மேற்கு வங்காளம்

இந்திய மாநிலம்

மேற்கு வங்காளம் (West Bengal) என்பது இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு மாநிலமாகும். இது மக்கள்தொகை அடிப்படையில் இந்தியாவின் 4வது பெரிய மாநிலமாகும். இது கிழக்கில் வங்காளதேசத்தையும் மேற்கில் நேபாளம் மற்றும் பூடான் ஆகிய நாடுகளையும் தன் எல்லைகளாகக் கொண்டுள்ளது. இந்தியாவின் 7வது பெரிய நகரமான கொல்கத்தா, இம்மாநிலத்தின் தலைநகராக உள்ளது. வங்காள மொழியே இங்கு பெரும்பான்மையாகப் பேசப்படும் மொழி. சுந்தரவனக் காடுகள் மற்றும் வங்காளப் புலிகள், இரும்பு மற்றும் நிலக்கரி சுரங்கங்களுக்கு பெயர் பெற்ற மாநிலம்.

மேற்கு வங்காளம்
மேலிருந்து இடம் வலமாக: கொல்கத்தாவில் உள்ள விக்டோரியா நினைவிடம், ராஸ்மஞ்சா கோவில், சுந்தரவனப் பூங்காவில் உள்ள வங்காளப் புலி, டார்ஜீலிங் தொடர்வண்டி, ஹவுரா பாலம், ஹசார்துவாரி அரண்மனை
இந்தியாவில் மேற்கு வங்காளத்தின் அமைவிடம்
இந்தியாவில் மேற்கு வங்காளத்தின் அமைவிடம்
நாடுஇந்தியா
உருவாக்கம்26 சனவரி 1950
தலைநகரம்கொல்கத்தா
அரசு
 • நிர்வாகம்மேற்கு வங்காள அரசு
 • ஆளுநர்சி. வி. ஆனந்த போஸ்
 • முதலமைச்சர்மம்தா பானர்ஜி (அஇதிகா)
 • சட்டமன்றம்மேற்கு வங்காள சட்டமன்றம்(295 இடங்கள்)
 • உயர் நீதிமன்றம்கல்கத்தா உயர் நீதிமன்றம்
பரப்பளவு
 • மொத்தம்88,752 km2 (34,267 sq mi)
 • பரப்பளவு தரவரிசை14வது
மக்கள்தொகை
 (2011)[1]
 • மொத்தம்9,13,47,736
 • தரவரிசை4வது
 • அடர்த்தி1,029/km2 (2,670/sq mi)
இனம்வங்காளியர்
GDP (2018–19)
 • Total10.49 இலட்சம் கோடி (US$130 பில்லியன்)
 • தனிநபர் வருமானம்1,08,372 (US$1,400)
மொழி
 • அலுவல்முறை
 • கூடுதல் அலுவல்முறை
Nepali in two sub-divisions of Darjeeling[5]
நேர வலயம்ஒசநே+05:30 (இசீநே)
ஐஎசுஓ 3166 குறியீடுIN-WB
வாகனப் பதிவுWB
HDI (2017) 0.637 (medium) · 21st[6]
கல்வியறிவு (2011)77.08%[7]
பாலின விகிதம் (2011)950 /1000 [8]
இணையதளம்அதிகாரப்பூர்வ இணையதளம்
சின்னங்கள்
சின்னம்மேற்கு வங்காள அரசு சின்னம்
பாடல்"Banglar Mati Banglar Jol"
நடனம்Rabindra Natyam, Chhau dance
விலங்கு
மீன்பிடிப் பூனை
பறவை
வெண்தொண்டை மீன்கொத்தி
மீன்
ஹில்சா மீன்
மலர்
பவழமல்லி
பழம்மாம்பழம்
மரம்
ஏழிலைப்பாலை
ஆறுTista, கங்கை ஆறு
விளையாட்டுஅசோசியேஷன் கால்பந்து
^* 294 தேர்வு, 1 நியமனம்

வரலாறு

தொகு

1947ஆம் வருடம் அன்றைய வங்காளம், இந்துக்கள் பெரும்பான்மையினராக இருந்த பகுதி மேற்கு வங்காளம் என்றும், இஸ்லாமியரின் பகுதி கிழக்கு வங்காளம் என்றும் பிரிக்கப்பட்டது. இன்றைய வங்கதேசமே அந்த கிழக்கு வங்காளமாகும்.

