யஷ்வந்த் சின்கா

இந்திய அரசியல்வாதி

யஷ்வந்த் சின்கா (Yashwant Sinha) (பிறப்பு: நவம்பர் 6, 1937, பாட்னா[1]) இந்திய அரசியல்வாதியும் முன்னாள் இந்திய நிதியமைச்சராக 1990 முதல் 1991 வரை பிரதமர் சந்திரசேகர் அமைச்சரவையிலும், மார்ச் 1998 முதல் சூலை 2002 வரை பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையிலான அமைச்சரவையிலும் பொறுப்பு வகித்தவர்.[2] மேலும் வெளியுறவு அமைச்சர் ஆக (சூலை 2002 - மே 2004)[3] அடல் பிகாரி வாஜ்பாய் இன் அமைச்சரவையில் பொறுப்பு வகித்தார். தற்பொழுது பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருக்கின்றார்.[4] இவரது மகன் ஜெயந்த் சின்ஹா 16 மற்றும் 17வது மக்களவை உறுப்பினர் ஆவார். ஓற்றுமித்த எதிர்க்கட்சிளின் சார்பில் 2022 குடியரசு தலைவர் தேர்தலில் நிறுத்தப்பட்டார்.

யஷ்வந்த் சின்கா
Yashwant Sinha IMF.jpg
இந்திய வெளிவிவகாரத் துறை அமைச்சர்
பதவியில்
2002–2004
முன்னவர் ஜஸ்வந்த் சிங்
பின்வந்தவர் நட்வர் சிங்
இந்தியாவின் நிதியமைச்சர்
பதவியில்
1998–2002
முன்னவர் ப. சிதம்பரம்
பின்வந்தவர் ஜஸ்வந்த் சிங்
இந்தியாவின் நிதியமைச்சர்
பதவியில்
1990–1991
முன்னவர் மது தண்டவதே
பின்வந்தவர் மன்மோகன் சிங்
தனிநபர் தகவல்
பிறப்பு செப்டம்பர் 6, 1937 (1937-09-06) (அகவை 85)
பாட்னா, பீகார்
அரசியல் கட்சி பாரதீய ஜனதா கட்சி
பிள்ளைகள் ஜெயந்த் சின்ஹா
சமயம் இந்து

இந்திய ஆட்சிப் பணிதொகு

இவர் இந்திய ஆட்சிப் பணியில் 1960 முதல் 1984 வரை இருந்து விருப்பஓய்வு பெற்று அரசியலுக்கு வந்தார்.

இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்தொகு

இவர் இந்திய நாடாளுமன்றத்திற்கு மாநிலங்களவை உறுப்பினராக 1989 மற்றும் 2004 ல் இருமுறையும், மக்களவை உறுப்பினராக சார்க்கண்ட் மாநிலம் ஹஜாரியாபாக் மக்களவைத் தொகுதியிலிருந்து 1998,1999 மற்றும் 2009 ல் மூன்று முறையும் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதனையும் காண்கதொகு

மேற்கோள்கள்தொகு

  1. "யஷ்வந்த் சின்கா, a profile:நிதியமைச்சர், இந்திய அரசு". 2007-09-30 அன்று பார்க்கப்பட்டது. Unknown parameter |name= ignored (உதவி)
  2. "யஷ்வந்த் சின்கா நிதியமைச்சரானார், அத்வனி உள்துறை அமைச்சரானார் (இந்தியன் எக்ஸ்பிரஸ்)". 2007-09-30 அன்று பார்க்கப்பட்டது.[தொடர்பிழந்த இணைப்பு]
  3. "BBC News South Asia, Indian government reshuffled". 2007-09-30 அன்று பார்க்கப்பட்டது.
  4. "Detailed Profile: Shri Yashwant Sinha". Government: of India. 2016-03-04 அன்று மூலம் பரணிடப்பட்டது. 4 சூன் 2014 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=யஷ்வந்த்_சின்கா&oldid=3635957" இருந்து மீள்விக்கப்பட்டது