இந்திய இரும்புவழி அமைச்சர்களின் பட்டியல்
இந்திய இரும்புவழி அமைச்சர் என்பவர் இந்திய இரயில்வே அமைச்சகத்தின் தலைவராக பதவி வகிப்பவர். இந்திய இரும்புவழி அமைச்சர் இந்திய நடுவண் அரசின் ஆய அமைச்சர் ஆவார்.
{{{body}}} இந்திய இரும்புவழி அமைச்சர் | |
---|---|
தற்போது அஸ்வினி வைஷ்னவ் | |
உறுப்பினர் | இந்தியக் குடியரசின் 17வது அமைச்சரவை |
நியமிப்பவர் | குடியரசுத் தலைவர் பாரத பிரதமரின் வழிகாட்டுத்தலின் படி |
இருப்புப்பாதை அமைச்சர்களின் பட்டியல்
தொகுதொடருந்து அமைச்சர்கள் | ||||
---|---|---|---|---|
பெயர் | படம் | பதிவிக்காலம் | கட்சி | குறிப்பு |
ஜான் மத்தாய் | 1947 | காங்கிரசு | (முறையாக இரும்புவழி அமைச்சர் என அறிவிக்கப்படவில்லை) விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் இரும்புவழி நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்தார் | |
என். கோபாலசாமி அய்யங்கார் | 1948–1952 | காங்கிரசு | அரசுமயமாக்கப்பட்ட பல்வேறு தொடருந்து நிறுவனங்களை மண்டல இரயில்வேக்களாக சீரமைத்தார் | |
லால் பகதூர் சாஸ்திரி | 1952–1956 | காங்கிரசு | தொடருந்துகளின் விபத்துக்கு பொறுப்பேற்று 1956ல் பதவி விலகினார். | |
ஜெகசீவன்ராம் | 1956–1962 | காங்கிரசு | ||
சுவரண் சிங் | 1962 | காங்கிரசு | ||
கென்கல் அனுமந்தையா அல்லது ராம் சேவ் சிங்? | 1967 | காங்கிரசு | கெங்கல் அனுமந்தையா அமைச்சராக இருந்தார் என சில குறிப்புகள் கிடைக்கின்றன, சில குறிப்புகள் ராம் சேவ் சிங் 1966-1968 காலகட்டத்தில் அமைச்சராக இருந்தாரென சொல்கின்றன, இவர் ஆய அமைச்சராக இல்லாமல் இருந்திருக்கலாம் என கருதப்படுகிறது. | |
செ. மு. பூனச்சா | 1968 | காங்கிரசு | ||
பனம்பிள்ளை கோவிந்த மேனன் | 1969 | காங்கிரசு | ||
குல்சாரிலால் நந்தா | 1970–1971 | காங்கிரசு | கெங்கல் அனுமந்தையா 1971இல் சிலகாலம் அமைச்சராக இருந்திருக்கலாம் | |
டி. எ. பாய் | 1972–1973 | காங்கிரசு | ||
லலித் நாராயண் மிஸ்ரா | 1973–1975 | காங்கிரசு | 1975 சனவரி 2 அன்று சமசிதிப்பூரில் இரும்புவழித்தடத்தை தொடங்கி வைக்கும் போது குண்டு வைத்து கொல்லப்பட்டார். | |
கமலாபதி திரிபாதி | 1975–1977 | காங்கிரசு | ||
மது தண்டவதே | 1977–1979 | ஜனதா கட்சி | ||
கேடர் பாண்டே | 1980–1981 | காங்கிரசு | ||
அ. ப. அ. கானி கான் சௌத்திரி | (1981?) 1982–1984 | காங்கிரசு | ||
பன்சிலால் | 1984 | காங்கிரசு | சில அமைச்சகங்களும் அரசுத் துறைகளும் சீரமைக்கப்பட்டபோது சிறிது காலம் பொறுப்பேற்றார் | |
மாதவ்ராவ் சிந்தியா | 1984–1989 | காங்கிரசு | ||
ஜார்ஜ் பெர்னாண்டஸ் | 1989–1990 | ஜனதா தளம் | ||
ஜானேசுவர் மிசுரா | 1990–1991 | சார் அமைச்சராக சிறிது காலம் இருந்தார் | ||
செ. க. ஜாபர் செரிப் | 1991–1995 | காங்கிரசு | ||
சுரேசு கல்மாடி | 1995–1996 | காங்கிரசு | ||
