சென்னை கிறித்துவக் கல்லூரி
சென்னைக் கிறித்தவக் கல்லூரி (Madras Christian College) சென்னையிலுள்ள கலைக்கல்லூரிகளில் ஒன்று. 1837-ஆம் ஆண்டு துவக்கப்பட்ட இக்கல்லூரி ஆசியாவின் பழம்பெரும் கல்லூரிகளில் ஒன்று. தாம்பரத்தில் இக்கல்லூரியின் வளாகம் அமைந்துள்ளது.[1] இது சென்னைப் பல்கலைக்கழகத்துடன் இணைவு பெற்றக் கல்லூரியாகும். இந்தியா டுடே இதழின் கணிப்பின்படி 2007 முதல் இந்தியாவில் உள்ள கல்லூரிகளில் கலை அறிவியல் மற்றும் வணிகவியல் துறைகளில் தலைசிறந்த பத்து கல்லூரிகளில் ஒன்றாக இடம் பெற்றுள்ளது.[2]
குறிக்கோளுரை | In Hoc Signo இதனைக் கொடியாகக் கொண்டு, நீ வெற்றி பெறுவாய் |
---|---|
வகை | தனியார் சிறுபான்மை கல்வி நிறுவனம் |
உருவாக்கம் | 1837 |
முதல்வர் | முனைவர். ஆர். டபிள்யு. அலெக்சாண்டர் ஜேசுதாசன் |
கல்வி பணியாளர் | 220 (முழு நேரம்) |
மாணவர்கள் | 8500 |
அமைவிடம் | , , |
வளாகம் | புறநகர் (தாம்பரம்), 375 ஏக்கர் |
இணையதளம் | mcc.edu.in |
சென்னைக் கிருத்துவக் கல்லூரியில் 6 மாணவ மாணவிகள் தங்கும் விடுதி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் இவ்விடுதிகளை "இல்லம்" என அழைப்பர். சேலையூர் இல்லம், புனித தோமையார் இல்லம், பிஷப் ஹீபர் இல்லம், மார்ட்டின் இல்லம், மார்கரெட் இல்லம் மற்றும் பார்ன்ஸ் இல்லம் என 6 இல்லங்கள் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு என தனித் தனியாக இயங்கி வருகிறது.
வெளி இணைப்புகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "The Hotbed of Student Protests". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2017-09-25.
- ↑ "Best SCIENCE Colleges 2021: List of Top SCIENCE Colleges 2021 in India - Page3". https://www.indiatoday.in/bestcolleges/2021/ranks/1836832?page=3.
- ↑ "100, and counting". 2 August 2014. http://www.thehindu.com/news/cities/chennai/chennai-colleges-100-and-counting/article6273124.ece.