இந்திய மாமணி[1] (பாரத ரத்னா) இந்தியாவில் குடிமக்களுக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த விருதாகும். மிகச்சிறந்த தேசிய சேவை ஆற்றியவர்களைப் பாராட்டிப் பாரத ரத்னா விருது வழங்கப்படுகிறது. இச்சேவை கலை, அறிவியல், இலக்கியம் கலாச்சாரம், விளையாட்டு(2013) மற்றும் பொதுச்சேவை ஆகிய துறைகளை உள்ளடக்கி இருக்கிறது. எனினும் பிற துறைகளில் உள்ளவர்களும், இவ்விருதைப் பெரும் வகையில் நவம்பர், 2011-இல் விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.[2] இவ்விருது பெற்றவர்களுக்குச் சிறப்புப் பட்டப்பெயர்கள் எதுவும் வழங்கப்படுவது இல்லையெனினும் இந்தியாவின் முன்னுரிமை வரிசை பட்டியலில் அவர்களுக்கு இடம் உண்டு. பாரத ரத்னா என்பது இந்தியாவின் ரத்தினம் எனப் பொருள் தரும்.

இந்திய மாமணி
பாரத ரத்னா
வகைகுடியியல் விருது
நாடு இந்தியா
வழங்குபவர்State Emblem of Indiaஇந்தியக் குடியரசுத் தலைவர்
நாடா
முகப்புஅரச மர இலையில், சூரியனின் உருவமும், "பாரத ரத்னா" என்ற சொல் தேவநாகரி எழுத்துகளிலும் பொறிக்கப்பட்டிருக்கும்.
பின்புறம்அரச மர இலையில், தேசிய சின்னமும், "சத்தியமேவா ஜெயதே" (உண்மை மட்டும் வெற்றி பெறுகிறது) என்ற சொல் தேவநாகரி எழுத்துகளிலும் பொறிக்கப்பட்டிருக்கும்.
நிறுவப்பட்டது1954; 70 ஆண்டுகளுக்கு முன்னர் (1954)
முதலில் வழங்கப்பட்டது1954
கடைசியாக வழங்கப்பட்டது2024
மொத்தம்48
முன்னுரிமை
அடுத்தது (உயர்ந்த)ஒன்றுமில்லை
அடுத்தது (குறைந்த) பத்ம விபூசண்

இவ்விருதுக்கான முதல் வரையறையில் 35 மி.மீ விட்டமுடைய வட்ட வடிவான தங்கப்பதக்கத்தில் சூரியச் சின்னமும் பாரத ரத்னா என்று இந்தியில் பொறிக்கப்பட்ட எழுத்துகளும் அதன் கீழ் மலர் வளைய அலங்காரமும் இருக்க வேண்டும் என்றும் பதக்கத்தின் பின் பக்கத்தில் அரசு முத்திரையும் தேசிய வாசகமும் (motto) இருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்படுள்ளது. இப்பதக்கத்தை வெள்ளை ரிப்பனில் இணைத்துக் கழுத்தில் அணிந்து கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் இப்படி ஒரு வடிவமைப்பில் பதக்கம் எதுவும் தயாரிக்கப்பட்டதாக தெரியவில்லை. அதற்கடுத்த ஆண்டு பதக்கத்தின் வடிவமைப்பு மாற்றப்பட்டது.

1954 ஆண்டு சட்டப்படி இவ்விருதை அமரர்களுக்கு வழங்க இயலாது. மகாத்மா காந்திக்கு இவ்விருது வழங்கப்படாததற்கு இது ஒரு காரணமாக இருக்கலாம். எனினும் 1955-ஆம் ஆண்டு சட்டப்படி அமரர்களுக்கும் இவ்விருதை வழங்க வழிவகை செய்யப்பட்டது. அதன் பின் பத்து பேர்களுக்கு அவர்களின் மறைவிற்கு பின் இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. இவ்விருது இந்தியர்களுக்கு மட்டும் தான் வழங்கப்பட வேண்டும் என வரையறுக்கப்படாவிட்டாலும், அவ்வாறே பெரும்பாலும் வழங்கப்பட்டு வருகிறது. வெளிநாட்டில் பிறந்து இந்திய குடிமகள் ஆன அன்னை தெரசாவுக்கு(1980) இவ்விருது வழங்கப்பட்டது. இவரைத்தவிர இரு இந்தியர்கள் அல்லாதவர்களான கான் அப்துல் கப்பார் கானுக்கும் (1987) மற்றும் நெல்சன் மண்டேலாவுக்கும் (1990) இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. 1992-இல் சுபாஷ் சந்திர போசின் மறைவுக்குப் பின் அவருக்கு வழங்கப்பட்ட இவ்விருது சட்டச் சிக்கல்கள் காரணமாகத் திரும்பப் பெறப்பட்டது.

விருதுக்கு தேர்வு முறை

தொகு

பாரத ரத்னா விருதுக்கு தேர்வு செய்யப்படுவது என்பது பத்ம விருதுகளுக்கு தேர்வு செய்யப்படுவதில் இருந்து மாறுபடுகிறது. இதில் பாரத ரத்னா விருதை இன்னாருக்கு வழங்கலாம் என்ற பரிந்துரையை குடியரசு தலைவருக்கு பிரதமர் செய்வார்.

