சிலாவிய மொழிகள்
சிலாவிய மொழிகள் இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தை சார்ந்த ஒரு துணை மொழிக் குடும்பமாகும். கிழக்கு ஐரோப்பாவில் இம்மொழிகளை மக்கள் பேசுகின்றனர். இக்குடும்பத்தில் மூன்று கிளைகள் உள்ளன. கிழக்கு சிலாவிய மொழிகளில் ரஷ்ய மொழி, உக்ரைன் மொழி, மற்றும் பல்வேறு உள்ளன. போலிய மொழி, செக் மொழி மற்றும் வேறு சில மொழிகள் மேற்கு சிலாவிய மொழிகளில் உள்ளன. தெற்கு சிலாவிய மொழிகள் தென்கிழக்கு ஐரோப்பாவில் குரோவாசியா, செர்பியா, பல்கேரியா, மற்றும் வேறு சில நாடுகளின் மக்கள் பேசுகின்றனர்.
சிலாவிய மொழிகள் | |
---|---|
புவியியல் பரம்பல்: |
கிழக்கு ஐரோப்பா, வட ஆசியா |
வகைப்பாடு: | இந்திய-ஐரோப்பிய மொழிகள் பால்த்திய-சிலாவிய சிலாவிய மொழிகள் |
துணைப்பிரிவுகள்: | |
ISO 639-2: | sla |