செருமானிய மொழிகள்

செருமானிய மொழிகள் அல்லது இடாய்ச்சிய மொழிகள் என்பன இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தின் ஒரு பகுதிக் கிளைமொழிகளைக் குறிக்கும். இக் குழுவைச் சேர்ந்த மொழிகளின் பொதுவான முதலுரு மொழி முதலுரு இடாய்சிய மொழி (Proto Germanic) எனப்படுகிறது. இது இரும்புக் கால வட ஐரோப்பாவில், கி.மு. முதல் ஆயிரவாண்டின் நடுப்பகுதியை அண்டிய காலத்தில் (~கி.மு 500) பேசப்பட்டு வந்ததாக உய்த்திணந்தோ வருவிக்கப் பெற்றோ கூறப்பெறுகின்றது. முதலுரு இடாய்ச்சிய மொழியும் அதன் வழி வந்த கிளை மொழிகளும் பல குறித்தறியப் பெறும் தனி இயல்புகளைக் கொண்டுள்ளன. இவற்றுள் கிரிமின் விதி எனப்படும் மெய்யொலி மாற்றம் (consonant change) பரவலாக அறியப்பட்டதாகும்.


இடாய்ச்சிய (செருமானிய) மொழிகளின் பட்டியல்

தொகு
 
இடாய்ச்சிய மொழிகளும் அவற்றின் முக்கிய கிளைமொழிக் குழுக்களும்

இன்று வாழும் இடாய்ச்சிய மொழிகள் யாவும் ஒன்று மேற்கு இடாய்ச்சியக் கிளையைச் சேர்ந்ததாகவோ அல்லது வடக்கு இடாய்ச்சு மொழிக் கிளையைச் சார்ந்ததாகவோ உள்ளன. மேற்கு இடாய்ச்சிய மொழிக் கிளையே மிகப்பெரியதும் பல கிளைகளைக் கொண்டதும் ஆகும். இந்த மேற்குக் கிளையின் உட்கிளைகளாக ஆங்கிலோ-ஃவிரிசியன் (Angl-Frisian), குறிப்பாக ஆங்கில மொழியும் அதன் கிளைகளும், ஐரோப்பியக் கண்டத்தின் மேற்கு இடாய்ச்சு மொழியும் அதன் கிளைகளும் (எ.கா டச்சு (இடச்சு)) உள்ளன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=செருமானிய_மொழிகள்&oldid=2228005" இலிருந்து மீள்விக்கப்பட்டது