புவியியல்

தொகு

88,752 சதுர கிலோ மீட்டர் சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட மேற்கு வங்காள மாநிலத்தின் அண்டைய பகுதிகள் பின்வருவன

மேற்கு வங்காள மாநிலம் 20 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

அரசியல்

தொகு

1948 முதல் 1977 வரை மேற்கு வங்காளத்தை இந்திய தேசிய காங்கிரஸ் தொடர்ச்சியாக இருபத்து ஒன்பது ஆண்டுகள் ஆட்சி செய்தது. 1977ஆம் ஆண்டிலிருந்து 2011 ம் ஆண்டு வரை தொடர்ச்சியாக 34 ஆண்டுகள் மேற்கு வங்காளம் இடது சாரி கட்சிகளால் ஆளப்பட்டு வந்தது. 2011ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திரிணாமுல் காங்கிரசு வெற்றி பெற்றதை அடுத்து மம்தா பானர்ஜி முதல்வராக பதவியேற்றார்.

சட்டமன்ற-மக்களவை தொகுதிகள்

தொகு

மேற்கு வங்காளம் 294 சட்டமன்ற தொகுதிகளும், 42 மக்களவை தொகுதிகளையும் கொண்டது.

மக்கள் வகைப்பாடு

தொகு

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இம்மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 91,276,115 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 46,809,027 மற்றும் பெண்கள் 44,467,088 ஆகவும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 950 பெண்கள் வீதம் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டரில் 1,028 பேர் வீதம் வாழ்கின்றனர். இம்மாநிலத்தின் சராசரி படிப்பறிவு 76.26 % ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 81.69 % ஆகவும், பெண்களின் படிப்பறிவு 70.54 % ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 10,581,466 ஆக உள்ளது. பத்தாண்டு மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் 13.84% ஆக உள்ளது. நகர்புற மக்கள் தொகை 38.13% ஆகவும், கிராமப்புற மக்கள் தொகை 31.87% ஆகவும் உள்ளது. [9]

சமயம்

தொகு

இம்மாநிலத்தில் இந்து சமயத்தவரின் மக்கள்தொகை 64,385,546 (70.54 %) ஆகவும், இசுலாமியர் மக்கள்தொகை 24,654,825 (27.01 %) ஆகவும், கிறித்தவ சமயத்தினரின் மக்கள்தொகை (658,618) (0.72 %) ஆகவும், சீக்கிய சமய மக்கள்தொகை 63,523 (0.07 %) ஆகவும், சமண சமய மக்கள்தொகை 60,141 (0.07 %) ஆகவும், பௌத்த சமய மக்கள் தொகை 282,898 (0.31 %) ஆகவும், பிற சமயத்து மக்கள்தொகை 942,297 (1.03 %) ஆகவும் மற்றும் சமயம் குறிப்பிடாதவர்கள் மக்கள்தொகை 228,267 (0.25 %) ஆகவும் உள்ளது.

கோட்டங்களும் மாவட்டங்களும்

தொகு
 
மேற்கு வங்காள மாவட்டங்கள்

இருபது மாவட்டங்களைக் கொண்ட மேற்கு வங்காள மாநிலத்தின் நிர்வாக வசதிக்காக இராஜதானி கோட்டம், வர்தமான் கோட்டம் மற்றும் ஜல்பைகுரி கோட்டம் என மூன்று கோட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. மூன்று கோட்டங்களில் 23 மாவட்டங்கள் கொண்டுள்ளது.[10]

இராஜதானி கோட்டம்

தொகு

இராஜதானி கோட்டத்தில் கொல்கத்தா மாவட்டம், ஹவுரா மாவட்டம், முர்சிதாபாத் மாவட்டம், நதியா மாவட்டம் வடக்கு 24 பர்கனா மாவட்டம், தெற்கு 24 பர்கனா மாவட்டம் மற்றும் ஜார்கிராம் மாவட்டம் என 7 மாவட்டங்களை கொண்டுள்ளது.

