முதன்மை பட்டியைத் திறக்கவும்

ஆசுத்ரோ-ஆசிய மொழிகள்

ஆசுத்ரோ-ஆசிய மொழிகள் (Austro-Asiatic languages) இந்தியாவிலும், வங்காள தேசத்திலும், தென்கிழக்கு ஆசியாவிலும் பன்னாட்டு மக்கள் பேசும் ஒரு பெரும் மொழிக்குடும்பம். எத்னோலாக் என்னும் நிறுவனம் 168 ஆசுத்ரோ-ஆசிய மொழிகள் இருப்பதாக கணக்கிட்டுள்ளனர். இவற்றுள் வியட்னாமிய மொழி, குமேர் மொழி, மோன் மொழி ஆகிய மூன்று மொழிகள் மட்டுமே எழுத்து வடிவில் நெடிய வரலாற்றுப் பதிவுகள் கொண்டுள்ள. வியட்னாமிய மொழியும், குமேர் மொழியும் மட்டுமே முறையே வியட்னாம், கம்போடியா ஆகிய நாடுகளின் அரசு மொழிகளாக உள்ளன. மற்ற மொழிகள் எல்லாம் சிறுபான்மை மொழியாக இருக்கின்றன. அண்மைக் காலம் வரை மொழியியலாளர்கள் மோன்-குமேர் மொழிகள் என்றும், முண்டா மொழிகள் என்றும் இரண்டு குடும்பங்கள் என்பதாக கூறி வந்தனர், தற்பொழுது முண்டா என்னும் ஒரே குடும்பத்தில் எவ்வெல்லா மொழிகளும் அடங்குவதாகக் கருதுகின்றனர்.

ஆசுத்ரோ-ஆசிய மொழிகள்
Austro-Asiatic
Austroasiatic
புவியியல்
பரம்பல்:
தெற்கு ஆசியா, தென்கிழக்கு ஆசியா
வகைப்பாடு: உலகின் பெரும் மொழிக் குடும்பங்களில் ஒன்று
துணைப்பிரிவுகள்:
Austro-Asiatic languages

முதலுரு மொழிதொகு

சிடுவெல் (Sidwell) (2005)என்பார் மோன் -குமேர் மொழியின் முதலுருவாக கீழ்க்காணும் ஒலியன்களை மீளுருவாக்கி இருக்கின்றார்.

*p *t *c *k
*b *d
*m *n
*w *l, *r *j
*s *h

இது முன்னர் மீள்வித்திருந்த ஒலியன்களுக்கு ஈடானது, என்னும் ஒன்றைத்தவிர. இவ்வொலி சிடுவெல் சிறப்புத் தேர்ச்சி பெற்றிருக்கும் கட்டுயிக் மொழிகளில் (Katuic languages)காணப்படுகின்றது.

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆசுத்ரோ-ஆசிய_மொழிகள்&oldid=1496063" இருந்து மீள்விக்கப்பட்டது