சாதி, தொழில், பதவி அல்லது பாலினம் ஆகிய பாகுபாடின்றி எந்த ஒரு நபரும் இந்த விருதுக்கு தகுதியானவராக கருதப்படுவார். குறிப்பிட்ட ஓர் ஆண்டில் அதிகபட்சமாக 3 நபர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படலாம். அதேவேளையில், ஒவ்வோர் ஆண்டும் இந்த விருது வழங்கப்பட வேண்டும் என்ற அவசியம் இல்லை.பாரத ரத்னா விருது பெறுவோர் குறித்த அதிகாரபூர்வ தகவல் இந்திய அரசிதழில் வெளியிடுவதன் மூலம் அறிவிக்கப்படுகிறது. இந்த விருது சனவரி 26ஆம் தேதி குடியரசு தினத்தின்போது வழங்கப்படுகிறது.

விருது பயன்பாட்டு விதிகள்

தொகு
 • விதி 18 (1)-இன்படி விருது பெற்றோர் தங்களின் பெயருக்கு முன்போ, பின்போ பாரத ரத்னா அடைமொழியைப் பயன்படுத்தக் கூடாது.
 • அவசியம் கருதினால் “பாரத ரத்னா விருதைப் பெற்றவர்” என்ற சொற்றொடரைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.[3][4]

பாரத ரத்னா விருது பெற்றவர்களுக்கான சலுகைகள்

தொகு

பாரத ரத்னா விருது பெறுவோருக்கு அதற்கான சான்றிதழும் பதக்கமும் வழங்கப்படும். பணம் ஏதும் வழங்கப்படாது. விருதை பெற்றவர்களுக்கு அரசு துறைகள் சார்பாக சில வசதிகள் செய்யப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, பாரத ரத்னா பெற்றவர்களுக்கு ரயில்வே துறை சார்பில் இலவச பயணத்துக்கான வசதி வழங்கப்படுகிறது. அரசின் முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்க பாரத ரத்னா விருது பெற்றவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படும். முன்னுரிமை வரிசையில் இவர்களை அரசாங்கம் வைக்கும். குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர், பிரதமர், ஆளுநர், குடியரசு முன்னாள் தலைவர், துணைப் பிரதமர், தலைமை நீதிபதி, மக்களவைத் தலைவர், மத்திய அமைச்சர், மாநில முதலமைச்சர்கள், முன்னாள் பிரதமர்கள், மக்களவை மற்றும் மாநிலங்களவையின் எதிர்க்கட்சி தலைவர்கள் ஆகியோருக்கு அடுத்த இடத்தில் பாரத ரத்னா விருது பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு அரசு மரியாதை அளிக்கப்படும். இதேபோல், மாநில அரசுகள் தங்கள் மாநிலத்தில் பாரத ரத்னா விருது பெற்றவர்களுக்கு சில சிறப்பு வசதிகளை வழங்கும்.[5]