வர்தமான் கோட்டம்

தொகு

வர்தமான் கோட்டத்தில் பாங்குரா மாவட்டம், கிழக்கு மிட்னாபூர் மாவட்டம், மேற்கு மிட்னாபூர் மாவட்டம், பிர்பூம் மாவட்டம், கிழக்கு வர்த்தமான் மாவட்டம், மேற்கு வர்த்தமான் மாவட்டம், ஹூக்லி மாவட்டம் மற்றும் புருலியா மாவட்டம் என 8 மாவட்டங்களை கொண்டுள்ளது.

ஜல்பைகுரி கோட்டம்

தொகு

ஜல்பைகுரி கோட்டத்தில் ஜல்பாய்குரி மாவட்டம், டார்ஜிலிங் மாவட்டம், அலிப்பூர்துவார் மாவட்டம், கூச் பெகர் மாவட்டம், தெற்கு தினஜ்பூர் மாவட்டம், மால்டா மாவட்டம், உத்தர தினஜ்பூர் மாவட்டம் மற்றும் காளிம்பொங் மாவட்டம் என 8 மாவட்டங்கள் கொண்டுள்ளது. [11][12][13]

தரவரிசை மாவட்டம் மக்கள்தொகை வளர்ச்சி வீதம் பாலின வீதம் கல்வி அறிவு மக்கள் அடர்த்தி
2 வடக்கு 24 பர்கனா 10,082,852 12.86 949 84.95 2463
6 தெற்கு 24 பர்கனா 8,153,176 18.05 949 78.57 819
9 முரிசிதபாத் 7,102,430 21.07 957 67.53 1334
14 மேற்கு மிட்னாபூர் 5,943,300 14.44 960 79.04 636
16 ஹூக்லி 5,520,389 9.49 958 82.55 1753
18 ‎நதியா 5,168,488 12.24 947 75.58 1316
20 கிழக்கு மிட்னாபூர் 5,094,238 15.32 936 87.66 1076
23 ‎ஹவுரா 4,841,638 13.31 935 83.85 3300
35 கொல்கத்தா 4,486,679 −1.88 899 87.14 24252
58 மால்டா 3,997,970 21.50 939 62.71 1071
66 ஜல்பைகுரி 3,869,675 13.77 954 73.79 621
80 பங்குரா 3,596,292 12.64 954 70.95 523
84 பிர்பூம் மாவட்டம் 3,502,387 16.15 956 70.90 771
124 வடக்கு தினாஜ்பூர் 3,000,849 22.90 936 60.13 956
129 புருலியா 2,927,965 15.43 955 65.38 468
136 கூச் பிகார் 2,822,780 13.86 942 75.49 833
257 டார்ஜிலிங் 1,842,034 14.47 971 79.92 585
295 தெற்கு தினஜ்பூர் 1,670,931 11.16 954 73.86 753
அலிப்பூர்துவார்[11]
கிழக்கு வரத்தமான்
மேற்கு வர்தமான்
காளிம்பொங்
ஜார்கிராம்

பொருளாதாரம்

தொகு
நிகர மாநில உற்பத்தி (2004–05)[14]
ஆண்டு ரூபாய்
2004–2005 190,073
2005–2006 209,642
2006–2007 238,625
2007–2008 272,166
2008–2009 309,799
2009–2010 366,318

துர்காபூர் மற்றும் ஆசான்சோல் இரும்பு, நிலக்கரி மற்றும் அலுமினிய சுரங்கங்கள் மூலம் எஃகு, இரும்பாலைகள், மின்சார மற்றும் மின்னனு கருவிகள், மின் கம்பிகள், தோல், துணி நெசவு, நகையணிகள், மோட்டார் கார் உதிரிபாகங்கள், தொடருந்து பயனிகள் பெட்டிகள், தொடருந்து சரக்கு பெட்டிகள், தொடருந்து என்ஜின்கள், தேயிலை, சர்க்கரை, வேதியல் மூலப் பொருட்கள், சணல் மற்றும் சணலால் ஆன பொருட்கள் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி ஆதாரமாக உள்ளது. டையமண்ட் துறைமுகம், மாநில பொருளாதரத்திற்கு உறுதுணையாக உள்ளது.

