ஜஸ்வந்த் சிங்

இந்திய அரசியல்வாதி

ஜஸ்வந்த் சிங் (Jaswant Singh) (பிறப்பு: ஜனவரி 3 1938) (இறப்பு செப்டம்பர் 27, 2020)இந்திய அரசியல்வாதியும், இந்திய நாடாளுமன்ற உறுப்பினருமான இவர் டார்ஜிலிங் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவராவார். இராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவரான இவர் மயோ கல்லூரி பழைய மாணவன் மற்றும் கதக்வாலாவில் உள்ள தேசிய பாதுகாப்பு பயிற்சி பள்ளியில் கல்வி பயின்றவர். இந்திய இராணுவத்தில் அலுவலராக 1960 களில் பணியாற்றியவர். பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் இன் குறைந்த கால ஆட்சி காலமான மே 16, 1996 முதல் ஜூன் 1, 1996 வரையுள்ள இடைப்பட்ட காலத்தில், அவரது அமைச்சரவையில் ஆய அமைச்சராக இந்திய நிதியமைச்சர் பொறுப்பிலும், அதன் பின் அமைந்த வாஜ்பாயின் அமைச்சரவையில் இரண்டு வருடங்களுக்குப்பின் வெளியுறவுத்துறை அமைச்சராக டிசம்பர் 5, 1998 முதல் ஜூலை 1, 2002 வரையுள்ள காலத்தில் பொறுப்பிலுருந்தார். 2002 க்கு பிறகு மீண்டும் நிதியமைச்சராக பொறுப்பேற்று அக்கட்சி தேர்தலில் தோற்கடிக்கப்பட்டு பதவியிறங்கும் காலமான 2004 வரை பொறுப்பிலிருந்தார். இவருடைய சாத்வீகமான அரசியல் போக்கு அனைவரையும் கவர்ந்ததாகும். பாரதீய ஜனதா கட்சி பெரும்பாலும் வலதுசாரி தேசியவாதிகள் அமைப்பு என்று வர்ணிக்கப்பட்டாலும் இவர் அவைகளிலிருந்து மாறுபட்டு சுதந்திரமான மக்களாட்சியை (ஜனநாயகத்தை) வலியுறுத்துபவராக விளங்கியதின் விளைவாக சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் என்ற விருதினை 2001 இல் பெற்றார்.

ஜஸ்வந்த் சிங்
மக்களவை உறுப்பினர்
பதவியில்
2009–பதவியில்
பிரதமர்மன்மோகன் சிங்
முன்னையவர்Dawa Narbula
தொகுதிடார்ஜீலிங்
இந்திய நிதியமைச்சர்
பதவியில்
2002–2004
பிரதமர்அடல் பிகாரி வாச்பாய்
முன்னையவர்யஷ்வந்த் சின்கா
பின்னவர்ப. சிதம்பரம்
இந்திய இராணுவ அமைச்சர்
பதவியில்
2000–2001
பிரதமர்அடல் பிகாரி வாச்பாய்
முன்னையவர்ஜார்ஜ் பெர்னாண்டஸ்
பின்னவர்ஜார்ஜ் பெர்னாண்டஸ்
இந்திய வெளிவிவகாரத் துறை அமைச்சர்
பதவியில்
1998–2004
பிரதமர்அடல் பிகாரி வாச்பாய்
முன்னையவர்அடல் பிகாரி வாச்பாய்
பின்னவர்யஷ்வந்த் சின்கா
இந்தியாவின் நிதியமைச்சர்
பதவியில்
1996–1996
பிரதமர்அடல் பிகாரி வாச்பாய்
முன்னையவர்மன்மோகன் சிங்
பின்னவர்ப. சிதம்பரம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புசனவரி 3, 1938 (1938-01-03) (அகவை 86)
இராஜபுதனம், பிரித்தானிய இந்தியா
இறப்பு27 செப்டம்பர் 2020
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
முன்னாள் கல்லூரிMayo College
இந்திய இராணுவ அகாதமி
இணையத்தளம்http://www.jaswantsingh.com

மேற்கோள்கள்

தொகு

வெளியிணைப்புகள்

தொகு
அரசியல் பதவிகள்
முன்னர் இந்திய நிதியமைச்சர்
1996–1996
பின்னர்
முன்னர் இந்திய நிதியமைச்சர்
2002–2004
முன்னர் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர்
1998–2002
பின்னர்
முன்னர் இந்திய இராணுவ அமைச்சர்
2000–2001
பின்னர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜஸ்வந்த்_சிங்&oldid=4104729" இலிருந்து மீள்விக்கப்பட்டது