விருது பெற்றோர் பட்டியல்

தொகு
வண்ணங்களுக்கான குறியீடு
   + வெளிநாட்டில் பிறந்து இந்திய குடிமகன்/குடிமகள் ஆனவர்
   * இந்தியர் அல்லாதவர்
   # மறைவுக்குப் பின்
பாரத ரத்னா விருது பெற்றோர் பட்டியல்[6]
ஆண்டு படம் பெயர் மாநிலம் / நாடு பிரதமர் / கட்சி குறிப்புகள்
1954   சி. ராஜகோபாலாச்சாரி தமிழ்நாடு ஜவகர்லால் நேரு, இதேகா இந்திய விடுதலைப் போராட்ட வீரர், விடுதலைக்குப் பின்னர் இந்தியாவின் முதல் மற்றும் கடைசி தலைமை ஆளுநர்[7]
  சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் தமிழ்நாடு ஜவகர்லால் நேரு, இதேகா தத்துவஞானியும், விடுதலை இந்தியாவின் முதல் குடியரசுத் துணைத்தலைவர் மற்றும் இரண்டாவது குடியரசுத் தலைவர்.[8][9] 1962 முதல், செப்டம்பர் 5 ஆம் தேதி இவரது பிறந்த நாள் இந்தியாவில் "ஆசிரியர் தினம்" என்று அனுசரிக்கப்படுகிறது.[10]
  சி. வி. இராமன் தமிழ்நாடு ஜவகர்லால் நேரு, இதேகா இயற்பியலுக்கான நோபல் பரிசு (1930) பெற்றவர்.[11]
1955   பகவான் தாஸ் உத்தரப் பிரதேசம் ஜவகர்லால் நேரு, இதேகா இறை மெய்யியலாளர் மற்றும் அரசியல்வாதி[12]
  விசுவேசுவரய்யா கருநாடகம் ஜவகர்லால் நேரு, இதேகா பொறியாளர், மைசூர் திவான் (1912–1918).[13]
  ஜவகர்லால் நேரு உத்தரப் பிரதேசம் ஜவகர்லால் நேரு, இதேகா இந்தியாவின் முதல் பிரதமர்.[14][15]
1957   கோவிந்த் வல்லப் பந்த் உத்தராகண்டம் ஜவகர்லால் நேரு, இதேகா இந்திய விடுதலைப் போராட்ட வீரர், உத்தரப் பிரதேச மாநிலத்தின் முதல் முதலமைச்சர் (1950–1954).[16]
1958   தோண்டோ கேசவ் கார்வே மகாராட்டிரம் ஜவகர்லால் நேரு, இதேகா சமூக சீர்திருத்தவாதி.
1961   பிதான் சந்திர ராய் மேற்கு வங்காளம் ஜவகர்லால் நேரு, இதேகா மருத்துவர், விடுதலை இயக்க போராளி, மேற்கு வங்காள மாநிலத்தின் இரண்டாவது முதலமைச்சர் (1948–62).[17] அவர் மேற்கு வங்கத்தின் இரண்டாவது முதல்வராக இருந்தார் (1948–62) மற்றும் ஜூலை 1 அன்று அவரது பிறந்த நாள்., இந்தியாவில் தேசிய மருத்துவர்கள் தினமாக அனுசரிக்கப்படுகிறது.[18]
  புருசோத்தம் தாசு தாண்டன் உத்தரப் பிரதேசம் ஜவகர்லால் நேரு, இதேகா இந்திய விடுதலைப் போராட்ட வீரர்.[19]
1962   இராஜேந்திரப் பிரசாத் பீகார் ஜவகர்லால் நேரு, இதேகா இந்திய விடுதலைப் போராட்ட வீரர், இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் (1950–62).[20]
1963   ஜாகீர் உசேன் ஆந்திரப் பிரதேசம் ஜவகர்லால் நேரு, இதேகா இந்திய விடுதலைப் போராட்ட வீரர், இந்தியாவின் இரண்டாவது குடியரசுத் துணைத் தலைவர் (1962–67), இந்தியாவின் மூன்றாவது குடியரசுத் தலைவர் (1967–69).[21]
  பாண்டுரங்க வாமன் காணே மகாராட்டிரம் ஜவகர்லால் நேரு, இதேகா இந்தியவியலாளர், சமசுகிருத அறிஞர்[22]
1966   லால் பகதூர் சாஸ்திரி[i]# உத்தரப் பிரதேசம் இந்திரா காந்தி,
இதேகா
இந்திய விடுதலைப் போராட்ட வீரர், இந்தியாவின் மூன்றாவது பிரதமர் (1964–66),[23][14][24]
1971   இந்திரா காந்தி உத்தரப் பிரதேசம் இந்திரா காந்தி,
இதேகா
"இந்தியவின் இரும்பு பெண்" என்று அழைக்கப்படுகிறார்,[25][14] முன்னாள் இந்தியப் பிரதமர் (1966–77, 1980–84). இந்த விருதைப் பெறும் போது இவரே, இந்தியப் பிரதமராக இருந்தார்.
1975   வி. வி. கிரி ஒடிசா இந்திரா காந்தி,
இதேகா
தொழிற்சங்கவாதி, இந்தியாவின் முதல் தற்காலிக குடியரசுத் தலைவர், இந்தியாவின் நான்காவது குடியரசுத் தலைவர் (1969–74).[8][26][27]
1976   கு. காமராஜ்[ii]# தமிழ்நாடு இந்திரா காந்தி,
இதேகா
