பிரணப் முகர்ஜி

இந்திய நாட்டின், பதின்மூன்றாம், 'மாண்புமிகு' குடியரசுத் தலைவராக இருந்த ஆளுமை.
(பிரணாப் முகர்ஜி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பிரணப் குமார் முகர்ஜி (Pranab Mukherjee, வங்காள மொழி: প্রণব কুমার মুখার্জী, 11 திசம்பர் 1935 - 31 ஆகத்து 2020) (சுருக்கமாக பிரணாப் முகர்ஜி), இந்திய அரசியல்வாதி. 13 ஆவது இந்தியக் குடியரசுத் தலைவராக 2012 முதல் 2017 வரை பதவி வகித்தவர். மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த மூத்த காங்கிரசு அரசியல்வாதியான பிரணப், குடியரசுத் தலைவர் ஆகும் முன்னர் மன்மோகன் சிங் அரசில் நிதி அமைச்சர் ஆக இருந்தார்.[2] முன்னதாக கல்கத்தா பல்கலைக்கழகத்திலிருந்து சட்டப் பட்டத்தைப் பெற்றுள்ளார்.

பிரணாப் முகர்ஜி
13-வது இந்தியக் குடியரசுத் தலைவர்
பதவியில்
25 சூலை 2012 – 25 சூலை 2017
பிரதமர்மன்மோகன் சிங்
துணை அதிபர்அமீத் அன்சாரி
முன்னையவர்பிரதீபா பட்டீல்
பின்னவர்ராம் நாத் கோவிந்த்
இந்தியாவின் நிதியமைச்சர்
பதவியில்
24 சனவரி 2009 – 26 சூன் 2012
பிரதமர்மன்மோகன் சிங்
முன்னையவர்மன்மோகன் சிங்
பின்னவர்மன்மோகன் சிங்
பதவியில்
சனவரி 1982 – திசம்பர் 1984
பிரதமர்இந்திரா காந்தி
ராஜீவ் காந்தி
முன்னையவர்ரா. வெங்கட்ராமன்
பின்னவர்வி. பி. சிங்
வெளிவிவகாரத்துறை அமைச்சர்
பதவியில்
24 அக்டோபர் 2006 – 23 மே 2009
பிரதமர்மன்மோகன் சிங்
முன்னையவர்மன்மோகன் சிங்
பின்னவர்எஸ். எம். கிருசுனா
பதவியில்
பெப்ரவரி 10, 1995 – மே 16, 1996
பிரதமர்பி. வி. நரசிம்ம ராவ்
முன்னையவர்தினேசு சிங்
பின்னவர்சிக்கந்தர் பக்த்
பாதுகாப்பு அமைச்சர்
பதவியில்
22 மே 2004 – 26 அக்டோபர் 2006
பிரதமர்மன்மோகன் சிங்
முன்னையவர்ஜார்ஜ் பெர்னாண்டஸ்
பின்னவர்அ. கு. ஆன்டனி
திட்டக் குழு துணைத் தலைவர்
பதவியில்
சூன் 24, 1991 – மே 15, 1996
பிரதமர்பி. வி. நரசிம்ம ராவ்
முன்னையவர்மோகன் தாரியா
பின்னவர்மது தண்டவதே
தலைவர், மேற்கு வங்கம் பிரதேச காங்கிரசு கமிட்டி
பதவியில்
ஆகத்து, 2000[1] – சூலை, 2010
முன்னையவர்சோமந்தரா நாத் மித்ரா
பின்னவர்மனாசு புனியா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1935-12-11)11 திசம்பர் 1935
மிரதி, பீர்பம், பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு
இறப்பு31 ஆகத்து 2020(2020-08-31) (அகவை 84)
புதுதில்லி, இந்தியா
தேசியம்இந்தியர்
துணைவர்சுவ்ரா முகர்ஜி
வாழிடம்(s)கொல்கத்தா, இந்தியா
முன்னாள் கல்லூரிகொல்கத்தா பல்கலைக்கழகம்
இணையத்தளம்ministry/dept eco affairs/dea.html Official Website

1969ம் ஆண்டு இந்திரா காந்தியால் இந்திய மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் 1975, 1981, 1993, 1999 ஆகிய ஆண்டுகளிலும் மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2004ம் ஆண்டு 14வது மக்களவைக்கு மேற்கு வங்காளத்தில் உள்ள ஜங்கிப்பூர் மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார், 2009ம் ஆண்டு 15வது மக்களவைக்கு ஜங்கிப்பூரிலிருந்து மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார் [3]. இந்திரா காந்தி அமைச்சரவையில் 1982 - 84ல் நிதியமைச்சராக பணியாற்றினார். இந்திரா காந்தியின் மறைவுக்குப்பின் 1986-89 வரை காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி ராஷ்ட்ரிய சமாஜ்வாடி காங்கிரஸ் கட்சியைத் தொடங்கி நடத்தினார். 2004-06ல் பாதுகாப்புத் துறை அமைச்சராகவும், 1995-96, 2006-09 ஆகிய ஆண்டுகளில் வெளியுறவுத்துறை அமைச்சராகவும் இருந்தார்[4].

