விகடன் குழுமம்
விகடன் குழுமம் வார இதழ்கள், பதிப்பகம், இணையம், மின் இதழ்கள் என்று பல்வேறு தளங்களில் இயங்கும் நிறுவனமாகும். இந்நிறுவனம் எஸ். எஸ். வாசனால் தொடங்கப்பட்டது.
தலைமையகம் | சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
---|---|
சேவை வழங்கும் பகுதி | இந்தியா |
முதன்மை நபர்கள் | பாலசுப்ரமணியன் |
உற்பத்திகள் | வார இதழ்கள், பதிப்பகம், இணையம், மின்நூல்கள் |
இணையத்தளம் | www |
விகடன் குழும இதழ்கள்
தொகுவிகடன் குழுமத்திலிருந்து எண்ணற்ற இதழ்கள் வெளிவருகின்றன.
ஆனந்த விகடன்
தொகுமுதன்மைக் கட்டுரை: ஆனந்த விகடன்
ஆனந்த விகடன், அரசியல், இலக்கியம், கல்வி, பொதுநலம் போன்ற பல்வேறு செய்திகளையும், கட்டுரைகளையும் உள்ளடக்கிய இதழ்.
ஜுனியர் விகடன்
தொகுமுதன்மைக் கட்டுரை: ஜூனியர் விகடன்
ஜுனியர் விகடன், விகடன் குழுமத்திலிருந்து வெளிவரும் புலனாய்வு இதழாகும். இது அரசியல்,சமூக விழிப்புணர்வு, சமீபத்திய நிகழ்வுகள், திரையுலக செய்திகள் போன்ற செய்திகளைக் கொண்டுள்ளது. இந்த வாராந்திர இதழில் பெரிதும் படிக்கப்படுவது மிஸ்டர் கழுகு என்னும் பகுதி ஆகும். இப்பகுதி புலனாய்வு செய்திகள் மற்றும் பல அரசியல் நிகழ்வுகளைக் கொண்டுள்ளது.
அவள் விகடன்
தொகுமுதன்மைக் கட்டுரை: அவள் விகடன்
அவள் விகடன், விகடன் குழுமத்திலிருந்து வெளிவரும் மகளிர்க்கான இதழாகும். வாசல், டிப்ஸ், கோலங்கள், ரெகுலர், ரெசிப்பிஸ், அவள் 16, கதைகள், வாசகி கோட்டா, கவிதைகள் போன்ற பகுதிகளை உள்ளடக்கியது. இல்லம் தொடர்பான நகைச்சுவை துணுக்குகளும் இந்த இதழில் இடம் பெறுகின்றன. பிரபல பெண்கள் பற்றியும், பெண்களுக்கான நகைகள், உடையலங்காரம், தன்னம்பிக்கை தொடர்கள் போன்றவையும் இணைக்கப்படுகின்றன.
சுட்டி விகடன்
தொகுமுதன்மைக் கட்டுரை: சுட்டி விகடன்
சுட்டி விகடன், விகடன் குழுமத்திலிருந்து வெளிவரும் குழந்தைகளுக்கான இதழாகும். வாசல், ஸ்பெஷல், எஃப்.ஏ. பக்கங்கள், பொது அறிவு, தொடர்கள், புதிரோ புதிர், காமிக்ஸ், விளையாட்டு, கதைகள், ஜோக்ஸ் போன்ற பகுதிகளை உள்ளடக்கியது. நீதி நெறிக்கதைகள், விஞ்ஞான கட்டுரைகள், வரலாற்று குறிப்புகள் என்று குழந்தைகளுக்காகவே எழுதப்படுகின்றன.
சக்தி விகடன்
தொகுமுதன்மைக் கட்டுரை: சக்தி விகடன்
சக்தி விகடன், விகடன் குழுமத்திலிருந்து வெளிவரும் ஆன்மீக இதழாகும். வாசல், ஸ்தல வழிபாடு, இளைஞர் சக்தி, சிறப்புக் கட்டுரை, தொடர்கள், சிறுகதை போன்ற பகுதிகளை உள்ளடக்கியது. ஆலயங்களின் சிறப்புகள், ஆன்மீக பயண கட்டுரைகள், புத்தக விமர்சனங்கள் போன்றவையும் உள்ளன.
நாணயம் விகடன்
தொகுமுதன்மைக் கட்டுரை: நாணயம் விகடன்
நாணயம் விகடன், விகடன் குழுமத்திலிருந்து வெளிவரும் பொருளாதார இதழாகும். வாசல், நாணயம் ஸ்பெஷல், ஆசிரியர் பக்கம், நடப்பு, பங்குச் சந்தை, கமாடிட்டி, சேமிப்பு, மியூச்சுவல் ஃபண்ட், தொடர்கள், கேள்வி-பதில் போன்ற பகுதிகளை உள்ளடக்கியது. எஸ்.எல்.வி. மூர்த்தி அவர்களின் மூன்றெழுத்து மந்திரம் MBA என்ற தொடர் தற்போது இந்த இதழில் வெளிவருகிறது.