வேளாண்மை

தொகு

வேளாண்மைத் தொழில் மேற்கு வங்காளத்தின் பொருளாதாரத்தின் முக்கிய ஆதாரம் ஆகும். நெல் முதன்மை வேளாண்மை பயிராகும். அரிசி, உருளைக்கிழங்கு, சணல், கரும்பு, தேயிலை மற்றும் கோதுமை முக்கிய விளைபொருட்கள் ஆகும்.

போக்குவரத்து

தொகு

தரைவழி போக்குவரத்து

தொகு

2011-ஆம் ஆண்டு முடிய மேற்கு வங்காளத்தில் மாநில நெடுஞ்சாலைகளின் நீளம் 92,023 km (57,180 mi) கொண்டது.:18 மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளின் நீளம் 2,578 km (1,602 mi) கொண்டது.[15] மாநில அரசின் பேருந்துகளும், தனியார் பேருந்துகளும் மக்களின் தரை வழி போக்குவரத்திற்கு உதவுகிறது.

தொடருந்து

தொகு

மேற்கு வங்காளத்தில் தொடருந்து இருப்புப் பாதைகளின் நீளம் 4481 கிலோ மீட்டர் ஆகும். தென்கிழக்கு இரயில்வே, கிழக்கு இரயில்வே மற்றும் கொல்கத்தா மெட்ரோ இயில்வேயின் மண்டலத் தலைமையகங்கள் கொல்கத்தாவில் அமைந்துள்ளது.

வானூர்தி நிலையங்கள்

தொகு

நேதாஜி சுபாசு சந்திர போசு பன்னாட்டு வானூர்தி நிலையம் மாநிலத்தின் பெரிய வானூர்தி நிலையம் ஆகும்.

நீர் வழி போக்குவரத்து

தொகு

கிழக்கு இந்தியாவில் உள்ளூர் ஆற்று நீர் வழிப் போக்குவரத்தில் கொல்கத்தா ஆற்றுத் துறைமுகம் சிறப்பிடம் வகிக்கிறது. கொல்கத்தா மற்றும் ஹால்டியா துறைமுகங்கள் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி பணிகளுக்கு சிறப்பிடமாக உள்ளது. அந்தமான் நிக்கோபர் தீவுகளுக்கு கொல்கத்தாவிலிருந்து பயணிகள் மற்றும் சரக்குக் கப்பல்கள் செல்கிறது.

சுந்தரவனக் காடுகளில் பயணிக்க பெரிய இயந்திரப் படகுகள் உதவுகிறது.

பெயர் மாற்றம்

தொகு

இம்மாநிலத்தின் பெயரை பஸ்ச்சிம் பங்கா என மாற்ற அம்மாநில அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் ஒப்புதலுக்குப் பின்னர் மேற்கு வங்காளம் பஸ்ச்சிம் பங்கா என அழைக்கப்படுவது அதிகாரபூர்வமாக நடைமுறைக்கு வரும்.[16][17]

புகழ் பெற்ற மனிதர்கள்

தொகு

ஆகியோர் இம்மாநிலத்தைச் சேர்ந்த புகழ் பெற்ற மனிதர்களாவர்.

