கிழக்கு மிட்னாபூர் மாவட்டம்

மேற்கு வங்காளத்தில் உள்ள மாவட்டம்

கிழக்கு மிட்னாபூர் மாவட்டம் (Purba Medinipur district or East Midnapore district) (Pron: purbɔ med̪iːniːpur) (வங்காள மொழி: পূর্ব মেদিনীপুর জেলা), (Pron: ˌmɪd̪naˈpur) இந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தின் 23 மாவட்டங்களில் ஒன்றாகும். மேற்கு வங்காள மாநிலத்தின் மூன்று கோட்டங்களில் ஒன்றான வர்தமான் கோட்டத்தில் அமைந்த ஏழு மாவட்டங்களில் இம்மாவட்டமும் ஒன்றாகும். இதன் நிர்வாகத் தலைமையிடம் தம்லக் நகரம் ஆகும். நிர்வாக வசதிக்காக 1 சனவரி 2002-இல் மிட்னாப்பூர் மாவட்டத்தை, கிழக்கு மிட்னாப்பூர் மாவட்டம் மற்றும் மேற்கு மிட்னாப்பூர் மாவட்டம் என இரண்டாக இரண்டாக பிரிக்கும் போது கிழக்கு மிட்னாப்பூர் மாவட்டம் உருவானது. தம்லக் நகரம் கிழக்கு மிட்னாப்பூர் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமாகும்.

கிழக்கு மிட்னாபூர் மாவட்டம்
পূর্ব মেদিনীপুর জেলা
கிழக்கு மிட்னாபூர்மாவட்டத்தின் இடஅமைவு மேற்கு வங்காளம்
மாநிலம்மேற்கு வங்காளம், இந்தியா
நிர்வாக பிரிவுகள்வர்தமான் கோட்டம்
தலைமையகம்தம்லக்
பரப்பு4,736 km2 (1,829 sq mi)
மக்கட்தொகை5,094,238 (2011)
மக்கள்தொகை அடர்த்தி1,076/km2 (2,790/sq mi)
படிப்பறிவு87.66 per cent
பாலின விகிதம்936
வட்டங்கள்4
மக்களவைத்தொகுதிகள்4
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை16
முதன்மை நெடுஞ்சாலைகள்2
அதிகாரப்பூர்வ இணையத்தளம்
மேற்கு வங்காளத்தின் தென்கிழக்கில் அமைந்த கிழக்கு மிட்னாபூர் மாவட்டம், எண் 19

மாவட்ட எல்லைகள்

தொகு

4,713 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட கிழக்கு மிட்னாபூர் மாவட்டம், மேற்கில் மேற்கு மிட்னாபூர் மாவட்டம், தென்மேற்கில் ஒரிசா மாநிலம், தெற்கில் வங்காள விரிகுடா மற்றும் ஹூக்லி ஆறும் கிழக்கில் தெற்கு 24 பர்கனா மாவட்டம், வடகிழக்கில் ஹவுரா மாவட்டம் எல்லைகளாக கொண்டது.

கிழக்கு மிட்னாப்பூர் மாவட்டம் தம்லக், கொந்தாய் மற்றும் ஹால்டியா மற்றும் எக்ரா என நான்கு உட்கோட்டங்களை கொண்டது.[1]

நகரங்கள்

தொகு

பன்ஸ்குரா, தம்லக், கொந்தாய், எக்ரா, ஹால்டியா, மெகிதா, மகிஷாதல், கஜ்லாகர், டிக்கா, மந்தர்மணி, கேஜ்ஜூரி, இராம்நகர், பதேஷ்பூர், பகவான்பூர், மங்கலமர்ரோ, சண்டிப்பூர், கோலாகாட் மற்றும் நந்திகிராம் இம்மாவட்டத்தின் முக்கிய நகரங்களாகும்.

பொருளாதாரம்

தொகு

இம்மாவட்டத்தின் பொருளாதாரம் வேளாண்மையை நம்பியுள்ளதால், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாவட்டங்களில் ஒன்றாக உள்ளது. இந்திய அரசின் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம், இந்தியாவில் மிகவும் பின் தங்கிய மாவட்டங்களில் ஒன்றாக கிழக்கு மிட்னாபூர் மாவட்டம் உள்ளது என அறிவித்துள்ளது. பின் தங்கிய பகுதிகளுக்க்கான நிதியுதவி வழங்கும் திட்டப்படி, இம்மாவட்டம் இந்திய அரசிடமிருந்து நிதியுதவி பெறும், பதினொன்று மேற்கு வங்காள மாவட்டங்களில் ஒன்றாக உள்ளது.

நிர்வாகம்

தொகு

தம்லக் நகரம் கிழக்கு மிட்னாப்பூர் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமாகும். மேலும் இம்மாவட்டத்தில் இருபத்து ஒன்று காவல் நிலையங்களும், ஐந்து நகராட்சிகளும், 25 ஊராட்சி ஒன்றியங்களையும், 223 ஊராட்சி மன்றங்களையும் கொண்டுள்ளது. [2][3]

கிழக்கு மிட்னாபூர் மாவட்டம் தம்லக், ஹால்டியா, எக்ரா மற்றும் கொந்தாய் என நான்கு உட்கோட்டங்களைக் கொண்டது.

