தேசிய நெடுஞ்சாலை 6 (இந்தியா)
தேசிய நெடுஞ்சாலை 6, (National Highway 6 (India)) பொதுவாக தே. நெ. 6 எனக் குறிப்பிடப்படுகிறது. இது இந்தியாவின் முதன்மையான தேசிய நெடுஞ்சாலையாகும்.[1] இந்த நெடுஞ்சாலை இந்திய மாநிலங்களான மேகாலயா, அசாம், மிசோரம் வழியாகச் செல்கிறது.[2] தேசிய நெடுஞ்சாலைகள் மறுசீரமைக்கப்படுவதற்கு முன்பு தேசிய நெடுஞ்சாலை 6 பழைய தேசிய நெடுஞ்சாலைகளாக 40, 44, 154 மற்றும் 54 எனப் பல்வேறு எண்கள் வழங்கப்பட்டது.[3]
தேசிய நெடுஞ்சாலை 6 | ||||
---|---|---|---|---|
தே. நெ. 6 மேகாலயாவில் | ||||
வழித்தடத் தகவல்கள் | ||||
AH1AH2 இன் பகுதி | ||||
நீளம்: | 667 km (414 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
வடக்கு முடிவு: | ஜோரபத் | |||
தெற்கு முடிவு: | சோகாவ்தார், இந்தியா/மியான்மர் எல்லை | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | மேகாலயா, அசாம், மிசோரம் | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
வழித்தடம்
தொகுதேசிய நெடுஞ்சாலை 6, ஜோராபட், சில்லாங், ஜோவாய், பதர்பூர், பஞ்ச்கிராம், கோலாசிப், கான்பூய், அய்சால், செலிங், லும்துய், கவ்த்லிர், துய்சென், நெய்தான், சாம்பாய் ஆகிய நகரங்களை இணைக்கிறது. இந்தியா/மியான்மர் எல்லையில் சோகாவ்தார் அருகே முடிவடைகிறது.[2][4]செப்டம்பர் 2008-இல், சில்சாரின் வடமேற்கில் உள்ள நர்புக் சரணாலயத்திற்குள் மேகாலயாவின் சோனாப்பூரில் 120 மீட்டர் நீளமுள்ள சுரங்கப்பாதை கட்டப்பட்டது. இது மேகாலயாவை மேகாலயாவின் தென்கிழக்கில் உள்ள அசாமின் பராக் பள்ளத்தாக்குடன் இணைக்கிறது.
சந்திப்புகள்
தொகு- தே.நெ. 27 ஜோராபட் அருகே முனையம் [2]
- தே.நெ. 106 சில்லாங் அருகே
- தே.நெ. 206 ஜோவாய் அருகே
- தே.நெ. 306 கோலசிப் அருகே
- தே.நெ. 108 அய்சால் அருகே
- தே.நெ. 2 செலிங்க்கு அருகில்
- தே.நெ. 102B கவுல்குல் அருகே
ஆசிய நெடுஞ்சாலைகள்
தொகுதேசிய நெடுஞ்சாலை 6-இல் ஜோராபட் முதல் சில்லாங் வரையிலான பகுதி ஆசிய நெடுஞ்சாலை 1 மற்றும் ஆசிய நெடுஞ்சாலை 2-இன் ஒரு பகுதியாகும்.[5]
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Rationalization of Numbering Systems of National Highways" (PDF). Govt of India. 28 April 2010. பார்க்கப்பட்ட நாள் 21 Aug 2011.
- ↑ 2.0 2.1 2.2 "State-wise length of National Highways (NH) in India". Ministry of Road Transport and Highways. பார்க்கப்பட்ட நாள் 25 April 2019.
- ↑ "New Numbering of National Highways notification - Government of India" (PDF). The Gazette of India. பார்க்கப்பட்ட நாள் 25 April 2019.
- ↑ "Route substituition for national highways 302 and 6" (PDF). The Gazette of India. பார்க்கப்பட்ட நாள் 25 April 2019.
- ↑ "Asian Highway Database - Country wise". UNESCAP. பார்க்கப்பட்ட நாள் 25 April 2019.