"பெருந்தலைவர்" என்று அழைக்கப்படுபவர், இந்திய விடுதலைப் போராட்ட வீரர், நேருவின் மரணத்திற்குப் பிறகு லால் பகதூர் சாஸ்திரியையும், சாஸ்திரியின் மறைவுக்குப் பிறகு இந்திரா காந்தியையும் இந்தியப் பிரதமர் ஆக்குவதில் முக்கிய பங்கு வகித்தவர். அவர் 1954 மற்றும் 1963 க்கு இடையில் ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தார். அவர் இந்திய அரசியல் கட்சியான இந்திய தேசிய காங்கிரஸ் (அமைப்பு) நிறுவனர் ஆவார்.[28][29]
1980   அன்னை தெரேசா + மேற்கு வங்காளம்
(பிறப்பு ஸ்கோப்ஜே,
தற்போது வடக்கு மக்கெதோனியா)
இந்திரா காந்தி,
இதேகா
உரோமன் கத்தோலிக்க அருட்சகோதரி, பிறர் அன்பின் பணியாளர் என்ற கத்தோலிக்க துறவற சபையினை நிறுவினார், அமைதிக்கான நோபல் பரிசு (1979) பெற்றவர்.[30]
1983   ஆச்சார்யாவினோபா பாவே[iii]# மகாராட்டிரம் இந்திரா காந்தி,
இதேகா
இந்திய அறப்போராளி, மனித உரிமைகள் ஆதரவாளர், ரமோன் மக்சேசே விருது (1958) பெற்றவர்.[31][32]
1987   கான் அப்துல் கப்பார் கான்* பாக்கித்தான் ராஜிவ் காந்தி,
இதேகா
விடுதலைப் போராட்ட வீரர்.[33]
1988   எம். ஜி. இராமச்சந்திரன்[iv][a]# தமிழ்நாடு ராஜிவ் காந்தி,
இதேகா
"புரட்சித் தலைவர்" என்று அழைக்கப்படும் நடிகர் இராமச்சந்திரன், இந்திய வரலாற்றில் மாநிலத்தின் முதலமைச்சரான முதல் நடிகர் ஆவார். அவர் 1977 மற்றும் 1987க்கு இடையில் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தார். அவர் இந்திய அரசியல் கட்சியான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர் ஆவார்.[28]
1990   பி.ஆர் அம்பேத்கர்[v]# மகாராட்டிரம் வி. பி. சிங், ஜனதா தளம் (தே.மு) "இந்திய அரசியலமைப்பை உருவாக்கிய சிற்பி",இந்திய அரசியலமைப்புச் சாசனத்தை வரைவதற்கான குழுவின் தலைவர், இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர், சமூக சீர்திருத்தவாதி[35][36][37]
  நெல்சன் மண்டேலா* தென்னாப்பிரிக்கா வி. பி. சிங், ஜனதா தளம் (தே.மு) தென்னாப்பிரிக்காவில் நிறவெறிக்கு எதிராகப் போராடியவர், தென்னாப்பிரிக்காவின் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குடியரசுத் தலைவர், அமைதிக்கான நோபல் பரிசு (1993) பெற்றவர்.[38]
1991   ராஜீவ் காந்தி[vi]# உத்தரப் பிரதேசம் பி. வி. நரசிம்ம ராவ், இதேகா இந்தியாவின் ஆறாவது பிரதமர் (1984–89)[14]
  சர்தார் வல்லபாய் பட்டேல்[vii]# குசராத்து பி. வி. நரசிம்ம ராவ், இதேகா "இந்தியாவின் இரும்பு மனிதர்" என்று பரவலாக அறியப்படுகிறார்,[39] இந்திய விடுதலைப் போராட்ட வீரர், இந்தியாவின் முதல் துணை பிரதமர் (1947–50) மற்றும் உள்துறை அமைச்சராகவும் (1948–1950) இருந்தவர்.[40][41]
  மொரார்ஜி தேசாய்[b] குசராத்து பி. வி. நரசிம்ம ராவ், இதேகா இந்திய விடுதலைப் போராட்ட வீரர், இந்தியாவின் ஆறாவது பிரதமர் (1977–79).[14][43] இவர் இந்திய தேசிய காங்கிரஸில் இருந்து வராத முதல் இந்தியாவின் பிரதமர் ஆவார்.
1992   அபுல் கலாம் ஆசாத்[viii][c]# மேற்கு வங்காளம் பி. வி. நரசிம்ம ராவ், இதேகா இந்திய விடுதலைப் போராட்ட வீரர், இந்தியாவின் முதல் கல்வி அமைச்சராக இருந்தார் மற்றும் இலவச தொடக்கக் கல்வியை நோக்கி பணியாற்றினார். இவர் "மவுலானா ஆசாத்" என்று பரவலாக அறியப்பட்டார், நவம்பர் 11 அன்று இவரது பிறந்த நாள், இந்தியாவில் தேசிய கல்வி தினம் என அனுசரிக்கப்படுகிறது.[47]
  ஜே. ஆர். டி. டாட்டா மகாராட்டிரம் பி. வி. நரசிம்ம ராவ், இதேகா இந்தியாவின் முதன்மையான தொழிலதிபர்களுள் ஒருவர், இந்திய வானூர்திப் போக்குவரத்தின் முன்னோடி.[48]
