ஜான் மத்தாய்
ஜான் மத்தாய் (John Matthai) (1886-1959) இந்தியாவின் முதல் இரயில்வே அமைச்சராகவும், பின்னர் 1948இல் இந்தியாவின் முதல் வரவு செலவு திட்ட அறிக்கையை வழங்கிய இந்தியாவின் நிதியமைச்சராகவும் பணியாற்றிய பொருளாதார நிபுணராவார். மத்தாய் ஒரு பழமைசார் இந்தியக் குடும்பத்தில் பிறந்து சென்னைப் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றார். இவர் 1922 முதல் 1925 வரை சென்னைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும், அதன் தலைவராகவும் பணியாற்றினார். [1] சமுதாயத்திற்கு இவரது மனைவி அச்சம்மா மத்தாய் செய்த பங்களிப்புகளுக்காக இந்திய அரசு 1954 ஆம் ஆண்டில் இந்திய குடிமகன்களுக்கான நான்காவது மிக உயர்ந்த விருதான பத்மசிறீ விருதை வழங்கி கௌரவித்தது.[2]
ஜான் மத்தாய் | |
---|---|
![]() | |
John Matthai in 1949 | |
இந்தியாவின் நிதியமைச்சர் | |
பதவியில் 1949–1950 | |
பிரதமர் | ஜவகர்லால் நேரு |
முன்னவர் | ஆர். கே. சண்முகம் |
பின்வந்தவர் | சி. து. தேஷ்முக் |
இரயில்வே அமைச்சர் | |
பதவியில் 1947–1948 | |
பிரதமர் | ஜவகர்லால் நேரு |
பின்வந்தவர் | என். கோபாலசாமி அய்யங்கார் |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | கோழிக்கோடு, சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும் (இப்போது கோழிக்கோடு, கேரளா, இந்தியா) | 10 சனவரி 1886
இறப்பு | 1959 |
தேசியம் | பிரித்தன் இந்தியன் (1886-1947) இந்தியா (1947-59) |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
படித்த கல்வி நிறுவனங்கள் | சென்னை கிறித்துவக் கல்லூரி |
சமயம் | கிருத்துவம் |
நிதியமைச்சர் தொகு
இவர் இந்தியாவின் நிதி மந்திரியாக இருந்த போது இருமுறை இந்தியாவின் வரவு செலவு திட்ட அறிக்கையை சமர்ப்பித்தார். 1950 வரவு செலவு திட்ட அறிக்கைக்குப் பிறகு திட்டக் குழுவிற்கும், பி. சி. மகாலனோபிசுவிற்கும் அதிக அதிகாரம் வழங்கப்பட்டதை எதிர்த்து தனது நிதியமைச்சர் பதவியை விட்டு வெளியேறினார். [3]
வகித்தப் பதவிகள் தொகு
1955 ஆம் ஆண்டில் பாரத ஸ்டேட் வங்கியின் முதல் தலைவராக இருந்தார். 1956 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்தியாவின் முதல் சுயாதீன பொருளாதார கொள்கை நிறுவனமான புதுதில்லியில் உள்ள தேசிய செயல்முறைப் பொருளியல் ஆய்வுக் குழுவின் (என்.சி.ஏ.இ.ஆர்) நிர்வாகக் குழுவின் தலைவராக இருந்தார். 1955 முதல் 1957 வரை மும்பை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும், பின்னர் 1957 முதல் 1959 வரை கேரள பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தராகவும் பணியாற்றினார். இவரது மருமகன் வர்கீஸ் குரியன் பொதுவாக இந்தியாவின் வெண்மை புரட்சியின் சிற்பியாக அங்கீகரிக்கப்படுகிறார். [4]
அங்கீகாரம் தொகு
இவரது நினைவாக திருச்சூரில் இவரது குடும்பத்தினர் நன்கொடையளித்த பெரிய நிலத்தில் முனைவர் ஜான் மத்தாய் மையம், [5] அமைக்கப்பட்டு இவரது நினைவாக பெயரிடப்பட்டது. இவரது மனைவி அச்சம்மா மத்தாய் ஒரு இந்திய சமூக சேவகரும், பெண்கள் உரிமை ஆர்வலருமாவார். [6]
விருதுகள் தொகு
விக்டோரியா மகாராணியால் நிறுவப்பட்ட வீரவணக்கத்தின் ஒரு வரிசையாக ஜான் மத்தாய் 1934 ஆம் ஆண்டில் இந்திய இராச்சியத்தின் மிகச்சிறந்த ஆணை என்று கௌரவிக்கப்பட்டார். [7] 1959 இல் இவருக்கு பத்ம விபூசண் விருது வழங்கப்பட்டது. [8] தேசிய செயல்முறைப் பொருளியல் ஆய்வுக் குழுவின் நிர்வாகக் குழுவின் தலைவரான நந்தன் நிலேகனி மற்றும் நிலேகனி ஆதரவோடு, 2019 ஆம் ஆண்டில் ஜான் மத்தாயை கௌரவித்தார். தேசிய செயல்முறைப் பொருளியல் ஆய்வுக்குழுவின் புதிய அலுவலகக் கட்டிடத்திற்கு புதுதில்லியில் உள்ள அதன் வளாகத்தில் ஜான் மத்தாய் கோபுரம் என்று பெயரிட்டப்பட்டது.
குறிப்புகள் தொகு
- ↑ "Archived copy" இம் மூலத்தில் இருந்து 2008-10-29 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20081029025651/http://www.unom.ac.in/eco1.html.
- ↑ "Padma Shri". Padma Shri. 2015 இம் மூலத்தில் இருந்து 15 November 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/6U68ulwpb?url=http://mha.nic.in/sites/upload_files/mha/files/LST-PDAWD-2013.pdf.
- ↑ "The Concept of Collective Ministerial Responsibility in India- Theory and Practice" (in en-US). 2014-01-02 இம் மூலத்தில் இருந்து 2019-04-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190404172547/https://rostrumlegal.com/journal/the-concept-of-collective-ministerial-responsibility-in-india-theory-practice/.
- ↑ "The Nephew Of Our First Railway Minister Was The Architect Of 'White Revolution'" (in en-US). 2016-06-14. https://thelogicalindian.com/rewind/the-nephew-of-our-first-railway-minister-was-the-architect-of-white-revolution/.
- ↑ "Dr. John Matthai Centre" இம் மூலத்தில் இருந்து 2008-02-19 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080219015106/http://www.jmctsr.org/.
- ↑ Bela Rani Sharma (1998). "Women's Rights and World Development". Sarup & Sons. https://books.google.ae/books?id=qnJ9J9UygR0C&pg=PA304&lpg=PA304&dq=Achamma+Mathai&source=bl&ots=LdOVDIHJRA&sig=5dHrxfKLYCruqHjgH0DXB2YEWhk&hl=en&sa=X&ei=X0EaVcXaGovbU-uagdAB&redir_esc=y#v=onepage&q=Achamma%20Mathai&f=false.
- ↑ London Gazette, 4 June 1934
- ↑ "Padma Vibhushan Awardees". The National Portal of India இம் மூலத்தில் இருந்து 2012-02-29 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120229165446/http://india.gov.in/myindia/padmavibhushan_awards_list1.php?start=230.
வெளி இணைப்புகள் தொகு
- Dr. John Matthai Centre பரணிடப்பட்டது 2008-02-19 at the வந்தவழி இயந்திரம்