அமர்த்தியா சென்
இந்திய பொருளாளர்
(அமார்த்ய சென் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
அமார்த்ய குமார் சென் (Amartya Sen, பிறப்பு: நவம்பர் 3, 1933) இந்தியாவைச் சேர்ந்த ஒரு பொருளாதார அறிஞர் ஆவார். இவர் 1998 இல் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்றார். மேலும் 1999 இல் பாரத ரத்னா விருதும் பெற்றார். இவர் மேற்கு வங்காளத்தில் உள்ள சாந்தி நிகேதனில் பிறந்தார்.[1]
அமார்த்ய சென் | |
---|---|
பிறப்பு | நவம்பர் 3, 1933 சாந்திநிகேதன், மேற்கு வங்காளம், இந்தியா |
வாழிடம் | ஐக்கிய அமெரிக்க குடியரசு |
தேசியம் | இந்தியா |
துறை | பொருளாதாரம் |
பணியிடங்கள் | ஹார்வர்ட் பல்கலைக்கழகம் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் ஆகஸ்போர்ட் பல்கலைக்கழகம் இலண்டன் பொருளாதார பள்ளி தில்லி பொருளாதார பள்ளி பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம் ஜாதவ்பூர் பல்கலைக்கழகம் |
கல்வி கற்ற இடங்கள் | ட்ரினிடி கல்லூரி, கேம்பிரிட்ஜ் (Ph.D.)(B.A.) மாநிலக் கல்லூரி, கொல்கொத்தா (B.A.) |
அறியப்படுவது | சமூகநல பொருளாதாரம் மனித வளர்ச்சி கொள்கை |
விருதுகள் | பொருளியலுக்கான நோபல் நினைவுப் பரிசு (1998) பாரத் ரத்னா (1999) |
விருதுகளும், அங்கீகாரங்களும்
தொகு- 1954: கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் மூலமாக ‘ஆடம் ஸ்மித் பரிசு’ வழங்கப்பட்டது.
- 1956: கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் மூலமாக ‘ஸ்டீவென்சென் பரிசு’ வழங்கப்பட்டது.
- 1976: மகாலானோபிஸ் பரிசு பெற்றார்.
- 1986: அரசியல் பொருளாதாரத்தில் ‘ரேங்க் ஈ செய்ட்மேன் டிஸ்டிங்கஷ்ட் விருது’ கிடைத்தது.
- 1990: நெறிமுறைகளுக்கான ‘செனட்டர் ஜியோவானி அக்னெல்லி சர்வதேச பரிசு’ பெற்றார்.
- 1990: ‘ஆலன் ஷான் ஃபெய்ன்ஸ்டீன் வேர்ல்ட் ஹங்கர் விருது’
- 1993: ஜோன் மேயர் ‘குளோபல் குடியுரிமை விருது’
- 1994: ஆசிய சமூகத்தின் ‘இந்திரா காந்தி தங்க பதக்கம் விருது’
- 1997: ‘எடின்பர்க் பதக்கம்’
- 1997: ஒன்பதாவது ‘கட்டலோனியா சர்வதேச பரிசு’
- 1998: பொருளாதாரத்தில் ‘நோபல் பரிசு’
- 1999: ‘பாரத் ரத்னா விருது’
- 1999: வங்காள அரசின் ‘கெளரவ குடியுரிமை’ வழங்கப்பட்டது.
- 2000: உலகளாவிய அபிவிருத்தி மற்றும் சுற்றுச்சூழல் நிறுவனத்திலிருந்து ‘லியன்டெஃப் பரிசு’
- 2000: அமெரிக்காவின் தலைமை மற்றும் சேவைக்காக ‘ஐசனோவர் பதக்கம்’
- 2000: ‘சாம்பியன் ஆஃப் ஹானர்’
- 2002: சர்வதேச ஹ்யுமனிஸ்ட் மற்றும் எதிக்கல் யூனியனிலிருந்து ‘சர்வதேச ஹ்யுமனிஸ்ட் விருது’
- 2003: இந்திய வர்த்தக சேம்பர் அவருக்கு ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ வழங்கி கௌரவித்தது’
- யுனெஸ்கேபின் (UNESCAP) ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’
காலவரிசை
தொகு- 1933: நவம்பர் 3, 1933 ஆம் ஆண்டு, பிரித்தானியாவின் இந்தியாவிலுள்ள வங்காள மாகாணத்திலிருக்கும் சாந்திநிகேதனில் பிறந்தார்.
