ஐ.எசு.ஓ 639-2

(ISO 639-2 இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஐ.எசு.ஓ 639-2 (ISO 639-2) என்பது ஐ.எசு.ஓ 639 பன்னாட்டு சீர்தர மொழிக் குறியீட்டின் இரண்டாம் பகுதியாகும். இது உலகின் பெரும்பாலோர் பேசும் மொழிகளை அடையாளப் படுத்தும் வகையில், 464 மூன்றெழுத்து குறியீடுகளை (ஆல்பா-3 குறியீடுகள்) கொண்டுள்ளது. இவ் வெழுத்துக் குறியீடுகள் இலத்தீன் எழுத்துகளில் அமைந்துள்ளன. இவை மொழிகளைச் சுருக்கமாகக் குறிக்க பயன்படுகின்றது.

ஐக்கிய அமெரிக்காவின் சட்டமன்ற நூலகம் (Library of Congress) இந்த ஐ.எசு.ஓ 639-2 குறியீடுகள் வழங்க பதிகை ஆணய(registration authority)மாக செயல்படுகிறது (referred to as ISO 639-2/RA). அந்த பொறுப்பில் பரியப்படும் மாற்றங்களை பெற்று அவைகளை ஆய்வுக்குள்ளாக்குகிறது. தவிர பதிகை ஆணையமாக ஐ.எசு.ஓ 639-RA கூட்டு பரிந்துரை குழுவில் அங்கம் வகித்து ஐ.எசு.ஓ 639 குறிகள் பராமரிப்பில் பொறுப்பேற்கிறது.

ஐ.எசு.ஓ 639-1 ஈரெழுத்துக்களைக் கொண்டு அனைத்து மொழிகளையும் அடையாளம் காட்டவியலாது என 1989ஆம் ஆண்டில் ஐ.எசு.ஓ 639-2 சீர்தரத்திற்கான வேலை ஆரம்பித்தது. ஐ.எசு.ஓ 639-2 சீர்தரத்தின் முதல் பதிப்பு 1998ஆம் ஆண்டு வெளியானது.

பி(B) மற்றும் டி(T) குறிகள்

தொகு

பெரும்பாலான மொழிகளுக்கு சீர்தரத்தில் ஒரு குறியே கொடுக்கப்பட்டிருந்தாலும் இருபது மொழிகளுக்கு மட்டும் இரண்டு மூன்றெழுத்து குறிகள் வழங்கியுள்ளனர். ஒன்று-"bibliographic" நூல்வழி குறி (ISO 639-2/B)-முன்னிருத்தலுடன் இணங்கியிருக்க மொழியின் ஆங்கில பெயரை ஒட்டியது. மற்றது - "terminological" சொல்லாட்சி குறி (ISO 639-2/T)- மொழியின் நாட்டுப்பெயர். இந்த 20 மொழிகளுக்கும் ஐ.எசு.ஓ 639-1இலும் குறிகள் உண்டு. பொதுவாக டி குறிகள் விரும்ப்படுகிறது; ஐ.எசு.ஓ 639-3 ஐ.எசு.ஓ 639-2/Tஐ பயன்படுத்துகிறது. ஆனால் ஐ.எசு.ஓ 15924 தனது குறிகளை ஐ.எசு.ஓ 639-2/B விலிந்து பெறுகிறது.

செயல்வீச்சும் வகைகளும்

தொகு
  • தனி மொழிகள்
  • பெருமொழிகள்
  • மொழித்தொகுப்புகள்
  • வட்டார வழக்குகள்
  • உள்ளக பயன்பாட்டிற்கு ஒதுக்கியுள்ளது
  • சிறப்பு நிலைமைகள்

வகைகள் (தனிமொழிகளுக்கு மட்டும்):

  • நடப்பிலுள்ள மொழிகள்
  • அழிந்த மொழிகள்
  • பழம் மொழிகள்
  • வரலாற்று மொழிகள்
  • கட்டமைத்த மொழிகள் (9 -பாகம் 2இல்: epo, ina, ile, ido, vol, afh, jbo, tlh, zbl )

சிறப்பு நிலைமைகள்

தொகு

சில சிறப்பு நிலைமைகளுக்காக குறிகள் ஒதுக்கப்பட்டுள்ளன:

  • mis - குறியிடப்படாத மொழிகளுக்காக
  • mul (பல்மொழிகளுக்காக) - பல மொழிகள் ஒரே நேரத்தில் பயன்படுத்தும்போது, அவற்றின் அனைத்து தனிமொழி குறிகளையும் இடவியலாதபோது இதனை பயன்படுத்தலாம்.
  • qaa இலிருந்து qtzவரை சீர்தரத்தில் பயன்படுத்தாது பின்பயனுக்கு ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது.
  • und (for undetermined) - மொழியை குறிப்பிடவேண்டியிருப்பினும் மொழியறியாத நேரத்தில் இதனை பயன்படுத்தலாம்.
  • zxx - 'எந்த மொழி உரையும் இல்லை' எனக் குறிக்க (2006-01-11) சேர்க்கப்பட்டது.

மொழித்தொகுதிகள்

தொகு

சில ஐ.எசு.ஓ 639-2 குறிகள் தங்கள் மொழிகளையோ அல்லது சார்ந்த மொழிகளையோ மிகச்சரியாக குறிக்காதபோது (பெருமொழிகள் போலல்லாது), அவை மொழித்தொகுதி என அறியப்படுகிறது. அவை ஐ.எசு.ஓ 639-3வில் சேர்க்கப்படுவதில்லை.

639-3 வரைவெல்லை பரணிடப்பட்டது 2013-02-08 at the வந்தவழி இயந்திரம் தளத்தில் பெருமொழிகளுக்கும் மொழித்தொகுதிகளுக்குமான வேற்றுமை விவரிக்கப்பட்டுள்ளது.

639-2 வெளிப்படையாக மொழித்தொகுதியென அறியப்படாதவை

தொகு

பிகாரி (bih) மொழிக்கு ஐ.எசு.ஓ.639-2வில் மொழித்தொகுதியாக குறியீடு கொடுக்கப்பட்டாலும் ஐ.எசு.ஓ 639-1இல் தனிமொழியாக (bh) கொடுக்கப்பட்டுள்ளது.

வெளிப்படையாக பல மொழிகளை உள்ளடக்கும் எண்ணத்துடன்

தொகு

மேலும் பார்க்க

தொகு

வெளி இணைப்புக்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐ.எசு.ஓ_639-2&oldid=3271345" இலிருந்து மீள்விக்கப்பட்டது