நந்திகிராம்

நந்திகிராம் (Nandigram) இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தின் கிழக்கு மிட்னாப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கணக்கெடுப்பு நகரம் ஆகும். இது நந்திகிராம் ஊராட்சி ஒன்றியம் எண் 1-இல் அமைந்துள்ளது.[1]

நந்திகிராம்
நகர்புறம்
நந்திகிராம் is located in மேற்கு வங்காளம்
நந்திகிராம்
நந்திகிராம்
இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தின் கிழக்கு மிட்னாபூர் மாவட்டத்தில் நந்திகிராமத்தின் அமைவிடம்
நந்திகிராம் is located in இந்தியா
நந்திகிராம்
நந்திகிராம்
நந்திகிராம் (இந்தியா)
ஆள்கூறுகள்: 22°01′N 87°59′E / 22.01°N 87.99°E / 22.01; 87.99
நாடு இந்தியா
மாநிலம்மேற்கு வங்காளம்
மாவட்டம்கிழக்கு மிட்னாபூர்
பரப்பளவு
 • மொத்தம்2.5577 km2 (0.9875 sq mi)
ஏற்றம்6 m (20 ft)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்5,803
 • அடர்த்தி2,300/km2 (5,900/sq mi)
மொழிகள்
 • அலுவல் மொழிகள்வங்காள மொழி, ஆங்கிலம்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
வாகனப் பதிவுWB
மக்களவைத் தொகுதிதம்லுக் மக்களவைத்ட் தொகுதி
சட்டமன்றத் தொகுதிநந்திகிராம் சட்டமன்றத் தொகுதி
இணையதளம்purbamedinipur.gov.in

மேற்கு வங்காள அரசு 2007-ஆம் ஆண்டில் நந்திகிராம் பகுதியை சிறப்பு பொருளாதார மண்டலமாக அறிவித்தை அடுத்து, சலீம் தொழில் நிறுவனத்தினர் நந்திகிராம் பகுதியில் பெரிய வேதியியல் தொழிற்சாலையை நிறுவ முற்பட்டது.[2] நந்திகிராமில் வேதியியல் தொழிற்சாலையை நிறுவுவதற்கு எதிராக உள்ளூர் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டங்கள் நடத்தினர். போராட்டத்தை அடக்க காவல் துறையினர் பொதுமக்களுக்கு எதிராக துப்பாக்கி சூடு நடத்தியதில் 14 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.[3] [4]பின்னர் நந்திகிராமில் வேதியியல் தொழிற்சாலை அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டது.

மக்கள் தொகை பரம்பல் தொகு

2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, நந்திகிராம் 1,225 வீடுகளையும், 5,83 மக்கள் தொகையும் கொண்டிருந்தது. மக்கள் தொகையில் ஆண்கள் 2,947 (51%) மற்றும் பெண்கள் 2,856 (49%) ஆக உள்ளனர். மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 725 அக உள்ளனர். சராசரி எழுத்தறிவு 88.85% ஆகவுள்ளது. மக்கள் தொகையில் இந்துக்கள் 59.37%, இசுலாமியர் 40.32% மற்றும் பிற சமயத்தினர் 0.21% ஆகவுள்ளனர்.[5]

போக்குவரத்து தொகு

நந்திகிராமத்திற்கு வடகிழக்கில் 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள துறைமுக நகரமான ஹல்டியா செல்வதற்கு படகுப்போக்குவரத்து மட்டும் உள்ளது.[6]


மேற்கோள்கள் தொகு

  1. "Haldia Development Authority" இம் மூலத்தில் இருந்து 31 October 2006 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20061031054758/http://www.hdaindia.com/about_us.htm. 
  2. "The Telegraph - Calcutta : Frontpage Story on Nandigram" இம் மூலத்தில் இருந்து 2010-08-15 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100815053937/http://www.telegraphindia.com/1070104/asp/frontpage/story_7218357.asp. 
  3. "2007-Nandigram violence: A state of failure" (in en). 28 December 2009 இம் மூலத்தில் இருந்து 15 October 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20191015205327/https://www.indiatoday.in/magazine/cover-story/story/20091228-2007-nandigram-violence-a-state-of-failure-741632-2009-12-24. 
  4. "CBI clean chit to Buddha govt on Nandigram firing". The Times of India இம் மூலத்தில் இருந்து 5 January 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170105074238/http://timesofindia.indiatimes.com/city/kolkata/CBI-clean-chit-to-Buddha-govt-on-Nandigram-firing/articleshow/29581354.cms. 
  5. Nandigram Population Census 2011
  6. Subhendu Ray, Kanchan Chakraborty and Kartik Panda (7 May 2007). "Without the ferry, Nandigram remains cut off". Indian Express இம் மூலத்தில் இருந்து 5 July 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090705203734/http://cities.expressindia.com/fullstory.php?newsid=235262. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நந்திகிராம்&oldid=3560011" இருந்து மீள்விக்கப்பட்டது