  சத்யஜித் ராய் மேற்கு வங்காளம் பி. வி. நரசிம்ம ராவ், இதேகா திரைப்பட மேதை, ரமோன் மக்சேசே விருது (1967) பெற்றவர்.[49] 1984 ஆம் ஆண்டில், ராய்க்கு தாதாசாகெப் பால்கே விருது வழங்கப்பட்டது, இது சினிமாவில் இந்தியாவின் மிக உயர்ந்த விருது.[50]
1997   குல்சாரிலால் நந்தா பஞ்சாப் ஐ. கே. குஜரால், ஜனதா தளம் (ஐமு) இந்திய விடுதலைப் போராட்ட வீரர், பொருளாதார அறிஞர், இந்தியாவின் இடைக்காலப் பிரதமராக இரண்டு முறை பதவிவகித்தவர்.[14][51]
  அருணா ஆசஃப் அலி[ix]# அரியானா ஐ. கே. குஜரால், ஜனதா தளம் (ஐமு) இந்திய விடுதலை இயக்கத் தன்னார்வலர்.[52]
  ஏ. பி. ஜே. அப்துல் கலாம் தமிழ்நாடு ஐ. கே. குஜரால், ஜனதா தளம் (ஐமு) இந்திய அறிவியலாளர், இந்தியாவின் பதினோறாவது குடியரசுத் தலைவர் (2002–07).[53]
1998   எம். எஸ். சுப்புலட்சுமி தமிழ்நாடு ஐ. கே. குஜரால், ஜனதா தளம் (ஐமு) கருநாடக இசைப் பாடகி, ரமோன் மக்சேசே விருது (1974) பெற்றவர்.[54]
  சி. சுப்பிரமணியம் தமிழ்நாடு ஐ. கே. குஜரால், ஜனதா தளம் (ஐமு) இந்தியாவின் உணவு மற்றும் விவசாய அமைச்சர் (1964–66), இந்தியாவின் உணவு தன்னிறைவுக்கு வித்திட்டவராக அறியப்படுபவர்.[55]
1999   ஜெயபிரகாஷ் நாராயண்[x]# பீகார் அடல் பிஹாரி வாஜ்பாய், பாஜக இந்திய விடுதலைப் போராட்ட வீரர், சமூகப் பணியாளர், ரமோன் மக்சேசே விருது (1965) பெற்றவர்.[56]
  அமர்த்தியா சென் மேற்கு வங்காளம் அடல் பிஹாரி வாஜ்பாய், பாஜக பொருளாதார அறிஞர், பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு (1998) பெற்றவர்.[57][58]
  கோபிநாத் போர்டோலாய்[xi]# அசாம் அடல் பிஹாரி வாஜ்பாய், பாஜக இந்திய விடுதலைப் போராட்ட வீரர், அசாம் மாநில முதல் முதலமைச்சர் (1946–50).[59]
  ரவி சங்கர் உத்தரப் பிரதேசம் அடல் பிஹாரி வாஜ்பாய், பாஜக இந்துஸ்தானி சித்தார் இசைக்கலைஞர்.[60]
2001   லதா மங்கேஷ்கர் மகாராட்டிரம் அடல் பிஹாரி வாஜ்பாய், பாஜக பின்னணிப் பாடகர்[61]
  பிஸ்மில்லா கான் பீகார் அடல் பிஹாரி வாஜ்பாய், பாஜக இந்துஸ்தானி ஷெனாய் இசைக்கலைஞர்.[62]
2009   பீம்சென் ஜோஷி கருநாடகம் மன்மோகன் சிங், இதேகா இந்துஸ்தானி குரலிசைப் பாடகர்.[63][64]
2014   சி. என். ஆர். ராவ் கருநாடகம் மன்மோகன் சிங், இதேகா வேதியியலாளர்.[65]
  சச்சின் டெண்டுல்கர் மகாராட்டிரம் மன்மோகன் சிங், இதேகா இந்தியத் துடுப்பாட்ட வீரர்.[66][67]
2015   மதன் மோகன் மாளவியா[xii]# உத்தரப் பிரதேசம் நரேந்திர மோதி, பாஜக கல்வியாளர், இந்திய விடுதலைப் போராட்ட வீரர், இந்திய தேசிய காங்கிரசின் தலைவராக நான்கு முறை பொறுப்பாற்றியவர் (1909–10; 1918–19; 1932 மற்றும் 1933).[68]
  அடல் பிகாரி வாஜ்பாய் மத்தியப் பிரதேசம் நரேந்திர மோதி, பாஜக கவிஞர், இந்தியாவின் பதினோறாவது பிரதமர் (1996; 1998–2004).[14][69]
2019   பிரணாப் முகர்ஜி மேற்கு வங்காளம் நரேந்திர மோதி, பாஜக முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர்
  பூபேன் அசாரிகா[xiii]# அசாம் நரேந்திர மோதி, பாஜக திரைப்படத்துறை, இலக்கியம் மற்றும் இசை
  நானாஜி தேஷ்முக்[xiv]# மகாராட்டிரம் நரேந்திர மோதி, பாஜக நானாஜி தேஷ்முக் என்றும் அழைக்கப்படும் சண்டிகடாஸ் அமிர்தராவ் தேஷ்முக் (11 அக்டோபர் 1916–27 பிப்ரவரி 2010) இந்தியாவின் சமூக ஆர்வலர் ஆவார். கல்வி, சுகாதாரம், கிராமப்புற தன்னம்பிக்கை ஆகிய துறைகளில் பணியாற்றினார். அவர் பாரதிய ஜன சங்கத்தின் தலைவராகவும், மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்தார்.
2024   கர்ப்பூரி தாக்கூர்[xv]# பீகார் நரேந்திர மோதி, பாஜக