மோட்டார் விகடன்
தொகுமுதன்மைக் கட்டுரை: மோட்டார் விகடன்
மோட்டார் விகடன், விகடன் குழுமத்திலிருந்து வெளிவரும் வாகன அமைப்புகள், மற்றும் செயற்பாடுகள் குறித்த செய்திகள் வழங்கும் இதழாகும். ஸ்பெஷல், கார்ஸ், பைக்ஸ், தொடர்கள், ரேஸ் போன்ற பகுதிகளை உள்ளடக்கியது. வாகனங்கள் சம்மந்தப்பட்ட நகைச்சுவை துணுக்குகளும் இந்த இதழில் இடம் பெருகின்றன. அத்துடன் புதிய ரக வாகனங்கள் பற்றிய கட்டுரைகளும் இணைக்கப்படுகின்றன. மோட்டார் கிளினிக், மோட்டார் நியூஸ், நெட்டகாசம் போன்ற தொடர்கள் பிரபல்யமானவை.
பசுமை விகடன்
தொகுமுதன்மைக் கட்டுரை: பசுமை விகடன்
பசுமை விகடன், விகடன் குழுமத்திலிருந்து வெளிவரும் வேளாண்மை மற்றும் சுற்றுச்சூழல் செய்திகளுக்கான இதழாகும். மகசூல், சிறப்பு கட்டுரை, நாட்டு நடப்பு, தொடர்கள் போன்ற பகுதிகளை உள்ளடக்கியது. வேளாண்மை சம்மந்தப்பட்ட நகைச்சுவை துணுக்குகளும் இந்த இதழில் இடம் பெருகின்றன. அத்துடன் சுற்றுச் சூழல் பற்றி விழிப்புணர்வு கட்டுரைகளும், வேளாண் வல்லுனர்களின் குறிப்புகளும் இணைக்கப்படுகின்றன.
டாக்டர் விகடன்
தொகுமுதன்மைக் கட்டுரை: டாக்டர் விகடன்
டாக்டர் விகடன், விகடன் குழுமத்திலிருந்து வெளிவரும் மருத்துவ இதழாகும். ஃபிட்னஸ், ஸ்பெஷல், டாக்டர் கைடன்ஸ், டயட் டைம்ஸ், தொடர், ட்ரீட்மென்ட்ஸ், மாற்று மருத்துவம், கன்சல்டிங் ரூம், டிடெயில் டிப்ஸ் போன்ற பகுதிகளை உள்ளடக்கியது. மருத்துவம் சம்மந்தப்பட்ட நகைச்சுவை துணுக்குகளும் இந்த இதழில் இடம் பெருகின்றன. அத்துடன் நடைமுறை நோய்கள் பற்றி விழிப்புணர்வு கட்டுரைகளும், பிரபலங்களின் மருத்துவ குறிப்புகளும் இணைக்கப்படுகின்றன.
டைம் பாஸ்
தொகுமுதன்மைக் கட்டுரை: டைம் பாஸ்
டைம் பாஸ் இதழ், விகடன் குழுமத்திலிருந்து வெளிவரும் பொழுதுபோக்கு இதழாகும். சினிமால். அரசியல், போட்டோ கமென்ட், கண்டுபிடி, ஜோக், கிசுகிசு, அலசி ஆராய்வது அப்பாடக்கர் போன்ற பகுதிகளை உள்ளடக்கியது. திரைப்படம் மற்றும் அரசியல் தொடர்பான சுவையான செய்திகளைக் கேலியாகக் கூறும் இதழாக வெளிவருகிறது. 2017-ம் ஆண்டு பிப்ரவரி முதலாக இந்த இதழ் நிறுத்தப்பட்டுவிட்டது.
சிறப்பு மலர்கள்
தொகுதீபாவளி போன்ற விழாக்காலங்களில் சிறப்பு மலர்கள் வெளியிடப்படுகின்றன. தடிமனான அட்டையுடன் வெளியிடப்படும் விகடன் தீபாவளி மலரில் மொழிபெயர்ப்பு கதைகள், சிறுகதைகள், பிரபலங்களைப் பற்றிய கட்டுரைகள், நகைச்சுவை துணுக்குகள், கவிதைகள் ஆகியவை இடம் பெறும்.
விகடன் பிரசுரம்
தொகுமுதன்மைக் கட்டுரை: விகடன் பிரசுரம்
விகடன் பிரசுரம், என்ற பெயரில் விகடன் குழுமம் நூல்களை வெளியிடுகின்றது. ஆனந்த விகடன், ஜூனியர் விகடன் போன்ற இதழ்களில் வெளிவரும் கட்டுரைகளை தொகுத்தும், சிறந்த எழுத்தாளர்களைக் கொண்டு தனி புத்தகமாகவும் விகடன் பிரசுரம் வெளியிடுகிறது. பல தலைப்புகளிலும் துறைகளிலும் விகடன் பிரசுரத்தாரின் புத்தகங்கள் வெளிவந்துள்ளன.