2012ஆம் ஆண்டு சூலையில் நடந்த இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தலில் பதியப்பட்ட 10,29,750 வாக்குகளில் 69.3% வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.[5] சூலை 25, 2012 அன்று இந்தியக் குடியரசின் பதினான்காவது குடியரசுத் தலைவராகப் (பதின்மூன்றாவது நபராக) பொறுப்பேற்றார்.

இவரது நூல்கள்:

  1. பியான்ட் சர்வைவல்: எமெர்ஜிங் டைமன்சன்ஸ் ஆப் இந்தியன் எக்கனமி-1984.
  2. ஆஃப் தி டிராக் - 1987.
  3. சாகா ஆப் ஸ்ட்ரக்குள் அண்ட் சேக்ரிபைஸ் - 1992.
  4. சேலஞ்சஸ் பிஃபோர் தி நேசன் - 1992.
  5. தாட் அண்ட் ரிப்லெக்சன்ஸ் - 2014.
  6. தி டிராமடிக் டிகேட்: தி இந்திரா காந்தி இயர்ஸ் - 2014.

தனிவாழ்வு

தொகு

மேற்கு வங்காளம் மாநிலம் பிர்பும் மாவட்டத்தில் உள்ள மிரதி எனும் கிராமத்தில் பிறந்தவர். தந்தை கமதா கின்கர் முகர்ஜி, தாயார் ராஜலட்சுமி. இவரின் தந்தை 1952-64 வரை மேற்கு வங்காளம் மாநில சட்ட மேலவை உறுப்பினராக இருந்தார் [6][7]. இவர் 1957ம் ஆண்டு ஜூலை 13ம் தேதி சுவ்ரா என்பவரை மணந்தார். இவர்களுக்கு அபிஜித், இந்திரஜித் என்ற மகன்களும், சர்மிஷ்தா என்ற மகளும் உள்ளனர்[8]. அபிஜித், மேற்கு வங்காள காங்கிரஸ் கட்சியின் ஜஙிபுர் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார், மகள் கதக் நடன கலைஞராக உள்ளார்[9]

விருதுகள்

தொகு

மேற்கோள்களும் குறிப்புக்களும்

தொகு
  1. "Political Profile". பிரணப் முகர்ஜியின் தனிப்பட்ட வலைத்தளம். Archived from the original on 2012-06-17. பார்க்கப்பட்ட நாள் 16 சூன் 2012.
  2. https://www.vikatan.com/amp/news/india/5234.html
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-07-23. பார்க்கப்பட்ட நாள் 2012-07-25.
  4. http://news.vikatan.com/?nid=9451[தொடர்பிழந்த இணைப்பு]
  5. "It's President Pranab". இந்தியன் எக்சுபிரசு. 23 சூலை 2012. பார்க்கப்பட்ட நாள் 23 சூலை 2012.
  6. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-06-21. பார்க்கப்பட்ட நாள் 2012-07-22.
  7. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2010-09-04. பார்க்கப்பட்ட நாள் 2012-06-16.
  8. http://india.gov.in/govt/loksabhampbiodata.php?mpcode=4195
  9. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-08-31. பார்க்கப்பட்ட நாள் 2012-07-22.
  10. பிரணாப் முகர்ஜி உள்ளிட்ட மூவருக்கு பாரத ரத்னா விருது
அரசியல் பதவிகள்
முன்னர் இந்தியாவின் நிதியமைச்சர்
1982–1984
பின்னர்
முன்னர் திட்டக் குழு துணைத் தலைவர் (இந்தியா)
1991–1996
பின்னர்
முன்னர் வெளிவிவகாரத் துறை அமைச்சர்
1995–1996
பின்னர்
முன்னர் இந்தியப் பாதுகாப்பு அமைச்சர்
2004–2006
பின்னர்
முன்னர் வெளிவிவகாரத் துறை அமைச்சர் (இந்தியா)
2006–2009
பின்னர்
இந்தியாவின் நிதியமைச்சர்
2009–2012
பின்னர்
முன்னர் இந்தியக் குடியரசுத் தலைவர்
2012 -2017
பின்னர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரணப்_முகர்ஜி&oldid=3926702" இலிருந்து மீள்விக்கப்பட்டது