முண்டா மொழிகள்
முண்டா மொழிகள் இந்தியாவின் நடுவண் மற்றும் கிழக்கு பகுதிகளிலும் வங்காள தேசத்திலும் 90 இலட்சம் மக்களால் பேசப்படும் ஒரு மொழிக் குடும்பம் ஆகும். இவை ஆசுத்ரோ-ஆசிய மொழிகள் குடும்பத்தின் கிளைக்குடும்பத்தில் உள்ளன. இவற்றை ஆசுத்ரோ-ஆசிய மொழிக் குடும்பத்தின் தென்கிழக்காசியாவில் பேசப்படும் கிளைக்குடும்பமான மான்-குமேர் மொழிகளிடமிருந்து வேறுபடுத்தி வரையறுக்கின்றனர். இம்மொழிகளின் ஆறு (மூலம்) அறியப்படவில்லை. எனினும் இவை கிழக்கிந்தியாவின் குடிமக்களிடம் தொன்றுதொட்டுப் புழக்கத்தில் இருந்து வந்துள்ளன என்று நம்பப்படுகிறது. கோ மொழி, முண்டாரி மொழி, சாந்தாலி மொழி ஆகியன இக்குடும்பத்தின் வெகுவாக அறியப்பட்டுள்ள மொழிகளாவன.
முண்டா | |
---|---|
புவியியல் பரம்பல்: |
கிழக்கு இந்தியா, வங்காள தேசம் |
வகைப்பாடு: | ஆசுத்ரோ-ஆசிய மொழிகள் முண்டா |
துணைப்பிரிவுகள்: |
கேர்வாடி
Kharia-Juang
கோராபுத்து
|
ISO 639-2: | mun |
முண்டா மொழிகள் இந்திய துணைக்கண்டத்தில் வழங்கிவந்த சமசுகிருதம் மற்றும் திராவிட மொழிகள் ஆகியவற்றின்மீது சில இடங்களில் தாக்கம் ஏற்படுத்தியுள்ளன மற்றும் அவற்றினால் தாக்கமடைந்துள்ளன. சோட்டா நாக்பூர் மேட்டுநிலப்பகுதி மாநிலங்களான சார்க்கண்டு, சத்தீஸ்கர், மேற்கு வங்காளம், ஒரிசா மற்றும் வங்காள தேசத்தில் பேசப்படும் முண்டா மொழிகளை வடமுண்டா மொழிகள் என்றும் ஒரிசாவின் நடு மற்றும் ஆந்திரத்தையொட்டிய பகுதிகளில் பேசப்படும் முண்டா மொழிகளை தென்முண்டா மொழிகள் என்றும் பொதுவாக பிரிக்கின்றனர். இருந்தாலும் இது மிகுதியாக எளிமைப்படுத்தப்பட்டவொரு பாகுபாடு என்ற கருத்தும் நிலவுகிறது.
ஒருமை, பன்மை, என்பவற்றுடன் மூன்றாவதாக இருமை என்பதும், தமிழ் போலவே உயர்திணை அஃறிணை என்ற பாகுபாடும், தன்னிலை பன்மையில் தமிழில் உள்ளது போலவே கேட்பவரை உள்ளடக்கிய மற்றும் சேர்க்காத நமது-எமது வேறுபாடு காட்டுதலும், காலத்தை உணர்த்தும் ஒட்டுக்கள் இருப்பதும் இம்மொழிகளின் குறிப்பிடத்தக்க இயல்புகள் ஆவன. வட இந்தியாவில் பெருவாரியாகப் பேசப்படும் இந்திய-ஆரிய மொழிக்குடும்ப மொழிகளைப் போலன்றி இவற்றின் சொற்களில் மெய்யொலிகள் இடையே உயிரொலிகளின்றித் தொடர்ந்து வருவதில்லை. அவ்வாறு வருதலும் சொல்லின் நடுவில் மட்டுமே ஏற்படுகிறது.
மொழியின வகைப்பாடு
தொகுகெரார்டு டிஃவ்லோத்(1974)
தொகுடிஃவ்லோத் (1974) இல் தந்த, பரவலாக சுட்டப்படும், வகைப்பாடு:
- வடக்கு முண்டா
- கொற்கு மொழி
- கெர்வாரியன் (Kherwarian)
- கெர்வாரி கிளை: அகாரிய மொழி, பி'சோரி மொழி(Bijori language), கொற்கு மொழி
- முண்டாரி கிளை: முண்டாரி மொழி, பூமி'சி மொழி, அசூரி மொழி, கோடா மொழி, ஃகோ மொழி(Ho), பிர்ஃகோர் மொழி(Birhor language)
- சந்த்தாளி கிளை (Santali branch): சந்த்தாளி மொழி, மாகாளி மொழி, தூரி மொழி
- தென் முண்டா
- கரியா-சுவாங் (Kharia-Juang): கரியா மொழி, சுவாங் மொழி(Juang language)
- கொரப்புத் முண்டா (Koraput Munda)
- ரேமோ கிளை (Remo branch): கத்தா மொழி(Gata) (Gta), போண்டா மொழி (ரேமோ, Remo), போடோ கடபா மொழி (குத்தோப், Gutob)
- சவாரா கிளை (Savara branch)[சோரோ-சுராய்-கோரம், Sora-Juray-Gorum] : பரெங்கி மொழி(Parengi language)] (கோரம், Gorum) [கோராபுத் மாவட்டம்t] , சோரா மொழி (சவாரா, Savara), சூராய் மொழி(Juray language), லோதி மொழி(Lodhi)
கெரார்டு டிஃவ்லோத் (2005)
தொகுகெரார்டு டிஃவ்லோத் (2005) வகைப்பாடு இன்னும் நுணுக்கமான வகைப்பாடாகும்:
முண்டா |
| ||||||||||||||||||||||||
கிரிகோரி டி. எசு. ஆண்டர்சன் (2001)
தொகுகிரிகோரி டி. எசு. ஆண்டர்சன் (Gregory D. S. Anderson( (2001), கெரார்டு டிஃவ்லோத்தின் இரு வகைப்பாடுகளுடனும் மாறுபடுமாறு தன் கருத்தை முன் வைத்துள்ளார். கோரபுத் என்றொரு கிளை இல்லை என்று வாதிடுகின்றார். மொழியுரு (morphological) ஒப்பீட்டில் முதலுரு தென் முண்டா (Proto-South Munda) பிரிவுற்று மூன்று உடன்பிறப்ப்புக் குழுமங்களாக மாறின என்கிறார். இவை கரியா-சுவாங், சோரா-கோரம், குத்தோப்-ரேமோ-குத்தா ஆகிய மூன்றும் என்கிறார். [1]
அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்
தொகு- Diffloth, Gérard. 1974. Austro-Asiatic Languages. Encyclopaedia Britannica. 480-484.
- Diffloth, Gérard. 2005. The contribution of linguistic palaeontology to the homeland of Austro-asiatic. In: Sagart, Laurent, Roger Blench and Alicia Sanchez-Mazas (eds.). The Peopling of East Asia: Putting Together Archaeology, Linguistics and Genetics. RoutledgeCurzon. pp79-82.
- ↑ Anderson, Gregory D S (2001). A New Classification of South Munda: Evidence from Comparative Verb Morphology. Indian Linguistics. Vol. 62. Poona: Linguistic Society of India. pp. 21–36.
{{cite book}}
: Cite has empty unknown parameters:|origmonth=
,|accessmonth=
,|origdate=
,|coauthors=
,|month=
,|chapterurl=
, and|accessyear=
(help)