரச அலுவல் மொழி | கம்போடியா |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-1 | km |
ISO 639-2 | khm |
ISO 639-3 | Either: khm — Central Khmer kxm — Northern Khmer |
படிமம்:Idioma camboyano.png, Approximate Location of Khmer Dialects.png, Langues Khmériques.png |
கெமர் மொழி தனக்கென தனியே அபுகிடா என்றழைக்கப்படும் கெமர் எழுத்துமுறையைக் கொண்டுள்ளது.
கெமெர் மொழியானது தனது அயல் மொழிகளான லாவோ, தாய், வியட்நாமிய மொழிகளைப் போல தொனி மற்றும் சுதி சார்ந்த (tonal) மொழியல்ல. கெமர் மொழியின் வட்டார வழக்குகள் பெரும்பாலும் ஒரே மாதிரியானவை:
- பாட்டாம்பாங் (Battambang), வடக்கு கம்போடியாவில் பேசப்படுகிறது.
- நொம் பென் (Phnom Penh), தலைநகரில் பேசப்படுகிறது. தலைநகரைச் சுற்றிய மாகாணங்களிலும் இது பேசப்படுகிறது.
- வடக்கு கெமர் (Northern Khmer), அல்லது கெமர் சூரின் (Khmer Surin), வடகிழக்கு தாய்லாந்தில் கெமர் ஆதிகுடிகளினால் பேசப்படுகிறது.
- கெமர் குரோம் (Khmer Krom) அல்லது தெற்கு கெமர், மேக்கொங் டெல்ட்டா பகுதியில் உள்ள பழங்குடியினரால் பேசப்படுகிறது.
- கார்டமன் கெமர் (Cardamom Khmer), மேற்கு கம்போடியாவில் கார்டமன் மலைகளில் வாழும் சிறு தொகை மக்கள் பேசும் மொழி[3].
மேற்கோள்கள்
தொகு- ↑ Vietnam's estimated amount of Khmer speakers by Ethnologue.com in (1999)
- ↑ David A. Smyth, Judith Margaret Jacob (1993). Cambodian Linguistics, Literature and History: Collected Articles. Routledge (UK). ISBN 0728602180147852369*.
- ↑ Nancy Joan Smith-Hefner (1999). Khmer American: Identity and Moral Education in a Diasporic Community. University of California. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-520-21349-1.