இணையத்தில்
தொகுவிகடன்.காம் என்ற தளத்தில் இயங்கிவரும் விகடன் குழுமம். விகடன் செய்திகள் (நியூஸ்.விகடன்.காம்) தளத்தில் உடனடி செய்திகள் இடம் பெறுகின்றன. முகநூல், டிவிட்டர் போன்ற சமூகதளங்களிலும் பங்கெடுக்கிறது.
சினிமா விகடன்
தொகுசினிமாவிகடன் என்ற தளத்தில் திரைப்படம் தொடர்பான செய்திகளையும், படங்களையும், நடிகர், நடிகைகளின் செய்திகளையும் தருகிறது. சுடச்சுட, பட முன்னோட்டம், பேட்டிகள், கிசு கிசு, சினிமா விமர்சனம், இசை விமர்சனம் போன்றவைகள் இத்தளத்தில் இடம்பெறுகின்றன. நடிகர், நடிகைகள் புகைப்படங்கள், திரைப்படம், ஷுட்டிங் ஸ்பாட், சினிமா நிகழ்ச்சிகள் ஆகியவற்றின் புகைப்படங்களும் காட்சிபடுத்தப்பட்டுள்ளன.
பாடல் காட்சிகள், திரைப்பட டிரெய்லர்கள், பேட்டிகள், சினிமா நிகழ்ச்சிகள் போன்றவற்றின் காணோளி காட்சிகள் பதியப்பட்டுள்ளன. பாலிவுட் செய்திகள், பொக்கிஷம், ரிலாக்ஸ் ப்ளீஸ் போன்றவையும் இணைக்கப் பட்டுள்ளன.
விகடன் செய்திகள்
தொகுவிகடன்செய்திகள் பரணிடப்பட்டது 2012-09-20 at the வந்தவழி இயந்திரம் தளத்தில் ஆடியோ, செய்திகள், தமிழகம், இந்தியா, உலகம், விளையாட்டு, ஸ்பெஷல், சினிமா, இதழிலிருந்து, விவாதக்களம், கார்ட்டூன்ஸ், ஃபோட்டூன்ஸ் போன்றவை இடம்பெறுகின்றன.
ஸ்போட்ஸ் விகடன்
தொகுஸ்போட்ஸ்விகடன் தளத்தில் முகப்பு, ஸ்பெஷல், கிரிக்கெட், டென்னிஸ், ஹாக்கி, கால்பந்து, பெட்மிட்டன், தடகளம், மல்யுத்தம், குத்துச்சண்டை, இதர விளையாட்டுகள் ஆகியவை இடம்பெறுகின்றன.
விகடன் மாணவர் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம்
தொகுவிகடன் குழுமத்தினை தொடங்கிய எஸ்.எஸ்.வாசன் அவர்களால் 1956-ல் தொடங்கி வைக்கப்பட்ட திட்டம் விகடன் மாணவர் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம். இத்திட்டம் மூலம் கல்லூரியில் படிக்கின்ற மாணவர்களில் பத்திரிக்கை துறையில் ஆர்முடையோரை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு பயிற்சி கொடுக்கிறது விகடன். இதற்காக விண்ணப்பத் தாள்கள் கொடுக்கப்படுகின்றன. அவற்றை பூர்த்தி செய்வதுடன், விகடன் கொடுக்கும் தலைப்பில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுத்து நான்கு பக்கங்களுக்கு மீகாமல் ஒரு கட்டுரையும் எழுதி இணைத்திட வேண்டும். ஆர்வமுள்ள, தகுதிவாய்ந்த நபர்களை தேர்ந்தெடுத்து பயிற்சி கொடுக்கும் விகடன், இத்திட்டத்தினால் பயனடைந்தவர்களை தன்னுடைய குழுமத்திலும் வேலைக்கு சேர்த்து கொள்கிறது.
தானே துயர் துடைப்போம்
தொகுதமிழகத்தின் கடற்கரையோரப் பகுதிகளை தாக்கிய தானே புயலில் ஏற்பட்ட சேதத்தினையும், மக்கள் துன்பங்களையும் களையும் பொருட்டு விகடன் குழுமம் ஓவிய விற்பனை கண்காட்சியை நடத்தியது. இந்த கண்காட்சியில் விற்கப்பட்ட ஓவியங்களிலிருந்து கிடைக்கும் நிதி மக்களுக்காக செலவிடப்பட்டது. 63,29,593 ரூபாய் திரட்டப்பட்ட நிதியென்று விகடன் குழுமம் இணையத்தில் அறிவித்துள்ளது.