ஜார்ஜ் பெர்னாண்டஸ்

இந்திய முன்னாள் அரசியல்வாதி

ஜார்ஜ் மேத்தியூ பெர்னாண்டசு[3] (George Mathew Fernandes; சூன் 3, 1930 - சனவரி 29, 2019), ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர்களில் ஒருவரும் இந்திய அரசியல்வாதியும் ஆவார்.[4]

ஜார்ஜ் பெர்னாண்டசு
2002 இல் ஜார்ஜ் பெர்னாண்டசு
பாதுகாப்பு அமைச்சர்
பதவியில்
21 அக்டோபர் 2001 – 22 மே 2004
பிரதமர் அடல் பிகாரி வாச்பாய்
முன்னவர் ஜஸ்வந்த் சிங்
பின்வந்தவர் பிரணப் முகர்ஜி
பதவியில்
19 மார்ச் 1998 – 16 மார்ச் 2001
பிரதமர் அடல் பிகாரி வாச்பாய்
முன்னவர் முலாயம் சிங் யாதவ்
பின்வந்தவர் யசுவந்த் சிங்
ரெயில்வே அமைச்சர்
பதவியில்
2 திசம்பர் 1989 – 10 நவம்பர் 1990
பிரதமர் வி. பி. சிங்
முன்னவர் மாத்வ்ராவ் சிந்தியா
பின்வந்தவர் யானேசுவர் மிசுரா
பீகார் நாடாளுமன்ற உறுப்பினர், மாநிலங்களவை
பதவியில்
4 ஆகத்து 2009 – 7 சூலை 2010
முசாப்பர்பூர் மக்களவைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
2004–2009
முன்னவர் ஜய்நாராயண் பிரசாத் நிசான்
பின்வந்தவர் ஜய்நாராயண் பிரசாத் நிசான்
பதவியில்
1989–1996
முன்னவர் லலிதேசுவர் பிரசாத் சாகி
பின்வந்தவர் ஜய்நாராயண் பிரசாத் நிசான்
பதவியில்
1977–1984
முன்னவர் நவால் கிசோர் சின்கா
பின்வந்தவர் லலிதேசுவர் பிரசாத் சாகி
பதவியில்
1996–2004
முன்னவர் விஜய் குமார் யாதவ்
பின்வந்தவர் நிதிஷ் குமார்
தொகுதி நாலந்தா மக்களவைத் தொகுதி, பீகார்
பதவியில்
1967–1971
முன்னவர் சதாசிவ் கனோஜி பட்டீல்
பின்வந்தவர் கைலாசு நாராயண் நருலா சிவ்நாராயன்
தொகுதி தெற்கு மும்பை மக்களவைத் தொகுதி, மகாராட்டிரம்
தனிநபர் தகவல்
பிறப்பு ஜார்ஜ் மேத்தியூ பெர்னாண்டசு
சூன் 3, 1930(1930-06-03)
மங்களூர், மெட்ராஸ் மாகாணம், பிரித்தானிய இந்தியா
(இன்றைய மங்களூரு, கருநாடகம், இந்தியா)
இறப்பு 29 சனவரி 2019(2019-01-29) (அகவை 88)
புது தில்லி, இந்தியா
தேசியம் இந்தியர்
அரசியல் கட்சி சமதா கட்சி[1][2]
பிற அரசியல்
சார்புகள்
வாழ்க்கை துணைவர்(கள்) லைலா கபீர்
பிள்ளைகள் 1 மகன்
இருப்பிடம் பெங்களூர், கருநாடகம், இந்தியா
விருதுகள் பத்ம விபூசண் (2020) (மறைவிற்குப் பின்)
கையொப்பம்

இந்திய நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் தொகு

ஜார்ஜ் பெர்னாண்டஸ், 1967 ஆம் ஆண்டில் இந்திய நாடாளுமன்றத்துக்கு நடைபெற்ற நான்காவது மக்களவைத் தேர்தலில் முதன் முறையாகத் தேர்வானார். அதன் பிறகு, 1977, 1980, 1989, 1991, 1996, 1998, 1999, 2004 ஆம் ஆண்டுகளில் நடந்த தேர்தல்களிலும் வென்று மொத்தம் ஒன்பது முறை இந்திய நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகப் பணியாற்றி உள்ளார்.

இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் தொகு

 • 2009 ஆம் ஆண்டிலிருந்து பீகார் மாநிலத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டு பணியாற்றியுள்ளார்.

அமைச்சர் பணி தொகு

 • 1977 ஆம் ஆண்டில் மார்ச் முதல் சூலை வரை இந்தியத் தகவல் தொடர்புத் துறை அமைச்சராகப் பணியாற்றியுள்ளார்.
 • 1977 முதல் 1979 வரை இந்தியத் தொழில்துறை அமைச்சராகப் பணியாற்றியுள்ளார்.
 • 1989 முதல் 1990 வரை இந்தியத் தொடர்வண்டித்துறை அமைச்சராகப் பணியாற்றியுள்ளார்.
 • 1990 ஆம் ஆண்டு மார்ச் முதல் மே வரை இந்தியக் காஷ்மீர் மாநில விவகாரங்களுக்கான அமைச்சராக கூடுதல் பொறுப்பு வகித்துள்ளார்.
 • 1998 முதல் 1999 ஆம் ஆண்டு வரை இந்தியப் பாதுகாப்பு அமைச்சராகப் பணியாற்றியுள்ளார்.
 • 1999 ஆம் ஆண்டு அக்டோபர் 13 முதல் 2001 ஆம் ஆண்டு மார்ச் 11 ஆம் தேதி வரை இந்தியப் பாதுகாப்பு அமைச்சராகப் பணியாற்றியுள்ளார்.
 • 2001 ஆம் ஆண்டு அக்டோபர் 15 முதல் 2004 ஆம் ஆண்டு மே மாதம் வரை இந்தியப் பாதுகாப்பு அமைச்சராகப் பணியாற்றியுள்ளார்.

மறைவு தொகு

ஜார்ஜ் பெர்னாண்டசு ஆல்சைமர் நோயால் பாதிக்கப்பட்டு சில ஆண்டுகளாகப் படுக்கையில் இருந்தார்.[5] 2019 சனவரி 29 அன்று தில்லியில் தனது 88-வது அகவையில் காலமானார்.[6][7]

மேற்கோள்கள் தொகு

 1. "SAMATA PARTY – Official Website" (ஆங்கிலம்). 2022-02-15 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2022-04-30 அன்று பார்க்கப்பட்டது.
 2. Gupta, Smita (24 October 2013). "Now a Samata Manch to build anti-Congress platform". The Hindu. http://www.thehindu.com/news/national/now-a-samata-manch-to-build-anticongress-platform/article5265767.ece. 
 3. Reddy 1977, ப. 144 "(i) Accused George Mathew Fernandes (hereinafter referred to as George Fernandes) was the former Chairman of the Socialist Party of India and also the President of the All India Railway- men's Federation."
 4. குரல் அற்றவர்களின் குரல் ஜார்ஜ் பெர்னாண்டஸ்
 5. Health of former defence minister George Fernandes deteriorating: Brother
 6. "George Fernandes, Former Defence Minister, Dies At 88 After Long Illness". NDTV.com. 29 January 2019. https://www.ndtv.com/india-news/george-fernandes-former-defence-minister-dies-at-88-after-long-illness-1984690. பார்த்த நாள்: 29 January 2019. 
 7. "George Fernandes, former Defence Minister, passes away" (in en-IN). The Hindu. 29 January 2019. https://www.thehindu.com/news/national/george-fernandes-former-defence-minister-passes-away/article26117612.ece. பார்த்த நாள்: 29 January 2019. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜார்ஜ்_பெர்னாண்டஸ்&oldid=3665586" இருந்து மீள்விக்கப்பட்டது