விளக்கக் குறிப்புகள்

தொகு
 1. 1960 ஆம் ஆண்டில், ராமச்சந்திரனுக்கு நான்காவது உயரிய சிவிலியன் விருதான பத்ம ஸ்ரீ வழங்கப்பட்டது, ஆனால் அழைப்பிதழ் தமிழ் அல்லாமல் தேவநாகரி எழுத்தில் எழுதப்பட்டதால் நிராகரிக்கப்பட்டது.[34]
 2. தேசாய் பிரதமர் பதவியில் இருந்தபோது விருதுகளை "மதிப்பற்றது மற்றும் அரசியல்மயப்படுத்தியது" என்பதற்காக ரத்து செய்தார்.".[42]
 3. முன்னதாக, அபுல் கலாம் ஆசாத் இந்தியாவின் கல்வி அமைச்சராக இருந்தபோது (1947–58) தேர்வுக் குழுவைக் காரணம் காட்டி பாரத ரத்னா விருதை மறுத்தார்.[44][45][46]

மறைவுக்குப் பின் பெற்றவர்கள்

தொகு
 1. லால் பகதூர் சாஸ்திரி 11 ஜனவரி 1966 அன்று தனது 61 வயதில் காலமானார்.
 2. காமராசர் 1975 அக்டோபர் 2 அன்று தனது 72 ஆவது வயதில் காலமானார்.
 3. வினோபா பாவே 1982 நவம்பர் 15 அன்று தனது 87 ஆவது வயதில் இறந்தார்.
 4. எம். ஜி. ராமச்சந்திரன் 1987 டிசம்பர் 24 அன்று தனது 70 ஆவது வயதில் காலமானார்.
 5. அம்பேத்கர் 1956 திசம்பர் 6 அன்று தனது 65 வயதில் காலமானார்.
 6. ராஜீவ் காந்தி 21 மே 1991 அன்று தனது 46 ஆவது வயதில் காலமானார்.
 7. வல்லபாய் படேல் 15 திசம்பர் 1950 அன்று தனது 75 ஆவது வயதில் காலமானார்.
 8. அபுல் கலாம் ஆசாத் 1958 பிப்ரவரி 22 அன்று தனது 69 ஆவது வயதில் காலமானார்.
 9. அருணா ஆசஃப் அலி 29 ஜூலை 1996 அன்று தனது 87 ஆவது வயதில் காலமானார்.
 10. ஜெயபிரகாஷ் நாராயண் 1979 அக்டோபர் 8 அன்று தனது 76 ஆவது வயதில் காலமானார்.
 11. கோபிநாத் போர்டோலோய் ஆகத்து 5, 1950 அன்று தனது 60 ஆவது வயதில் இறந்தார்.
 12. மதன் மோகன் மாளவியா 1946 நவம்பர் 12 அன்று தனது 84 ஆவது வயதில் காலமானார்.
 13. அசாரிகா 5 நவம்பர் 2011 அன்று தனது 85 ஆவது வயதில் காலமானார்.
 14. தேஷ்முக் பிப்ரவரி 27, 2010 அன்று தனது 93 ஆவது வயதில் காலமானார்.
 15. கர்ப்பூரி தாக்கூர், 17 பிப்ரவரி 1988 அன்று தனது 64 ஆவது வயதில் காலமானார்.