அடல் பிகாரி வாஜ்பாய் | 1996 | பாஜக | 13 நாட்கள் மட்டுமே நீடித்த பாரதிய சனதா கட்சியின் ஆட்சியில் இத்துறையின் அமைச்சராக இருந்தார். அப்போது பிரதமராகவும் இவர் இருந்தார். | |
இராம் விலாசு பாசுவான் | 1996–1998 | ஜனதா தளம் (ஐக்கிய முன்னணி) | ||
நிதிசு குமார் | 1998–1999 | பாஜக (தேசிய ஜனநாயக கூட்டணி) | ||
மம்தா பானர்ஜி | 1999–2000 | பாஜக (தேசிய ஜனநாயக கூட்டணி) | முதல் பெண் இரும்புவழி அமைச்சர் | |
நிதிசு குமார் | 2001–2004 | பாஜக (தேசிய ஜனநாயக கூட்டணி) | ||
லாலு பிரசாத் யாதவ் | ]] | 2004–2009 | காங்கிரஸ் (ஐக்கிய முற்போக்குக் கூட்டணி) | |
மம்தா பானர்ஜி | 2009–2011 | காங்கிரஸ் (ஐக்கிய முற்போக்குக் கூட்டணி) | மம்தா பானர்ஜி மேற்கு வங்காள முதலமைச்சரானதும் மே 19, 2011 அன்று பதவியை விட்டு விலகினார். | |
முகுல் ராய் | 2011 | காங்கிரஸ் | மேற்கு வங்காள முதலமைச்சரானதும் மம்தா பானர்ஜி பதவி விலகியதும் இவர் இரும்புவழி அமைச்சராக யூலை 11, 2011 வரை தொடர்ந்தார். | |
மன்மோகன் சிங் | 2011 | காங்கிரசு | மன்மோகன் சிங், பிரதமர் பதவியுடன் சில காலம் இத்துறையை கவனித்துக்கொண்டார். | |
தினேசு திரிவேதி | 2011 - மார்ச்சு 14, 2012 | காங்கிரசு | 2012-2013 நிதியாண்டுக்கான பயணிகள் தொடருந்து கட்டணங்ளை உயர்த்தியதால் மம்தா பானர்ஜி பிரதமர் மன்மோகன் சிங்கை தொடர்பு கொண்டு இவரை நீக்கிவிட்டு முகுல் ராயை இத்துறை அமைச்சராக்கும் படி கேட்டுக்கொண்டார். | |
முகுல் ராய் | மார்ச் 14, 2012 - செப்டம்பர் 20, 2012 | காங்கிரஸ் | திரிணாமுல் காங்கிரசு கூட்டணியிலிருந்து விலகிவிட்டதால் இவர் பதவி விலகிவிட்டார். . | |
மன்மோகன் சிங் | 2012 செப்டம்பர் 20 முதல் செப்டம்பர் 22 வரை | காங்கிரசு | மன்மோகன் சிங், திரிணாமுல் காங்கிரசு கூட்டணியிலிருந்து விலகிவிட்டதால் அக்கட்சியின் முகுல் ராய் வகித்த அமைச்சரவை பொறுப்பை இவர் தற்காலிகமாக ஏற்றுள்ளார். | |
சி. பி. ஜோசி | 2012 செப்டம்பர் 22 - 16 ஜூன் 2013 | காங்கிரசு | தரைவழி போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சரான சி. பி. ஜோசி, கூடுதலாக இப்பொருப்பை கவனிப்பார்.[1] | |
மல்லிகார்ச்சுன் கர்கெ | - | 17 ஜூன் 2013 - 25 மே 2014 | காங்கிரசு | |
டி. வி. சதானந்த கௌடா | - | 26 மே 2014 - 9 நவம்பர் 2014 | பாஜக | |
சுரேசு பிரபு | 10 நவம்பர் 2014 - 3 செப்டம்பர் 2017 | பாஜக | ||
பியூஷ் கோயல் | 3 செப்டம்பர் 2017 முதல் – 7 ஜூலை 2021 வரை | பாஜக | முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வந்தே பாரத் எனும் நடுத்தர அதிவிரைவுத் தொடர்வண்டி அறிமுகம் செய்யப்பட்டது | |
அஸ்வினி வைஷ்னவ் | 7 சூலை 2021 முதல் – தற்போது வரை | பாஜக | முழுமையாக உள்நாட்டில் உருவாக்கப்பட்ட கவாச் என்னும் தானியங்கி ரயில் பாதுகாப்பு கருவி சோதனைக்கு பின் பயன்பாட்டுக்கு வந்தது |
மேலும் பார்க்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-11-16. பார்க்கப்பட்ட நாள் 2012-09-26.