இராச்டிரிய ஜனதா தளம்

இந்திய அரசியல் கட்சி
(இராஷ்டிரிய ஜனதா தளம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இராஷ்டிரிய ஜனதா தளம் ஓர் இந்திய அரசியல் கட்சியாகும். இது 1997 ஆம் ஆண்டு லாலு பிரசாத் யாதவால் தொடங்கப்பட்டது. இதன் சின்னம் கூண்டு விளக்கு (Lantern) ஆகும். $250 மில்லியன் மாட்டு தீவன ஊழலில் தொடர்புடையதால் அப்போதய பீகாரின் முதல்வரும், ஜனதா தளத்தின் முன்னாள் தலைவருமான லாலு பிரசாத் யாதவை மாட்டுத் தீவன ஊழல் தொடர்பாக ஜனதா தளத்தின் தலைவர் சரத் யாதவ் கட்சியை விட்டு 1987ல் நீக்கினார்.[1] இதன் காரணமாகவே லாலு பிரசாத் யாதவ் இராஷ்டிரிய ஜனதா தளத்தைத் தொடங்கினார். பீகார், ஜார்கண்ட், மணிப்பூரில் மாநிலக் கட்சியாக அங்கீகரிக்கப்பட்ட இராஷ்டிரிய ஜனதா தளம், வடகிழக்கு மாநிலங்களில் போதிய வாக்குகள் பெற்றதால் 2008இல் தேசியக் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டது.

இராஷ்டிரிய ஜனதா தளம்
தலைவர்லாலு பிரசாத் யாதவ்
தொடக்கம்1997
தலைமையகம்13, வி பி அவுஸ், இராஃபி மார்க், புது தில்லி - 110001
கொள்கைபெருந்திரள் வாதம் (பரப்பியம்)
அரசியல் நிலைப்பாடுநடுவம்
தேர்தல் சின்னம்
RJD party symbol
இணையதளம்
www.rashtriyajanatadal.com
இந்தியா அரசியல்

2004 தேர்தலில் 24 நாடாளுமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்ற இராஷ்டிரிய ஜனதா தளம் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் அங்கம் வகித்தது, இதன் தலைவர் லாலு பிரசாத் யாதவ் இரயில்வே துறை அமைச்சராகப் பதவி வகித்தார்.

கட்சி அங்கீகாரம்

தொகு

இராச்டிரிய ஜனதா தளம் அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சியாகும். ஜூலை 29, 2010 அன்றைய தேர்தல் ஆணையத்தின் ஆணைப்படி இதற்கான தேசிய கட்சி என்ற அங்கீகாரம் விலக்கிக் கொள்ளப்படுகிறது. இக்கட்சிக்காக ஒதுக்கப்பட்ட லாந்தர் சின்னத்தை பீகார், ஜார்கண்ட், மணிப்பூர் மாநிலங்களில் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது, ஏனெனில் அந்த மாநிலங்களில் இது மாநில கட்சியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது[2][3].

மேற்கோள்கள்

தொகு
  1. http://www.indiastudychannel.com/india/parties/9-RJD.aspx[தொடர்பிழந்த இணைப்பு]
  2. தேர்தல் ஆணையத்தின் ஆணை
  3. "தட்ஸ்தமிழ் செய்தி". Archived from the original on 2010-08-02. பார்க்கப்பட்ட நாள் 2010-07-31.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராச்டிரிய_ஜனதா_தளம்&oldid=4034642" இலிருந்து மீள்விக்கப்பட்டது