மேற்கோள்கள்

தொகு
 1. "GRFT3" (PDF). Tamil Nadu Public Service Commission.
 2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-01-19. பார்க்கப்பட்ட நாள் 2011-12-17.
 3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2011-11-26. பார்க்கப்பட்ட நாள் 2013-11-23.
 4. "பாரத ரத்தினங்கள் - 43". தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 23 நவம்பர் 2013.
 5. பாரத ரத்னா: யாருக்கெல்லாம் வழங்கப்படும், விருது பெறுபவர்களுக்கு கிடைக்கும் சலுகைகள் என்ன?
 6. "பாரத ரத்னா விருது பெற்றோர் பட்டியல் (1954–2014)" (PDF). Ministry of Home Affairs (India). Archived from the original (PDF) on 9 பெப்பிரவரி 2018. பார்க்கப்பட்ட நாள் 11 செப்டெம்பர் 2015.
 7. "Profile: Chakravarti Rajagopalachari". Encyclopædia Britannica. 
 8. 8.0 8.1 "Former President of India". The President's Secretariat. Archived from the original on 16 October 2014. பார்க்கப்பட்ட நாள் 12 May 2014.
 9. "Former Vice President of India". The Vice President's Secretariat. Archived from the original on 17 October 2014. பார்க்கப்பட்ட நாள் 12 May 2014.
 10. "Dr. Sarvepalli Radhakrishnan: The Philosopher President". Press Information Bureau (PIB). Archived from the original on 28 ஆகத்து 2015. பார்க்கப்பட்ட நாள் 12 செப்டெம்பர் 2015.
 11. "The Nobel Prize in Physics 1930". Nobel Foundation. Archived from the original on 11 October 2014. பார்க்கப்பட்ட நாள் 8 May 2014.
  • "Sir Venkata Raman Facts". Nobel Foundation. Archived from the original on 17 செப்டெம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 12 செப்டெம்பர் 2015.
 12. "About Us—Mahatma Gandhi Kashi Vidyapith Varanasi". Mahatma Gandhi Kashi Vidyapith. Archived from the original on 26 June 2014. பார்க்கப்பட்ட நாள் 8 May 2014.
 13. "Engineer's Day in India: celebrating M. Visvesvaraya's birthday". New Delhi: IBN Live. 15 September 2012 இம் மூலத்தில் இருந்து 16 September 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150916194050/http://www.ibnlive.com/news/india/engineers-day-in-india-celebrating-m-visvesvarayas-birthday-507944.html. 
 14. 14.0 14.1 14.2 14.3 14.4 14.5 14.6 "Prime Ministers of India". Prime Minister's Office (India). Archived from the original on 9 October 2014. பார்க்கப்பட்ட நாள் 12 May 2014.
 15. Guha, Ramachandra (11 சனவரி 2014). "Leave it to history: India's best and worst prime ministerse". The Telegraph. Calcutta. Archived from the original on 4 மார்ச்சு 2016. பார்க்கப்பட்ட நாள் 12 செப்டெம்பர் 2015.
 16. "Chief Minister of Uttar Pradesh". Uttar Pradesh Legislative Assembly. Archived from the original on 21 July 2014. பார்க்கப்பட்ட நாள் 9 May 2014.
 17. Kalra, R.N. (3 July 2011). "A doctor par excellence". The Hindu இம் மூலத்தில் இருந்து 12 September 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150912170057/http://www.thehindu.com/opinion/open-page/a-doctor-par-excellence/article2153732.ece. 
 18. "Premiers/Chief Ministers of West Bengal". West Bengal Legislative Assembly. Archived from the original on 12 May 2014. பார்க்கப்பட்ட நாள் 10 May 2014.
 19. "Profile: Purushottam Das Tandon". Encyclopædia Britannica. 
 20. "Profile: Rajendra Prasad". Encyclopædia Britannica. 
 21. Taneja 2000, ப. 167.
 22. "Mumbai University Alumni". University of Mumbai. Archived from the original on 4 செப்டெம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 13 செப்டெம்பர் 2015.
 23. "Gallery of Prime Ministers of India". Press Information Bureau (PIB). Archived from the original on 4 ஆகத்து 2015. பார்க்கப்பட்ட நாள் 13 செப்டெம்பர் 2015.
 24. "Profile: Lal Bahadur Shastri". Encyclopædia Britannica. 
 25. Thelikorala, Sulakshi (18 நவம்பர் 2011). "Indira Gandhi: Iron Lady of India". Asian Tribune. World Institute For Asian Studies. Archived from the original on 1 சனவரி 2016. பார்க்கப்பட்ட நாள் 13 செப்டெம்பர் 2015.
 26. Mansingh, Surjit (2006). Historical Dictionary of India. Scarecrow Press. p. 240. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8108-6502-0. Archived from the original on 28 பெப்பிரவரி 2018.
 27. Dubey, Scharada (2009). First among equals President of India. Westland. pp. 37–44. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-89975-53-1. Archived from the original on 7 சூலை 2014.[தொடர்பிழந்த இணைப்பு]
 28. 28.0 28.1 "Details of terms of successive legislative assemblies constituted under the constitution of India". Tamil Nadu Legislative Assembly. Archived from the original on 6 October 2014. பார்க்கப்பட்ட நாள் 10 May 2014.
 29. "Profile: Kumaraswami Kamaraj". Encyclopædia Britannica. 
 30. "Profile: Blessed Mother Teresa". Encyclopædia Britannica. 
 31. "Profile: Vinoba Bhave". Encyclopædia Britannica. 
 32. "Ramon Magsaysay Award winners". Ramon Magsaysay Award Foundation. Archived from the original on 12 May 2014. பார்க்கப்பட்ட நாள் 12 May 2014.
 33. "Profile: Abdul Ghaffar Khan". Encyclopædia Britannica. 
 34. "The chequered history of our national honours". Rediff.com. 1 February 2010. Archived from the original on 18 May 2014. பார்க்கப்பட்ட நாள் 17 May 2014.
 35. "Profile: Bhimrao Ramji Ambedkar". Encyclopædia Britannica. 
 36. Untouchability, The Dead Cow And The Brahmin. Outlook. 22 October 2002. http://www.outlookindia.com/article/untouchability-the-dead-cow-and-the-brahmin/217660. பார்த்த நாள்: 7 November 2015. 
 37. Vajpeyi, Ananya (27 August 2015). "Owning Ambedkar sans his views". The Hindu இம் மூலத்தில் இருந்து 7 January 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160107050620/http://www.thehindu.com/opinion/op-ed/comment-article-from-ananya-vajpeyi-owning-ambedkar-sans-his-views/article7583272.ece. 
 38. "Profile: Nelson Mandela". Encyclopædia Britannica. 
 39. "PM Modi pays tributes to Sardar Patel on his death anniversary". New Delhi: IBN Live. 15 December 2014 இம் மூலத்தில் இருந்து 26 December 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20151226114334/http://www.ibnlive.com/news/politics/pm-modi-pays-tributes-to-sardar-patel-on-his-death-anniversary-731284.html. 
 40. Patel's communalism—a documented record. Frontline. 13 December 2013. http://www.frontline.in/cover-story/patels-communalisma-documented-record/article5389270.ece. பார்த்த நாள்: 6 November 2015. 