- 1953: கொல்கத்தாவிலுள்ள பிரசிடென்சி கல்லூரியில், பொருளாதாரத்தில் பி.ஏ. பட்டம் பெற்றார்.
- 1955: கேம்ப்ரிட்ஜிலுள்ள ட்ரினிட்டி கல்லூரியில், பொருளாதாரத்தில் பி.ஏ. பட்டம் பெற்றார்.
- 1959: கேம்ப்ரிட்ஜிலுள்ள ட்ரினிட்டி கல்லூரியில், ஹெச்.ஏ. மற்றும் பி.எச்.டி முடித்தார்.
- 1956: கொல்கத்தாவிலுள்ள ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில், பொருளாதார பேராசிரியராக அவரது முதல் பணியைத் தொடங்கினார்.
- 1963: தில்லி பல்கலைக்கழகத்தில், பொருளாதார பேராசிரியராக பணியேற்றார்.
- 1970: அவரது முதல் புத்தகமான “கலெக்டிவ் சாய்ஸ் அண்ட் சோசியல் வேல்ஃபார்” வெளியிடப்பட்டது.
- 1972: லண்டன் பொருளாதார பள்ளியில், பொருளாதார பேராசிரியராக சேர்ந்தார்.
- 1977: ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில், பொருளாதார பேராசிரியராக சேர்ந்தார்.
- 1986: ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில், பொருளாதார பேராசிரியராக சேர்ந்தார்.
- 1989: பொருளாதாரத்திற்காக ‘நோபல் பரிசு’ பெற்றார்.
- 1999: ‘பாரத ரத்னா புரஸ்கார்’ விருதைப் பெற்றார்.
முக்கிய பதிப்புகள்
தொகு- சென், அமர்த்தியா, Collective Choice and Social Welfare, San Francisco, Holden-Day, 1970
- சென், அமர்த்தியா, On Economic Inequality, New York, Norton, 1973
- சென், அமர்த்தியா, Poverty and Famines : An Essay on Entitlements and Deprivation, Oxford, Clarendon Press, 1982
- சென், அமர்த்தியா, Choice, Welfare and Measurement, Oxford, Basil Blackwell, 1982
- சென், அமர்த்தியா, Food Economics and Entitlements, Helsinki, Wider Working Paper 1, 1986
- சென், அமர்த்தியா, On Ethics and Economics, Oxford, Basil Blackwell, 1987.
- Drèze, Jean and சென், அமர்த்தியா, Hunger and Public Action. Oxford: Clarendon Press. 1989.
- சென், அமர்த்தியா, More Than 100 Million Women Are Missing. New York Review of Books, 1990.
- சென், அமர்த்தியா, Inequality Reexamined, Oxford, Oxford University Press, 1992.
- மார்த்தா நசுபாம் மற்றும் சென், அமர்த்தியா. The Quality of Life. Oxford: Clarendon Press, 1993
- சென், அமர்த்தியா, Reason Before Identity (The Romanes Lecture for 1998), Oxford, Oxford University Press, 1999. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-951389-9
- சென், அமர்த்தியா, Development as Freedom, Oxford, Oxford University Press, 1999 Review பரணிடப்பட்டது 2018-08-25 at the வந்தவழி இயந்திரம்
- சென், அமர்த்தியா, Rationality and Freedom, Harvard, Harvard Belknap Press, 2002
- சென், அமர்த்தியா, The Argumentative Indian, London: Allen Lane, 2005.
- சென், அமர்த்தியா, Identity and Violence.The Illusion of Destiny New York W&W Norton.
பரிசுகளும் புகழ்ப்பட்டங்களும்
தொகு- பொருளியலில் நோபல் பரிசு, ஆண்டு 1998
மேற்கோள்கள்
தொகு- ↑ http://www.trin.cam.ac.uk/index.php?pageid=176&conid=1
- ↑ http://scholar.harvard.edu/files/sen/files/cv_sen_amartya_jan2013_0.pdf
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-07-17. பார்க்கப்பட்ட நாள் 2014-08-05.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-02-12. பார்க்கப்பட்ட நாள் 2014-08-05.