இதையும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
 1. "Area, population, decennial growth rate and density for 2001 and 2011 at a glance for West Bengal and the districts: provisional population totals paper 1 of 2011: West Bengal". Registrar General & Census Commissioner, India. Archived from the original on 7 சனவரி 2012. பார்க்கப்பட்ட நாள் 26 சனவரி 2012.
 2. "West Bengal Budget Analysis 2018–19" (PDF). Centre for Budget and Governance Accountability, India. Archived from the original (PDF) on 2 பிப்ரவரி 2018. பார்க்கப்பட்ட நாள் 1 February 2018. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
 3. "Medium term fiscal policy statement & fiscal policy stratergy statement for 2018–19" (PDF). Finance Department, Government of West Bengal. January 2018. p. 6. பார்க்கப்பட்ட நாள் 8 June 2018.
 4. "Fact and Figures". www.wb.gov.in. பார்க்கப்பட்ட நாள் 30 March 2018.
 5. "Report of the Commissioner for linguistic minorities: 52nd report (July 2014 to June 2015)" (PDF). Commissioner for Linguistic Minorities, Ministry of Minority Affairs, Government of India. pp. 85–86. Archived from the original (PDF) on 15 November 2016. பார்க்கப்பட்ட நாள் 16 February 2016.
  Singh, Shiv Sahay (3 April 2012). "Official language status for Urdu in some West Bengal areas" (in en-IN). தி இந்து இம் மூலத்தில் இருந்து 3 June 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190603103658/https://www.thehindu.com/news/national/other-states/official-language-status-for-urdu-in-some-west-bengal-areas/article3274293.ece. 
  "Multi-lingual Bengal". The Telegraph. 11 December 2012 இம் மூலத்தில் இருந்து 25 March 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180325232340/https://www.telegraphindia.com/1121211/jsp/bengal/story_16301872.jsp. 
  "Kurukh language given official status by Bengal government". Outlook. 21 February 2017 இம் மூலத்தில் இருந்து 22 January 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210122232505/https://www.outlookindia.com/newsscroll/kurukh-language-given-official-status-by-bengal-government/993228. 
  Roy, Anirban (28 February 2018). "Kamtapuri, Rajbanshi make it to list of official languages in". இந்தியா டுடே. Archived from the original on 30 March 2018. பார்க்கப்பட்ட நாள் 30 March 2018.
  "West Bengal shows 'Mamata' to Telugus" (in en). The Hans India. 24 December 2020 இம் மூலத்தில் இருந்து 23 December 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201223184833/https://www.thehansindia.com/andhra-pradesh/west-bengal-shows-mamata-to-telugus-663381. 
 6. "Sub-national HDI - Area Database". Global Data Lab (in ஆங்கிலம்). Institute for Management Research, Radboud University. பார்க்கப்பட்ட நாள் 25 September 2018.
 7. "Sex ratio, 0–6 age population, literates and literacy rate by sex for 2001 and 2011 at a glance for West Bengal and the districts: provisional population totals paper 1 of 2011: West Bengal". Government of India:Ministry of Home Affairs. Archived from the original on 7 சனவரி 2012. பார்க்கப்பட்ட நாள் 29 சனவரி 2012.
 8. "Sex Ratio in West Bengal". Census of India 2011. Archived from the original on 27 February 2014.
 9. http://www.census2011.co.in/census/state/west+bengal.html
 10. District Profiles of West Bengal
 11. 11.0 11.1 http://timesofindia.indiatimes.com/city/kolkata/Alipurduar-a-new-district-on-June-25/articleshow/36916065.cms
 12. "Indian Districts by Population, Growth Rate, Sex Ratio 2011 Census". Government of India. பார்க்கப்பட்ட நாள் 3 December 2012.
 13. "Directory of district, sub division, panchayat samiti/ block and gram panchayats in West Bengal, March 2008". West Bengal Electronics Industry Development Corporation Limited, Government of West Bengal. March 2008. p. 1. Archived from the original (DOC) on 7 டிசம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 15 February 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
 14. "Net state domestic product at factor cost—state-wise (at current prices)". Handbook of statistics on Indian economy. Reserve Bank of India. 15 September 2011. Archived from the original on 9 மார்ச் 2012. பார்க்கப்பட்ட நாள் 7 February 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
 15. "Statewise Length of national highways in India". National Highways. Department of Road Transport and Highways; Ministry of Shipping, Road Transport and Highways; Government of India. பார்க்கப்பட்ட நாள் 9 February 2012.
 16. http://www.indianexpress.com/news/west-bengal-to-be-renamed-paschimbanga/834327/
 17. http://thatstamil.oneindia.in/news/2011/08/19/west-bengal-is-now-paschim-banga-aid0091.html[தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்பு

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேற்கு_வங்காளம்&oldid=3920487" இலிருந்து மீள்விக்கப்பட்டது