சரத் யாதவ்
சரத் யாதவ் (Sharad Yadav), ஐக்கிய ஜனதா தளக் கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதி. தற்சமயம் இந்திய நாடளுமன்ற மேலவையான மாநிலங்களவையில் பிகார் மாநில உறுப்பினராக உள்ளார். இந்திய மக்களவைக்கு ஏழுமுறையும், மாநிலங்களவைக்கு இருமுறையும் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஐக்கிய ஜனதா தளம் உருவான காலத்திலிருந்து அக்கட்சியின் தேசியத் தலைவராக உள்ளார்[1].
சரத் யாதவ் | |
---|---|
![]() | |
ஐக்கிய ஜனதா தளக் கட்சித் தலைவர் | |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | 1 சூலை 1947 அக்மௌ கிராமம், ஹோஷன்காபாத் மாவட்டம், மத்தியப் பிரதேசம் |
அரசியல் கட்சி | ஐக்கிய ஜனதா தளம் |
வாழ்க்கை துணைவர்(கள்) | டாக்டர். ரேகா யாதவ் |
இருப்பிடம் | புது தில்லி |
படித்த கல்வி நிறுவனங்கள் | ஜபல்பூர் பொறியியல் கல்லூரி |
பணி | அரசியல்வாதி |
சமயம் | இந்து சமயம் |
இணையம் | www.sharadyadavjdu.in |
தொடக்ககால வாழ்க்கைதொகு
மத்தியப் பிரதேசத்தில் கோசங்காபாத் மாவட்டத்தின் அக்மௌ கிராமத்தில், ஒரு நடுத்தரக் குடும்பத்தில் ஜூலை 1, 1947 இல் பிறந்தார். இராபர்ட்சன் கல்லூரியிலும், ஜபல்பூர் பொறியியல் கல்லூரியிலும் கல்வி பயின்றார். கல்லூரி வாழ்க்கையில், டாக்டர் ராம் மனோகர் லோகியாவின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு இளைஞரணித் தலைவராகச் செயற்பட்டார்; பல பெரியளவு இயக்கங்களில் பங்கேற்றார்; 1969-70, 1972, 1975 களில் மிசாவின் கீழ் கைது செய்யப்பட்டார்; மண்டல் ஆணைக்குழுவின் பரிந்துரைகளைச் செயற்படுத்துவதில் முக்கியப் பங்கு வகித்தார்.
நாடாளுமன்றத் தொகுதிதொகு
முதன்முறையாக 1974 இல் ஜபல்பூர் தொகுதியின் நாடளுமன்ற மக்களவை உறுப்பினராகத் தேர்தெடுக்கப்பட்டார். மீண்டும் அதே தொகுதியிலிருந்து 1977 இல் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1989 இல் பிகாரின் பத்வான் மக்களவைத் தொகுதிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 1991 இலிருந்து பிகாரின் மதேபுரா மக்களவைத் தொகுதியிலிருந்து போட்டியிட்டு வெற்றி பெற்று வந்தார்.[2] 2014 மக்களவைத் தேர்தலில் மதேபுரா மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டுத் தோற்றுப் போனார்.
வகித்த பதவிதொகு
ஆண்டு | வகித்த பதவி |
---|---|
1974 | இடைத் தேர்தலில் 5 வது மக்களவைக்குத் தேர்வு |
1977 | 6வது மக்களவைக்குத் தேர்வு (இரண்டாம் முறை) யுவ ஜனதா தளத் தலைவர் |
1978 | லோக் தளப் பொதுச்செயலாளர் யுவ லோக் தளத் தலைவர் |
1986 | மாநிலங்களவைக்குத் தேர்வு |
1989 | 9வது மக்களவைக்குத் தேர்வு (மூன்றாம் முறை) |
1989-97 | லோக் தளப் பொதுச்செயலாளர் ஜனதா தள நாடாளுமன்ற போர்டு தலைவர் |
1989-90 | நடுவண் ஆய அமைச்சர், ஜவுளி மற்றும் உணவு பதனிடும் தொழில் |
1991 | 10வது மக்களவைக்குத் தேர்வு (நான்காம் முறை) பொதுக்கணக்குக் குழு உறுப்பினர் |
1993 | ஜனதா தள நாடாளுமன்றக் கட்சித் தலைவர் |
1995 | ஜனதா தள செயற்தலைவர் |
1996 | 11வது மக்களவைக்கு மீண்டும் தேர்வு (ஐந்தாவது முறை); நிதிக் குழுத் தலைவர் |
1997 | ஜனதா தளத் தலைவர் |
1999 | 13வது மக்களவைக்குத் தேர்வு (ஆறாவது முறை) |
அக்டோபர் 13, 1999 - ஆகஸ்டு 31, 2001 | நடுவண் ஆய அமைச்சர், உள்நாட்டு விமானப் போக்குவரத்து |
செப்டம்பர் 1, 2001- ஜூன் 30, 2002 | நடுவண் தொழிலாளர் ஆய அமைச்சர் |
ஜூலை 1, 2002 - மே 15 2004 | நடுவண் ஆய அமைச்சர், நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது விநியோகம் |
2004 | மாநிலங்களவைக்குத் தேர்வு (இரண்டாவது முறை) வணிக ஆலோசனைக் குழு உறுப்பினர் நீர்வளக் குழு உறுப்பினர் பொது நோக்கங்கள் குழு உறுப்பினர் கலந்தாய்வுக் குழு உறுப்பினர் உள்துறை அமைச்சகம் |
2009 | 15வது மக்களவைக்குத் தேர்வு (ஏழாவது முறையாக) |
ஆகஸ்டு 31, 2009 | நகர்ப்புற மேம்பாட்டுக் குழுத் தலைவர் |
மேற்கோள்கள்தொகு
- ↑ Sanskarshan Thakur (2014). Single Man. HarperCollins Publishers India. பக். Epilogue. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9789350297780. https://books.google.co.in/books?id=mdRHAwAAQBAJ&pg=PT98&dq=sharad+yadav&hl=en&sa=X&ei=aMVsVfOXD4GXuATe4ICQDQ&ved=0CCIQ6AEwATgK#v=onepage&q=sharad%20yadav&f=false.
- ↑ "Madhepura Parliamentary Constituency". http://www.sharadyadav.com/p/constituency.html.