தம்லக் உட்கோட்டமானது தம்லக் நகராட்சி மன்றம், பன்ஸ்குரா நகராட்சி மன்றம், நந்தகுமார், மேய்னா, தம்லக், ஷாகித் மாதங்கினி, பன்ஸ்குரா மற்றும் பன்ஸ்குரா I பன்ஸ்குரா II மற்றும் நந்திகிராம் என ஏழு வட்டார வளர்ச்சி அலுவலகங்களை கொண்டுள்ளது.

ஹால்தியா உட்கோட்டமானது ஹால்டியா நகராட்சி மன்றம் மற்றும் மகிசாதல், நந்திகிராம்–I, நந்திகிராம்–II, சுதாஹதா மற்றும் ஹால்டியா என ஐந்து வட்டார வளர்ச்சி அலுவலகங்களை கொண்டுள்ளது.

எக்ரா உட்கோட்டமானது எக்ரா நகராட்சி மற்றும் பகவான்பூர் I, பகவான்பூர் II, எக்ரா I, எக்ரா II, பதாஸ்பூர்;I, பதாஸ்பூர்;II என ஆறு வட்டார வளர்ச்சி அலுவலகங்களைக் கொண்டுள்ளது.

கொந்தாய் உட்கோட்டமானது கொந்தாய் நகராட்சி மன்றம், மற்றும் காந்தி;I, காந்தி;II, காந்தி;III, கேஜ்ஜுரி;I, கேஜ்ஜுரி;II,, ராம்நகர்;I மற்றும் ராம்நகர்;II என ஆறு வட்டார வளர்ச்சி அலுவலகங்களைக் கொண்டுள்ளது. [2]

மக்கள் வகைப்பாடு

தொகு

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இம்மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 5,095,875 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 2,629,834 மற்றும் பெண்கள் 2,466,041 ஆகவும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 938 பெண்கள் வீதம் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டரில் 1,081 பேர் வீதம் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தின் சராசரி படிப்பறிவு 87.02 % ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 92.32 % ஆகவும், பெண்களின் படிப்பறிவு 81.37 % ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 587,654 ஆக உள்ளது.[4]

சமயம்

தொகு

இம்மாவட்டத்தில் இந்து சமயத்தவரின் மக்கள்தொகை 4,343,972 ஆகவும், இசுலாமியர் மக்கள்தொகை 743,436 ஆகவும், கிறித்தவ சமயத்தினரின் மக்கள்தொகை 2,648 ஆகவும், பிற சமயத்தவர்களின் மக்கள்தொகை கணிசமாக உள்ளது.

போக்குவரத்து வசதிகள்

தொகு

இம்மாவட்டத்தின் வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலை 6 மற்றும் தேசிய நெடுஞ்சாலை 41 ஆகியவைகள் மாநிலத்தின் மற்றும் நாட்டின் பிற பகுதிகளை இணைக்கிறது. ஹால்டியா தொடருந்து நிலையம் மாநிலத் தலைநகரம் கொல்கத்தாவுடன் இணைக்கிறது. [5]

அரசியல்

தொகு

சட்டமன்ற தொகுதிகள்

தொகு

கிழக்கு மிட்னாபூர் மாவட்டம் தம்லக் சட்டமன்ற தொகுதி, பன்ஸ்குரா கிழக்கு சட்டமன்ற தொகுதி, பன்ஸ்குரா மேற்கு சட்டமன்ற தொகுதி, மொய்னா சட்டமன்ற தொகுதி, நந்தகுமார் சட்டமன்ற தொகுதி, மகிசதல் சட்டமன்ற தொகுதி, ஹால்டியா சட்டமன்ற தொகுதி, நந்திகிராம் சட்டமன்ற தொகுதி, சண்டிப்பூர் சட்டமன்ற தொகுதி, பாதேஸ்பூர் சட்டமன்ற தொகுதி, காந்தி வடக்கு சட்டமன்ற தொகுதி, பகவான்பூர் சட்டமன்ற தொகுதி, கேஜ்ஜூரி சட்டமன்ற தொகுதி, காந்தி தெற்கு சட்டமன்ற தொகுதி, இராம்நகர் சட்டமன்ற தொகுதி மற்றும் எக்ரா சட்டமன்ற தொகுதி என பதினாறு சட்டமன்ற தொகுதிகளை கொண்டுள்ளது.

மக்களவை தொகுதிகள்

தொகு

காந்தி மக்களவை தொகுதி, தம்லக் மக்களவை தொகுதி, காட்தல் மக்களவை தொகுதி, (பகுதி), மிட்னாப்பூர் மக்களவை தொகுதி (பகுதி) என நான்கு மக்களவைத் தொகுதிகளை கொண்டது.

மேற்கோள்கள்

தொகு
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-05-01. பார்க்கப்பட்ட நாள் 2016-02-18.
  2. 2.0 2.1 "Directory of District, Sub division, Panchayat Samiti/ Block and Gram Panchayats in West Bengal, March 2008". West Bengal. National Informatics Centre, India. 2008-03-19. Archived from the original on 2009-02-25. பார்க்கப்பட்ட நாள் 2008-12-06.
  3. "Administration Setup". Official website of Purba Medinipur district. Archived from the original on 2008-04-25. பார்க்கப்பட்ட நாள் 2008-12-06.
  4. http://www.census2011.co.in/census/district/19-purba-medinipur.html
  5. http://indiarailinfo.com/arrivals/haldia-hlz/6415

வெளி இணைப்புகள்

தொகு