 41. "Profile: Vallabhbhai Jhaverbhai Patel". Encyclopædia Britannica. 
 42. Mukul, Akshaya (20 January 2008). "The great Bharat Ratna race". The Times of India இம் மூலத்தில் இருந்து 17 May 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20140517172013/http://timesofindia.indiatimes.com/home/sunday-toi/special-report/The-great-Bharat-Ratna-race/articleshow/2714556.cms. 
 43. Bhatia, Shyam (11 July 2001). "When India and Pakistan almost made peace". Rediff.com இம் மூலத்தில் இருந்து 10 July 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150710140448/http://www.rediff.com/news/2001/jul/11spec.htm. 
 44. Ramachandran, Sudha (24 January 2008). "India's top award misses congeniality". Asia Times Online. Bangalore. Archived from the original on 16 October 2014. பார்க்கப்பட்ட நாள் 14 May 2014.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
 45. "Those who said no to top awards". The Times of India. 20 January 2008 இம் மூலத்தில் இருந்து 24 November 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131124063906/http://timesofindia.indiatimes.com/home/specials/Those-who-said-no-to-top-awards/articleshow/2714615.cms. 
 46. "List of former Ministers in charge of Education/HRD". Ministry of Human Resource Development. Archived from the original on 18 October 2014. பார்க்கப்பட்ட நாள் 12 May 2014.
 47. "National Education Day celebrated". The Hindu (Krishnagiri). 14 November 2011 இம் மூலத்தில் இருந்து 25 March 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140325010312/http://www.thehindu.com/news/cities/Coimbatore/national-education-day-celebrated/article2627310.ece. 
 48. "Profile: J.R.D. Tata". Encyclopædia Britannica. 
 49. "Sight and Sound Poll 1992: Critics". California Institute of Technology. Archived from the original on 16 October 2013. பார்க்கப்பட்ட நாள் 3 February 2013.
 50. "Dadasaheb Phalke Awards". Directorate of Film Festivals. Archived from the original on 26 மே 2016. பார்க்கப்பட்ட நாள் 6 மே 2012.
 51. "Former PM Gulzarilal Nanda dead". Rediff.com. 15 சனவரி 1998. Archived from the original on 4 மார்ச்சு 2016. பார்க்கப்பட்ட நாள் 14 செப்டெம்பர் 2015.
 52. Singh, Kuldeep (31 சூலை 1996). "Obituary: Aruna Asaf Ali". The Independent. Archived from the original on 25 செப்டெம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 14 செப்டெம்பர் 2015.
 53. "Bio-data: Avul Pakir Jainulabdeen Abdul Kalam". Press Information Bureau (PIB). 26 July 2002. Archived from the original on 13 May 2014. பார்க்கப்பட்ட நாள் 12 May 2014.
 54. "M S Subbulakshmi: 'Nightingale' of Carnatic music". Rediff.com. 12 December 2004. Archived from the original on 8 July 2015. பார்க்கப்பட்ட நாள் 23 September 2015.
 55. "C Subramaniam awarded Bharat Ratna". Rediff.com. 18 February 1998. Archived from the original on 3 February 2014. பார்க்கப்பட்ட நாள் 12 May 2014.
 56. Merchant, Minhaz; Bobb, Dilip; Louis, Arul B.; Sethi, Sunil; Chawla, Prabhu; Ahmed, Farzand (6 மார்ச்சு 2014). "Jayapraksh Narayan: A leader betrayed". India Today. Archived from the original on 6 சூலை 2015. பார்க்கப்பட்ட நாள் 17 செப்டெம்பர் 2015.
 57. "The Sveriges Riksbank Prize in Economic Sciences in Memory of Alfred Nobel 1998". Nobel Foundation. Archived from the original on 11 October 2014. பார்க்கப்பட்ட நாள் 9 May 2014.
 58. "Biographical note: Amartya Sen: Thomas W. Lamont University Professor, and Professor of Economics and Philosophy". Harvard University. Archived from the original on 9 செப்டெம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 17 செப்டெம்பர் 2015.
 59. "Assam Legislative Assembly—Chief Ministers since 1937". Assam Legislative Assembly. Archived from the original on 16 January 2014. பார்க்கப்பட்ட நாள் 10 May 2014.
 60. "Profile: Ravi Shankar". Encyclopædia Britannica. 
 61. "India's Nightingale Lata Mangeshkar turns 82 today". Firstpost. 28 September 2011 இம் மூலத்தில் இருந்து 30 January 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120130132359/http://www.firstpost.com/bollywood/lata-mangeshkar-who-touched-many-hearts-is-82-94473.html. 
 62. "Indian music's soulful maestro". BBC News. 21 August 2006 இம் மூலத்தில் இருந்து 17 November 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20151117092851/http://news.bbc.co.uk/2/hi/south_asia/5270968.stm. 
 63. Jamkhandi, Gururaj (26 January 2011). "Torch-bearers of kirana gharana, and their followers". The Times of India (ஹூப்ளி) இம் மூலத்தில் இருந்து 3 February 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110203134747/http://timesofindia.indiatimes.com/city/hubli/Torch-bearers-of-kirana-gharana-and-their-followers/articleshow/7356191.cms. 
 64. Thakur 2010, ப. 77–86.
 65. "Indian Fellow: Professor Chintamani Nagesa Ramachandra Rao". Indian National Science Academy. Archived from the original on 3 டிசம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 18 September 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  • "Profile: Rao C.N.R". Jawaharlal Nehru Centre for Advanced Scientific Research. Archived from the original on 1 செப்டெம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 18 செப்டெம்பர் 2015.
  • "Research: Rao C.N.R". Jawaharlal Nehru Centre for Advanced Scientific Research. Archived from the original on 1 செப்டெம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 18 செப்டெம்பர் 2015.
 66. "Profile: Sachin Tendulkar". Encyclopædia Britannica. 
 67. "Records/Combined Test, ODI and T20I records/Batting records; Most runs in career". ESPNcricinfo. 13 September 2015 இம் மூலத்தில் இருந்து 21 November 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131121051835/http://stats.espncricinfo.com/ci/content/records/284269.html. 
 68. "Profile: Madan Mohan Malaviya". Encyclopædia Britannica. 
 69. "Profile of Shri Atal Behari Bajpayee". Press Information Bureau (PIB). Archived from the original on 10 ஆகத்து 2015. பார்க்கப்பட்ட நாள் 18 செப்டெம்பர் 2015.

உசாத்துணை

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாரத_ரத்னா&oldid=3880400" இலிருந்து மீள்விக்கப்பட்டது