லாலு பிரசாத் யாதவ்

பீகாரின் 20ஆவது முதலமைச்சர்

லாலு பிரசாத் யாதவ் (இந்தி: लालू प्रसाद यादव, பி. ஜூன் 11, 1948) இந்தியாவின் பீகார் மாநிலத்தின் ஒரு அரசியல்வாதி ஆவார். 4ஆம் மக்களவையில் இந்திய நடுவண் அரசு தொடருந்துத் துறை அமைச்சராகப் பணியாற்றினார். லாலு பிரசாத் யாதவ் இராஷ்டிரிய ஜனதா தளத்தைச் சேர்ந்தவர். 14ஆம் மக்களவையில் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 15ஆம் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட இவர் சரன் மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்றார்.லாலு பிரசாத் யாதவ் வழக்கின் மூலம் தன் முதல்வர் பதவியை இழக்க நேரிட்ட போது அவரின் மனைவியான ராப்ரி தேவியை முதல்வர் நாற்காலியில் அமரவைத்து ஆட்சி செய்தார். இந்திய வரலாற்றில் நஷ்டத்தில் இருந்த ரயில்வே துறையை லாபத்தில் இயக்கியது இவர் ரயில்வே அமைச்சராக இருந்த போது தான்.

லாலு பிரசாத் யாதவ்
இந்திய இரயில்வே அமைச்சர்
Member of the U.S. House of Representatives
from பீகார்
பதவியில்
24 மே 2004 – 23 மே 2009
பிரதமர்மன்மோகன் சிங்
முன்னையவர்நிதிஷ் குமார்
பின்னவர்மம்தா பானர்ஜி
தொகுதிசாரண்
20வது பீகார் முதல்வர்
பதவியில்
4 ஏப்ரல் 1995 – 25 ஜூலை 1997
முன்னையவர்குடியரசுத் தலைவர் ஆட்சி
பின்னவர்ராப்ரி தேவி
பதவியில்
10 மார்ச் 1990 – 28 மார்ச் 1995
முன்னையவர்ஜகந்நாத் மிஸ்ரா
பின்னவர்குடியரசுத் தலைவர் ஆட்சி
இந்தியா நாடாளுமன்றம்
for சாப்ரா
பதவியில்
24 மே 2004 – 22 மே 2009
முன்னையவர்ராஜீவ் பிரதாப் ரூடி
பின்னவர்தொகுதி பிரிக்கப்பட்டது
பதவியில்
2 டிசம்பர் 1989 – 13 மார்ச்1991
முன்னையவர்ரம்பஹதூர் சிங்
பின்னவர்லால் பாபு ராய்
பதவியில்
23 மார்ச் 1977 – 22 ஆகஸ்ட் 1979
முன்னையவர்ராம்சேகர் பிரசாத் சிங்
பின்னவர்ஸ்டாயா தியோ சிங்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புnative_name
11 சூன் 1948 (1948-06-11) (அகவை 76)
கோபால்கஞ்ச், பீகார், இந்தியா[1]
இறப்புnative_name
இளைப்பாறுமிடம்native_name
அரசியல் கட்சிஇராச்டிரிய ஜனதா தளம்
துணைவர்ராப்ரி தேவி
உறவுகள்தேஜ் பிரதாப் சிங் யாதவ் மருமகன்
பிள்ளைகள்தேஜஸ்வி யாதவ், தேஜ் பிரதாப் யாதவ், மிசா பாரதி உட்பட 9 குழந்தைகள்
பெற்றோர்குண்டன் ரே (தந்தை)
மராச்சியா தேவி (தாய்)
முன்னாள் கல்லூரிவணிகவியலில் இளங்கலை, பாட்னா பல்கலைக்கழகம்
இணையத்தளம்http://rjd.co.in/shri-lalu-prasad-yadav.html

வழக்கு

தொகு

1990 ஆம் ஆண்டு லாலு பிரசாத் முதல்வராக இருந்தபோது, போலி ரசீதுகள் தாக்கல் செய்து 37 கோடியே 70 லட்சம் ரூபாய் அளவிற்கு கால்நடைத் தீவன ஊழல் செய்ததாக லாலு பிரசாத் மீது வழக்கு தொடரப்பட்டது.அந்த வழக்கில் பல்வேறு கட்ட விசாரணைகளுக்குப் பின்னர் ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் 30 செப்டம்பர் 2013 அன்று லாலு குற்றவாளி என அறிவித்து தீர்ப்பு வழங்கியது[2] இவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை கிடைத்துள்ளது, இதனால் இவர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் பதவியை இழந்தார்.[3][4]

தேர்தலில் போட்டியிடும் தகுதி

தொகு

லாலு பிரசாத் யாதவ் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டாலும், தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி என்ற அடிப்படையில் அவர் ஆறு ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது.[5]

இதனையும் காண்க

தொகு

மேற்குறிப்புகள்

தொகு
  1. "Profile: Lalu Prasad Yadav". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா இம் மூலத்தில் இருந்து 22 October 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131022023958/http://timesofindia.indiatimes.com/home/specials/Profile-Lalu-Prasad-Yadav/articleshow/2015298.cms. 
  2. "சிறையில் அடைக்கப்பட்டார் லாலு பிரசாத்!". Archived from the original on 2013-10-02. பார்க்கப்பட்ட நாள் 2013-09-30.
  3. Lalu Prasad gets 5-year jail term in fodder scam case, loses Lok Sabha seat
  4. "எம்.பி.க்களான லாலு பிரசாத் யாதவ், ஜகதீஷ் ஷர்மா பதவி நீக்கம்". பி பி சி. பார்க்கப்பட்ட நாள் 17 சனவரி 2014.
  5. "கால்நடை தீவன ஊழல் வழக்கு: லாலுவுக்கு ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்". தினமணி. பார்க்கப்பட்ட நாள் 17 சனவரி 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லாலு_பிரசாத்_யாதவ்&oldid=3926326" இலிருந்து மீள்விக்கப்பட்டது