ஊக்லி ஆறு
(ஹூக்லி ஆறு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஊக்லி ஆறு (ஆங்கில மொழி: Hooghly River) அல்லது பாகிரதி-ஊக்லி (Bhagirathi-Hooghly) என்பது ஏறத்தாழ 260 கிமீ நீளமுள்ள கங்கை ஆற்றின் ஒரு கிளை ஆறு ஆகும். இந்த ஆறு இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ளது; அம்மாநிலத்தில் உள்ள முர்சிதாபாத் மாவட்டத்திலுள்ள ஃபராக்கா பராசு (Farakka Barrage) என்னும் இடத்தில் கங்கையில் இருந்து பிரிகிறது. முன்னர் ஊக்லி என்று அழைக்கப்பட்ட, ஊக்லி-சின்சுரா நகரம் இந்த ஆற்றங்கரையிலேயே உள்ளது. ஊக்லி என்னும் பெயர் எவ்வாறு தோற்றம் பெற்றது என்பது தெளிவில்லை. நகரத்தின் பெயரிலிருந்து ஆற்றின் பெயர் வந்ததா அல்லது ஆற்றின் பெயரைத் தழுவி நகரத்துக்குப் பெயர் சூட்டப்பட்டதா என்பது தெரியவில்லை.[1][2][3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Hugli River". Encyclopaedia Britannica. Archived from the original on 5 June 2016. பார்க்கப்பட்ட நாள் 8 July 2016.
- ↑ https://archive.org/details/ainiakbarivolum00mubgoog The Ain I Akbary Abul Fazl Allammi Vol-2, Translated by Colonel H.S.Jarrett published by The Asiatic Society of Bengal Printed at the Baptist Mission Press in 1891 Calcutta page-120.
- ↑ https://cclpworldwide.com/wp-content/uploads/2020/03/Hooghly-Jelar-Itihas-Sudhir-Kumar-Mitra.pdf பரணிடப்பட்டது 23 மார்ச்சு 2020 at the வந்தவழி இயந்திரம் Jelar Itihas Sudhir Kumar Mitra/ page no 792 (original book) internet page 806